‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ ரீமேக்

'தி கிரேட் இந்தியன் கிச்சன்' படத்தின் தென்னிந்திய மொழிகளின் ரீமேக் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. ஜியோ பேபி இயக்கத்தில் நிமிஷா சஜயன், சுராஜ் வெஞ்சரமூட் நடித்திருந்த படம் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்'. புதிதாகத் திருமணமான பெண் ஒருவர், பழமைவாதக் கொள்கைகளும் ஆணாதிக்கமும் நிறைந்த கணவரின் குடும்பத்தில் படும் கஷ்டங்கள், தொடர்ந்து அவர் எடுக்கும் முடிவு என்ன என்பதைச் சொல்லியிருந்த படம் இது. ஜனவரி 15-ம் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான இந்தத் திரைப்படம் விமர்சகர்களிடமும், ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆணாதிக்கச் சிந்தனையால் பாதிக்கப்படும் ஒரு படித்த பெண்ணின் நிலையை அழுத்தமாக, யதார்த்தமாகக் காட்டியிருந்ததாகப் பாராட்டுகளைப் பெற்றது. இந்தப் படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக் பணிகள் இன்று (மார்ச் 3) படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. ஆர்.கண்ணன் இயக்கி, தயாரிக்கவுள்ளார். இதில் நிமிஷா சஜயன் கதாபாத்திரத்தில்…

உடல் எடையை குறைத்து கஷ்டப்படும் அஞ்சலி ?

நடிகை அஞ்சலி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் ஐந்து படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார். நடிகை அஞ்சலி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் ஐந்து படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:- “நான் ஆரம்பத்தில் உடல் எடை அதிகமாகி பருமனாக இருந்தேன். இப்போது உடல் மெலிந்து இருக்கிறேன். எனது மெலிந்த தோற்றத்தை பார்த்து பலரும் அழகியாக மாறிவிட்டதாக பாராட்டுகிறார்கள். இந்த அதிசயம் எப்படி நடந்தது என்றும் கேட்கின்றனர். முதலில் தமிழ் படங்களில் குடிசை பகுதிகளில் இருக்கிற சாதாரண பெண் போன்ற கதாபாத்திரங்களில்தான் நடித்தேன். அதற்கேற்ற உடல் தோற்றம் எனக்கு இருந்தது. ஆனால் நிசப்தம் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்தபோது உடல் எடையை கணிசமாக குறைக்க வேண்டும் என்று இயக்குனர் கூறினார். இதனால் கஷ்டப்பட்டு எடையை குறைத்தேன். ஒவ்வொரு…

ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பில் தனுஷ்

தனுஷ், ‘தி க்ரே மேன்’ என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார். தனுஷ், ‘தி க்ரே மேன்’ என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார். இதில் கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான கிறிஸ் ஈவான்ஸ் மற்றும் லா லா லேண்ட், பர்ஸ்ட்மேன் ஆகிய படங்களில் நாயகனாக நடித்த ரயன் காஸ்லிங் ஆகியோரும் நடிக்கின்றனர். இந்த படத்தை அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார், அவெஞ்சர்ஸ் எண்ட்கேம், கேப்டன் அமெரிக்கா விண்டர் சோல்ஜர் உள்ளிட்ட படங்களை இயக்கிய அந்தோனி, ஜோ ரூஸோ ஆகியோர் டைரக்டு செய்கிறார்கள். ஹாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததற்கு தனுஷ் மகிழ்ச்சி தெரிவித்து இருந்தார். சமீபத்தில் சென்னை போயஸ் கார்டனில் கட்டும் தனது புதிய வீட்டுக்கு பூமி பூஜை போட்டு விட்டு ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்காக தனுஷ் அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அங்கு படப்பிடிப்புக்கு முந்தைய பணிகளில் பங்கேற்று…

காங்கிரஸ் தனித்துபோட்டி அல்லது 3-வது அணி

திமுக கூட்டணியில் கவுரவமான எண்ணிக்கையில் தொகுதி கிடைக்காவிட்டால், தனித்துபோட்டியிட வேண்டும் அல்லது 3-வது அணியில் சேர்ந்து போட்டியிடலாம் என நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கூறி உள்ளனர். திமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் காங்கிரஸ் கட்சி, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 30 தொகுதிகளைக் கேட்பதாகவும், ஆனால் 24 தொகுதிகளை மட்டுமே அளிக்க திமுக தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சி கடந்த 2006-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 4 சட்டமன்ற தேர்தல்களில் தி.மு.க.வுடன் கூட்டணியில் இருக்கிறது. அந்தவகையில், ஏற்கனவே நடைபெற்று முடிந்த 2006-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 48 தொகுதிகளும் (34 தொகுதிகளில் வெற்றி), 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 63 இடங்களும் (5 தொகுதிகளில் வெற்றி), 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 41 தொகுதிகளும் (8 தொகுதிகளில் வெற்றி) ஒதுக்கப்பட்டு இருந்தது…

இரணைதீவில் புதைப்பது ஏற்றுக்கொள்ள முடியாததாகும்

கொரோனாவால் இறப்பவர்களின் சடலங்களை இரணைதீவில் புதைக்க எடுத்த தீர்மானம் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளவோ, நியாயப்படுத்தவோ முடியாததொன்றாகும் என தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்,... தொடரும் அவர் கருத்தில்,... இரணைதீவுப் பகுதியை நான் நன்கு அறிவேன். தற்போது தான் இடம்பெயர்ந்த அந்த மக்கள் தங்களது மீன்பிடித் தொழிலை அங்கு ஆரம்பித்திருக்கிறார்கள். யுத்தத்தின் பாதிப்பிற்கு அதிகளவு முகம் கொடுத்து, தங்களது வாழ்வாதாரத்தை முற்றிலுமாக இழந்தவர்கள் இரணைதீவு மக்களே. இந்த நிலையில் அவர்களை மேலும் பீதிக்குள்ளாக்கும் நிலைமையே இந்த நடவடிக்கையாகும். இஸ்லாமிய சகோதரர்கள் செறிந்து வாழுகின்ற இடங்களில் வெற்றிடமாக பல ஏக்கர் காணிகள் இருக்கும் போது, முஸ்லிம் அமைப்புகளுடன் இது பற்றி கலந்தாலோசிக்காமல் இரணைதீவை தேர்ந்தெடுத்தது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளவோ, நியாயப்படுத்தவோ முடியாத செயலாகும்.…