5 மாநிலங்களுக்கு மார்ச் 7 ஆம் தேதிக்குள் தேர்தல் தேதிகள்

மார்ச் 7 ஆம் தேதிக்குள் 5 மாநிலங்களுக்கு தேர்தல் ஆணையம் சட்டமன்றத் தேர்தல் தேதிகளை அறிவிக்கக்கூடும் என்று பிரதமர் நரேந்திர மோடி சூசகமாக தெரிவித்தார்.

அசாம், மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது.

ஜனவரி 21 அன்று, தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான தேர்தல் ஆணைய குழு மேற்கு வங்காள மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து கொல்கத்தாவில் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் மேற்கு வங்காளத்தின் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுடனும் ஆலோசனை நடத்தியது.

சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சினைகளை உணர்ந்த தேர்தல் ஆணையம், தேர்தலின் போது துணை ராணுவ சக்திகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பரிந்துரைத்துள்ளது. அதுபோல் தென் மாநிலங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான தேர்தல் ஆணைய குழு ஆலோசனைகள் நடத்தியது

இந்த நிலையில் அசாமின் தேமாஜி மாவட்டத்தில் சிலாபாதரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி. கடைசியாக 2016 ல் சட்டமன்றத் தேர்தல் தேதிகள் மார்ச் 4 ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. இந்த ஆண்டு மார்ச் 7 ந்தேதிக்குள் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்பது எனது அனுமானம் .

“தேதிகளை அறிவிப்பது அவர்களுடையது (தேர்தல் ஆணையம்) ஆனால் அறிவிப்பு வரும் வரை நான் அசாம், மேற்கு வங்கம், புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் கேரளாவுக்கு என்னால் முடிந்தவரை வருவேன் என கூறினார்.

Related posts