நயன்தாராவுக்கு விரைவில் திருமணம்

நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் நானும் ரவுடிதான் படப்பிடிப்பில் காதல் வயப்பட்டு தொடர்ந்து உறவை வளர்த்து வருகிறார்கள். இருவருக்கும் ரகசிய திருமணம் நடந்து விட்டது என்றும், திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வருகிறார்கள் என்றும் தொடர்ந்து கிசுகிசுக்கள் பரவி வந்தன. இன்னும் திருமணம் நடக்கவில்லை என்பதை விக்னேஷ் சிவன் சூசகமாக தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் இந்த மாத இறுதியில் திருமணம் நடக்க உள்ளதாகவும், திருமண ஏற்பாடுகள் ரகசியமாக நடந்து வருவதாகவும் புதிய தகவல் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. ஆனால் இதற்கு இருவர் தரப்பில் இருந்தும் விளக்கம் கொடுக்கப்படவில்லை. நயன்தாரா ஏற்கனவே சிம்பு, பிரபுதேவா ஆகியோரை காதலித்து தோல்வியில் முடிந்தது குறிப்படத்தக்கது. தற்போது ரஜினிகாந்துடன் அண்ணாத்த மற்றும் நெற்றிக்கண், காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில்…

நான் விஜய்க்கு ஜோடியா? பூஜா ஹெக்டே விளக்கம்

விஜய் நடித்த மாஸ்டர் படம் சமீபத்தில் திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. ஓ.டி.டி. தளத்திலும் வெளியிட்டனர். தெலுங்கு, இந்தி, கன்னட மொழிகளிலும் வெளியாகி வெற்றி பெற்றது. பாகுபலி படத்தின் வசூல் சாதனையை மாஸ்டர் படம் முறியடித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது அடுத்த படத்தில் நடிக்க விஜய் தயாராகி உள்ளார். இந்த படத்தை நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தை எடுத்து பிரபலமான நெல்சன் இயக்குகிறார். இது விஜய்க்கு 65-வது படம். இந்த படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கும் கதாநாயகி தேர்வு நடக்கிறது. பூஜா ஹெக்டே அல்லது ராஷ்மிகா மந்தனாவுக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இருவரிடமும் படக்குழுவினர் பேசி வருகிறார்கள். இதுகுறித்து பூஜா ஹெக்டே கூறும்போது, “நான் முதலில் தமிழ் படத்தில்தான் அறிமுகமானேன். எனவே தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம் உள்ளது. விஜய்யுடன் ஜோடியாக நடிக்க…

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி

60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று முதல் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் இந்தியாவில் கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. இதற்காக மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு பல்வேறு வழிமுறைகளை வழங்கியுள்ளது. இந்த தடுப்பூசி போட முதியவர்கள் தங்களது ஆதார் எண்,…

தமிழகத்தில் ஏப்ரல் 6-ந் தேதி தேர்தல்

தமிழகத்தில் ஏப்ரல் 6-ந் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரதான கட்சியான அ.தி.மு.க. தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., பா.ஜ.க., தே.மு.தி.க., த.மா.கா. ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக மறைமுக பேச்சுவார்த்தை ஏற்கனவே தொடங்கி விட்ட நிலையில், அதிகாரபூர்வ பேச்சுவார்த்தையை நேற்று முன்தினம் முதல் அ.தி.மு.க. தொடங்கியது. பா.ம.க.வுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் அந்த கட்சிக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து தொகுதி பங்கீடு தொடர்பாக பா.ஜ.க., தே.மு.தி.க.வுடன் பேச்சுவார்த்தை தொடங்கியது. அ.தி.மு.க-பா.ஜ.க. தொகுதி பங்கீடு தொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை மத்திய மந்திரிகள் வி.கே.சிங், கி‌ஷன்ரெட்டி ஆகியோர் ஏற்கனவே சந்தித்து பேசிய நிலையில், மீண்டும் பா.ஜ.க. குழுவினர் நேற்று காலை சந்தித்து பேசினர். இதற்கிடையே, நேற்று…