நலன் குமாரசாமி இயக்கத்தில் ஆர்யா

நலன் குமாரசாமி இயக்கவுள்ள அடுத்த படத்தில் ஆர்யா நடிக்கவுள்ளார்.
‘சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ ஆகிய படங்களை இயக்கியவர் நலன் குமாரசாமி. அதனைத் தொடர்ந்து இயக்கவுள்ள படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க முன்வந்தது. இதற்காகக் கதைகள் எழுதி வந்தார் நலன் குமாரசாமி.
அந்தப் படத்துக்கு முன்பாக ‘குட்டி ஸ்டோரி’ ஆந்தாலஜியில் ஒரு கதையை இயக்கியிருந்தார். அதில் விஜய் சேதுபதி, அதிதி பாலன் இருவரும் நடித்திருந்தனர். அதற்கும் இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது, இதனைத் தொடர்ந்து நலன் குமாரசாமி இயக்கவுள்ள அடுத்த படத்துக்குப் பெரும் எதிர்பார்ப்பு உருவானது.
தற்போது அந்தப் படத்தின் நாயகனாக ஆர்யா நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது. ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது ஆர்யாவுடன் நடிக்கவுள்ளவர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Related posts