‘உழைக்கும் கைகள்’ : நாமக்கல் எம்.ஜி.ஆர்.

விவசாயி’ படத்தில் சொன்னவர் எம்.ஜி.ஆர். அவருக்குப்பின், அவரளவுக்கு விவசாயிகளின் பிரச்சினைகளை யாரும் முழுமையாக திரைப்படத்தில் சொன்னதில்லை. அக்கறையாக காட்டவில்லை.

“உணவு வழங்கும் மண்ணின் மைந்தர்களான விவசாயிகள் பற்றிய கருத்துகளை, ‘விவசாயி’ படத்தில் சொன்னவர் எம்.ஜி.ஆர். அவருக்குப்பின், அவரளவுக்கு விவசாயிகளின் பிரச்சினைகளை யாரும் முழுமையாக திரைப்படத்தில் சொன்னதில்லை. அக்கறையாக காட்டவில்லை. அந்த குறையை போக்கும் வகையில், ‘உழைக்கும் கைகள்’ என்ற படத்தை உருவாக்கி இருக்கிறோம்’’ என்கிறார், நாமக்கல் எம்.ஜி.ஆர்.

இந்த படத்தை தயாரித்து இருப்பவர் கே.சூர்யா. இதில் கதாநாயகனாக எம்.ஜி.ஆர். சாயலில் இருக்கும் நாமக்கல் எம்.ஜி.ஆர். நடித்துள்ளார். கதாநாயகியாக கிரண்மயி மற்றும் டைரக்டர் செந்தில்நாதன், ஜாகுவார் தங்கம், தமிழ்நாடு மேடை கலைஞர்கள் சங்க தலைவர் பிரேம்நாத் ஆகியோர் நடித்துள்ளனர்.

தென்காசி, குற்றாலம், நாமக்கல், ஆண்டிப்பட்டி, போடிநாயக்கனூர் ஆகிய இடங்களில் படம் வளர்ந்துள்ளது.

Related posts