ராதிகா சரத்குமாரின் பரிதாப நிலை.. சிறை

காசோலை மோசடி வழக்கில் நடிகர் சரத்குமார், அவரது மனைவி ராதிகா ஆகியோருக்கு சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. 7 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சரத்குமாருக்கு தலா ஓராண்டும், 2 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ராதிகாவுக்கு தலா ஓராண்டும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேல்முறையீடு செய்வதற்காக, சரத்குமாரின் சிறை தண்டனையை நீதிமன்றம் நிறுத்தி வைத்து உள்ளது. சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும் நடிகருமான சரத்துமார், அவரது மனைவி ராதிகா மற்றும் லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள மேஜிக் பிரேம்ஸ் நிறுவனத்தின் சார்பில், கடந்த 2014ம் ஆண்டு, 'ரேடியன்ஸ் மீடியா' நிறுவனத்திடம் இருந்து ரூ.1.5 கோடியை காசோலை மூலமாகவும், ரூ.50 லட்சத்தை ரொக்கமாகவும் கடனாக பெற்றுள்ளனர். இதற்காக சரத்குமார் தரப்பில் 7 காசோலைகள் வழங்கப்பட்டன. இந்த காசோலைகளை வங்கியில் செலுத்தியபோது, கணக்கில் பணம் இல்லை என…

ஓட்டு போடாத விஜயகாந்த்: தே.மு.தி.க.,வினர் வருத்தம்

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், ஓட்டுப் போடாததால், அக்கட்சி வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் விரக்தி அடைந்துள்ளனர். விருகம்பாக்கம், காவேரி பள்ளியில், நேற்று காலை, 7:00 மணிக்கு, அவரது மனைவி பிரேமலதா மட்டும் வந்து ஓட்டளித்தார். விஜயகாந்தும், தன் மகன்களும் பின்னர் வந்து ஓட்டளிப்பர் என, பிரேமலதா கூறிச் சென்றார். பிற்பகலில், விஜயகாந்தின் மகன்கள் விஜயபிரபாகரன், சண்முக பாண்டியன் வந்து ஓட்டளித்தனர். விஜயகாந்த், மாலையில் வந்து ஓட்டளிப்பார்' என, விஜய பிரபாகரன் கூறினார். இதனால், காலை முதல் இரவு, 7:00 வரை, விஜயகாந்தின் வருகையை எதிர்பார்த்து, தே.மு.தி.க., நிர்வாகிகள், தொண்டர்கள் காத்திருந்தனர்; கடைசி வரை, விஜயகாந்த் வரவில்லை. இதனால் அவர்கள் விரக்தி அடைந்தனர்

வாக்களிக்கவில்லையா? – சமுத்திரக்கனி விளக்கம்

வாக்களிக்கவில்லை என்று வெளியான செய்திக்கு சமுத்திரக்கனி மறுப்பு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நேற்று (ஏப்ரல் 6) சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 7 மணிக்கு முடிந்தது. ரஜினி, கமல், விஜய், அஜித் தொடங்கி பல்வேறு திரையுலக பிரபலங்கள் தங்களுடைய வாக்குகளைப் பதிவு செய்தார்கள். பல்வேறு திரையுலக பிரபலங்கள் வாக்களித்துவிட்டு, கையில் மையுடன் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார்கள். இந்தத் தேர்தலில் வாக்களிக்காத பிரபலங்கள் பட்டியலைப் பலரும் வெளியிட்டார்கள். அதில் சமுத்திரக்கனியின் பெயரும் இடம்பெற்றது. இது தொடர்பாக சமுத்திரக்கனி வீடியோ வடிவில் விளக்கமொன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: "நான் வாக்களிக்கவில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். காலை 6:55 மணிக்கு நடந்தே சென்று நானும் என் மனைவியும் வாக்கைச் செலுத்தினோம். முதலில் வாக்களிக்கும் மெஷின் வேலை செய்யவில்லை. அதைச் சரி…

கொரோனா தடுப்பூசி பக்கவிளைவால் வாக்களிக்காத பார்த்திபன்..

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நேற்று நடைபெற்ற நிலையில் நடிகர் பார்த்திபன் வாக்களிக்கவில்லை. தேர்தலுக்கு முந்தைய நாள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தி ட்வீட் செய்திருந்தார். ஆனால், அடுத்த நாள் அவரே வாக்களிக்கவில்லை. இது குறித்து இன்று காலை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: "வணக்கமும் நன்றியும்! ஜனநாயக கடமையை சீராக செய்த சிறப்பானவர்களுக்கு! வருத்தமும், இயலாமையும். இரண்டாம் தவணை COVID-க்கான தடுப்பூசி எடுத்துக் கொண்ட எனக்கு திடீரென ஏற்பட்ட ஒவ்வாமையில் கண், காது, முகம் முழுவதும் வீங்கிவிட்டது. டாக்டருக்கு போட்டோ அனுப்பியே மருத்துவம் செய்துகொண்டேன். எனவே, தடுப்பூசி அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும். மிகச் சிலருக்கு மட்டுமே இது போன்ற reactions. அதுவும் எனக்கு ஏற்keனவே allergy issues இருந்ததால் மட்டுமே trigger ஆனது.என் வருத்தம் அது நேற்றாகிப் போனதில்..." என்று…

நடிகை கத்ரினா கைஃபுக்கு கொரோனா பாதிப்பு உறுதி

பாலிவுட் நடிகை கத்ரினா கைஃபுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்த சூழலில் பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாருக்கு நேற்று முன் தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து அக்‌ஷய் குமார் அவரது மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பாலிவுட் நடிகை கத்ரினா கைஃபுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “நான் எடுத்துக்கொண்ட கொரோனா பரிசோதனையில் எனக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உடனடியாக என்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். எனது மருத்துவர்களின் ஆலோசனையின் கீழ் அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளையும் பின்பற்றுகிறேன். கடந்த சில தினங்களாக என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் உடனடியாக தங்களை பரிசோதித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்கள்…

11 இஸ்லாமிய அமைப்புக்களுக்கு தடை !

அடிப்படைவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய 11 இஸ்லாமிய அமைப்புக்களை தடை செய்ய சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா அனுமதி வழங்கியுள்ளார். சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன இதனை தெரிவித்தார். குறித்த அமைப்புக்கள் கீழே...... 1. ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் 2.சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் 3. ஶ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் 4. அகில இலங்கை தவ்ஹீத் ஜமாஅத் 5. ஜமியதுல் அன்சாரி சுன்னத்துல் மொஹொமதியா 6. தாருல் அதர் @ ஜாமிஉல் அதர் 7. இலங்கை இஸ்லாமிய மாணவர் சங்கம் 8. ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு 9. AL-Qaeda அமைப்பு 10. Save the pearls அமைப்பு 11. Super Muslim அமைப்பு