சிவகுமார், சூர்யா, கார்த்தி வாக்களித்தனர்

சிவகுமார் தனது குடும்பத்தினருடன் தி.நகரில் தனது வாக்கினைச் செலுத்தினார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. சரியாக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 300 கம்பெனி துணை ராணுவப் படையினர் உள்பட 1 லட்சத்து 58 ஆயிரத்து 263 வீரர்கள் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் 3,998 வேட்பாளர்களும், கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் 12 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
திரையுலக பிரபலங்கள் பலரும் காலை 7 மணிக்கே முதல் நபராக வந்து வாக்களித்தனர். தி.நகரில் உள்ள இந்தி பிரச்சார சபாவில் சிவகுமார் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். அவருடன் சூர்யா, கார்த்தி, 2டி நிறுவனத்தைச் சேர்ந்த ராஜசேகர் பாண்டியன் ஆகியோரும் சிவகுமாருடன் வந்திருந்தார்கள்.
சிவகுமார், சூர்யா, கார்த்தி மூவருமே வரிசையில் நின்று வாக்களித்தார்கள். அப்போது பலரும் அவர்களைப் புகைப்படம் எடுத்தார்கள். பின்பு வாக்களித்துவிட்டு வெளியே வரும் போது, மை வைக்கப்பட்ட விரலை உயர்த்திக் காண்பித்தார்கள்.

Related posts