ரூ. 650 கோடிக்கும் மேல் நிதி முறைகேடு கண்டுபிடிப்பு

நடிகை டாப்ஸி இந்தி திரைப்பட இயக்குநா் அனுராக் காஷ்யப் உள்ளிட்டோரின் வீடு, அலுவலகங்களில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில் ரூ. 650 கோடிக்கும் மேல் நிதி முறைகேடு நடைபெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2011-ஆம் ஆண்டு இந்தி திரைப்பட இயக்குனர் அனுராக் காஷ்யப், இயக்குநரும் தயாரிப்பாளருமான விக்ரமாதித்ய மோட்வானே, தயாரிப்பாளா் விகாஸ் பஹல், தயாரிப்பாளரும் விநியோகஸ்தருான மது மன்டோனா ஆகியோரால் பேண்டம் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்பட்டது. கடந்த 2018-ஆம் ஆண்டு அந்த நிறுவனம் மூடப்பட்ட நிலையில், அந்த நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாகப் புகாா் எழுந்தது. இதுதொடா்பாக வருமான வரித் துறையினா் விசாரணை மேற்கொண்டனா். மேலும், அனுராக் காஷ்யப், நடிகை டாப்ஸி பன்னு, ரிலையன்ஸ் குழுமத் தலைமை செயல் அதிகாரி சுபாசிஷ் சா்க்காா் உள்ளிட்டோரின் வீடு, அலுவலகங்கள் உள்பட பல்வேறு இடங்களில் வருமான வரித்…

அதிமுகவின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது

அதிமுகவின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியானது அதில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்பட 4 அமைச்சர்கள்இடம் பெற்று உள்ளனர். தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி பிரதான கட்சியான அ.தி.மு.க. சார்பில் கடந்த மாதம் 24-ந்தேதி முதல் வேட்பாளர் விருப்ப மனு வினியோகிக்கப்பட்டு வருகிறது. விருப்ப மனு வினியோகம் 3-ந்தேதியுடன் முடிவடைந்தது. அ.தி.மு.க. வேட்பாளர் நேர்காணல், ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது.இதில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் அ.தமிழ் மகன் உசேன், செய்தி தொடர்பாளர் பா.வளர்மதி, மருத்துவரணி செயலாளர் டாக்டர் பி.வேணுகோபால் உள்பட நிர்வாகிகள் அடங்கிய ஆட்சி…

சாணக்கியன் M.P யின் முதலமைச்சர் கனவு ஒருபோதும் பலிக்காது

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சிறுபான்மையின மக்களின் ஏகோபித்த வாக்குகளால் கிழக்கு மாகாண சபையை கைப்பற்றி இழந்த அபிவிருத்தியை மேற்கொள்வதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தயாராக இருக்கின்றது. சாணக்கியனின் முதலமைச்சர் கனவு பலிக்காதென கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ப.சந்திரகுமார் தெரிவித்தார். நேற்று (4)மாவட்ட அலுவலகத்தில் வைத்து இவ்வாறு தெரிவித்தார். கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெற்றால் இப்போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்துள்ள சாணக்கியன் சிறுபான்மையின முஸ்லிம் மக்களின் வாக்குகளினால் முதலமைச்சராவார் என்பது வாயால் வடை சுடும் நிலைப்பாடாகும்.அது நடைபெறாது. கிழக்கு மாகாண சபைத்தேர்தல் நடைபெற்றால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சிறுபான்மையின மக்களின் ஏகோபித்த வாக்குகளினால் கிழக்கு மாகாண சபையை கைப்பற்றி இழந்த அபிவிருத்தியை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மேற்கொள்வதற்கு தயாராக இருக்கின்றது.தமிழர்களின் பூர்வீக பிரதேசம், பூர்வீக சொத்துக்களை,தமிழர்களின்…

‘வி’ திரைப்படத்தை நீக்க அமேசான் ப்ரைமுக்கு உத்தரவு

'வி' திரைப்படத்தை நீக்கச் சொல்லி மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வி திரைப்படத்தில் சாக்‌ஷி மாலிக் என்கிற நடிகையின் புகைப்படம் அனுமதியின்றி இடம்பெற்றுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி, நானி, அதிதி ராவ் ஹைதரி, நிவேதா தாமஸ் உள்ளிட்டோர் நடிப்பில், அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியான தெலுங்கு திரைப்படம் 'வி'. பாலிவுட் நடிகை சாக்‌ஷி மாலிக் என்பவர் 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம், ஒரு ஃபோட்டோ ஷூட்டை நடத்தியிருக்கிறார். இதில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவேற்றியுள்ளார். சாக்‌ஷி மாலிக்கிடம் உரிய அனுமதி பெறாமல், அவரது புகைப்படத்தை வி திரைப்படத்தில் பயன்படுத்தியுள்ளனர். மேலும், திரைப்படத்தில், பாலியல் தொழிலாளியைப் பற்றிய வசனமும் இந்தப் புகைப்படம் தோன்றும் போது பேசப்பட்டுள்ளது. இது தன்னுடைய அந்தரங்க விதிமீறல் என்றும்,…

சசிகலாவின் விலகல்; அதிமுகவை வளைக்க பாஜக செய்த ஏற்பாடு

சசிகலாவின் அரசியல் விலகல், அதிமுகவை வளைத்துவிட பாஜக செய்கின்ற ஓர் ஏற்பாடு என, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக, கி.வீரமணி இன்று (மார்ச் 5) வெளியிட்ட அறிக்கை சசிகலா பெங்களூருவிலிருந்து விடுதலையாகி வந்த நிலையில், செய்தியாளர்களிடையே பேசியபோது, 'தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக' அறிவித்தார். 'அடக்குமுறைகளைச் சந்திப்பேன்' என்றார்! விடுதலையானபோது என்ன சொன்னார் சசிகலா? கடந்த பிப்.24 ஆம் தேதி ஜெயலலிதா பிறந்த நாளில், அவரது படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, 'விரைவில் தொண்டர்களையும், மக்களையும் சந்திப்பேன்' என்றார்! அதிமுகவில் அவர் உரிமை கோரிய வழக்கையும் விரைவுபடுத்த முயற்சி எடுத்தார். இதற்கிடையே, சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியைத் தோற்கடிக்க சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை இணைத்தே தேர்தலை சந்திக்க வேண்டும்; அவர்களை அதிமுக கூட்டணியில் இணைக்க வேண்டும் என்று பாஜக தரப்பில் மத்திய…