‘டாக்டர்’ திரைப்படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்படுவதாக அறிவிப்பு

தேர்தல் காரணமாக ‘டாக்டர்’ திரைப்படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்படுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள, ‘டாக்டர்’ திரைப்படம் வரும் மார்ச் 26 ஆம் தேதியில் ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தை, ‘கோலமாவு கோகிலா’ திரைப்படத்தின் இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார். அனிரூத் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளிவைப்பது குறித்து படக்குழுவினர் ஆலோசனை மேற்கொண்டு வந்தனர்.

இதையடுத்து ‘டாக்டர்’ படத்தின் தயாரிப்பு நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ளதால் ‘டாக்டர்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் படம் வெளிவந்தால் சரியாக இருக்காது என்பதால் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாகவும், விரைவில் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts