முள்ளந்தண்டிற்கு சேதம் ஏற்படுத்தும் இளையராஜா ஸ்ருடியோ..


இளையராஜா தனது ஸ்ருடியோவில் போட்டுள்ள கதிரைகள் ஒரு தொழில் நிறுவனத்தில் போடக்கூடாத பிளாஸ்டிக் கதிரைகளாகும். இதை பார்க்க ரஜினி வந்தது சரி ஆனால் அதை காணொளியாக பிரச்சாரம் செய்யும் போது அதில் அக்கறை காட்டுவது அவசியம்.

இதை பார்க்கும்போது தொழிலாளர் நலன் பற்றிய அக்கறை இளையராஜாவுக்கு அறலே இல்லையா என்றே கேட்க தோன்றுகிறது. பிரசாத் ஸ்ருடியோவில் நான்கு வருடங்கள் வாடகையே கட்டாது இருந்துவிட்டு கடைசியில் சாபமும் போட்ட இளையராஜாவை பலர் கண்டித்துள்ளனர்.

இளையராஜா அண்மையில் தொடங்கிய ஸ்டுடியோவுக்கு வந்த ரஜினிகாந்த்; ஸ்டுடியோவை சுற்றி பார்த்து, வியந்து கோவிலுக்குள் வந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது என பாராட்டியுள்ளார்.

சென்னை கோடம்பாக்கத்தில் ‘இளையராஜா ஸ்டுடியோ’ என்ற பெயரில் புதிய ஸ்டுடியோ ஒன்றை உருவாக்கியுள்ளார் இளையராஜா. சில தினங்களுக்கு முன்பு வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் படத்தின் இசைப்பணிகள் மூலமாக புதிய ஸ்டுடியோவில் தனது பணிகளைத் தொடங்கினார். அன்றைய தினம் பல்வேறு திரையுலக பிரபலங்கள் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.

இந்த நிலையில் நேற்று நடிகர் ரஜினிகாந்த் இளையராஜா ஸ்டுடியோவுக்கு சென்றார். அங்கு நடக்கும் இசைப் பணிகளை அமர்ந்து பார்த்துள்ளார். பின்பு கோயிலுக்குள் வந்தது போன்ற உணர்வு தனக்கு ஏற்பட்டதாக இளையராஜாவுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார் ரஜினி. ஸ்டுடியோவிலும் இளையராஜாவுடன் நீண்ட நேரம் உரையாடிவிட்டுச் சென்றுள்ளார்.

அதுபோல் இன்றும் மீண்டும் இளையராஜா ஸ்டுடியோவுக்கு வருகை தந்து ஆச்சரியம் அளித்துள்ளார் ரஜினிகாந்த் . அங்கு நடக்கும் இசைப் பணிகளை அமர்ந்து பார்த்துள்ளார். அதன் வீடியோக்கள், புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

Related posts