ரியூப் தமிழ் டென்மார்க், ஊடக அறிக்கை

சிறீலங்காவில் தமிழ் ஊடகவியலாளர்கள் இருவர் இன்று 29.03.2021 அதிகாலை 05.30 மணிக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்கள். மனித உரிமைகள் கவுண்சில் எடுத்த தீர்மானத்திற்கு பிறகு சிறீலங்கா அரசு அப்பாவி தமிழ் மக்களை மிரட்டி கைது செய்து பொய் வழக்குகளை மேலும் மோசமாக ஜோடிக்க ஆரம்பித்துள்ளது.

இன்று அதிகாலை இலங்கையின் வடபுலத்தே 712 நாவலர்வீதி யாழ்ப்பாணம் இருக்கும் ரியூப்தமிழ் காரியாலயம் பயங்கரவாத படைப்பிரிவினரலால் சுற்றி வளைக்கப்பட்டது. அதன் இலங்கை நிர்வாகி டிவனியா நிலுசினி மற்றும் முன்னணி ஊடகவியலாளர் யுவானின் விமல்ராஜ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டார்கள். இவர்கள் பயங்கவாத சிறப்பு படையினரால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள்.

மனித உரிமைகள் கவுண்சில் தீர்மானத்தை நிராகரித்த சிறீலங்கா அரசு இப்போது தமிழ் மக்களுக்கு எதிராக மீண்டும் தனது நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளமைக்கு இது நல்ல உதாரணமாக இருக்கிறது.

ரியூப் தமிழ் என்பது டென்மார்க்கை தலைமையகமாகக் கொண்டு செயற்படும் ஊடகமாகும். அதனுடைய இலங்கை காரியாலய பணிகள் இப்போது முடக்கப்பட்டுள்ளன. மனித உரிமைகள் கவுண்சிலில் சிறீலங்காவிற்கு எதிராக வாக்களித்த நாடுகளுக்கு எதிராக இச்செயல்கள் ஆரம்பித்துள்ளன. டென்மார்க் எதிராக வாக்களித்தது குறிப்பிடத்தக்கது. டென்மார்க்கின் கருத்து சுதந்திரத்திற்கு எதிராக திரும்பியிருக்கிறது சிறீலங்கா காரணம் டென்மார்க் ஊடகம் ஒன்றிற்கு விழுந்துள்ள அடி இதுவாகும்.

கைதான இருவருக்கும் மேல் ஏற்கெனவே பல பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளன. ஆனால் இப்போதோ பயங்கரவாத தடுப்பு பிரிவினர் என்ற போர்வையில் மிகவும் ஆபத்தான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புலிகள் தலைவர் வே. பிரபாகரனின் பெயரை உச்சரித்தார்கள் என்பது இவர்கள் மீதான குற்றச்சாட்டாகும்.

போருக்கு பின்னரும் சிறீலங்காவில் மனித உரிமை மீறல்கள் மோசமாக நடைபெறுவதாக மனித உரிமைகள் கவுண்சில் சுட்டிக்காட்டினாலும் அதைவிட வேகமாக மனித உரிமை மீறல்கள் ஜெனீவா தீர்மானத்தின் பின் ஆரம்பித்துள்ளன. ஜெனீவா தீர்மானம் சிறீலங்கா அரசை கோபப்படுத்தி அந்த கோபத்தை அதிகாரமற்ற தமிழ் மக்கள் மீது பாவிக்க ஆரம்பித்துள்ளது. இந்த கைதுகள் மேலும் தொடரும் என்று மக்கள் பீதியுடன் இருக்கிறார்கள். இந்த செயல் ஒட்டு மொத்த நாட்டையும் பீதியில் தள்ளியுள்ளது.

தகவல் :
ரியூப்தமிழ்
712 நாவலர்வீதி
யாழ்ப்பாணம்
இலங்கை

Related posts