வடமாகாணத்தில் தடுப்பூசி ஏற்றும் பணி ஆரம்பம்

வடக்கு மாகாண வைத்தியசாலைகள் ஊடாக மருத்துவ சேவையாளர்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறையினருக்கு கொவிட் -19 தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று காலை 8.30 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கொவிட் -19 நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் மருத்துவ சேவையாளர்கள் மற்றும் சுகாதாரத் துறையினர்கள் நால்வருக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தடுப்பூசி ஏற்றும் பணி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி ஆகிய இருவரும் போதனா வைத்தியசாலையில் வைத்து தமக்கான கோவிட் -19 தடுப்பூசி மருந்தை ஏற்றிக்கொண்டனர்.

வடக்கு மாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களிலும் உள்ள வைத்தியசாலைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், தாதியர்கள், மருத்துவ சேவையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கும் கொவிட் -19 தடுப்பூசி மருந்து ஏற்றும் பணி இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மூன்று நாட்களுக்கு முன்னெடுக்கப்படும் இந்தப் பணியில் தவறவிடுவோர் தடுப்பூசி ஏற்றும் பட்டியலில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மட்டும் 5 ஆயிரத்து 820 மருத்துவ சேவையாளர்கள், சுகாதாரத் துறையினருக்கு கொவிட் -19 தடுப்பூசி மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அத்தியட்சகர் மருத்துவர் கமலநாதனுக்கு கொவிட் -19 தடுப்பூசி மருந்து ஏற்றப்பட்டு பணி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

—–

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று (30) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மேற்ப்பார்வை தாதியர் ஒருவருக்கு முதலாவது தடுப்பூசி இன்று காலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஏற்றப்பட்டது.

இந்த நிகழ்வு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் க.கலாரஞ்சனி தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதி பணிப்பாளர்,வைத்தியசாலையின் வைத்தியர்கள்,தாதியர்கள் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் கடமையாற்றும் சுமார் 2 ஆயிரம் ஊழியர்களுக்கு இந்த தடுப்பூசி ஏற்றப்படவுள்ள நிலையில் இன்றைய தினம் 1200 கொரோனா தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் க.கலாரஞ்சனி தெரிவித்தார்.

முதல் கட்டமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றுபவர்களுக்கு ஏற்றப்பட்டு பின்னர் ஏனையர்வகளுக்கு ஏற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

குறித்த தடுப்பூசி தொடர்பில் அச்சம் கொள்ளத்தேவையில்லையெனவும் அனைவரும் இதனைப்பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தின் முதல் கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட தாதிய உத்தியோகத்தர் தெரிவித்தார்.

——

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இன்று (30) காலை 300 மருத்துவ துறை சார்ந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றி வைக்கப்பட்டது.

இந்திய அரசாங்கத்தால் இலங்கை அரசாங்கத்திற்கு 5 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை பல்வேறு மாவட்டங்களிலும் தேவையின் பொருட்டு பயன்படுத்துவதற்கான நடவடிக்கையினை சுகாதார துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

அதனடிப்படையில் வவுனியா மாவட்டத்திற்கு 1,700 கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் முதல் கட்டமாக பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தினர் , வைத்தியர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், சுகாதாரப் துறையினர் , நோயாளர் காவு வண்டி சாரதிகள் என 300 நபர்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டப்பட்டன.

அந்த வகையில் முதலாவது தடுப்பூசியினை வவுனியா மாவட்ட பிராந்திய பிரதி சுகாதாரப் பணிப்பாளர் மகேந்திரன் ஏற்றியதுடன் இரண்டாவதாக தொற்று நோயியல் நிபுணர் லவன் அவர்களும் மூன்றாவதாக வவுனியா மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பிரதி சுகாதார வைத்திய அதிகாரி துஸ்யந்தன் அவர்களும் நான்காவதாக வவுனியா வைத்தியசாலை பணிப்பாளர் த.காண்டிபன் அவர்களும் ஏற்றிதை தொடர்ந்து ஏனைய மருத்துவதுறை சார்ந்தவர்களுக்கு ஏற்றப்பட்டது.

—–

புலம்பெயர்ந்தோரின் செல்வாக்கின் கீழ் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் எந்தவொரு தீர்மானங்களையும் எதிர்கொள்ள அரசாங்கம் தயாராக உள்ள தாக ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கான போராட்டம் ஒரு சுதந்திர நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதே தவிர, ஒரு தனிநபருக்கோ அல்லது ஒரு நாட்டிற்கோ அல்ல என்றும் அவர் தெரிவித்தார். ஆதாரங்களற்ற பொய்யான பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒரு தலைபட்சமானது. தமிழ் மக்களை அரசாங்கம் புறக்கணிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளதை ஏற்றுக் கொள்ள முடியாது.

இல்லாத பிரச்சினைகளை இருப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு ஒரு தரப்பினர் சர்வதேச அரங்கில் இலாபமடைகிறார்களென வீரசேகர தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் இலங்கை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கை நாட்டின் சுயாதீனத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்கள் ஒரு தலைப்பட்சமான கொள்கை அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளதென்பதை அறிய முடிகிறது.

தமிழ் பேசும் மக்களை அரசாங்கம் புறக்கணித்து செயற்படுவதாக குறிப்பிட்டுள்ளமை ஏற்றுக் கொள்ள முடியாது. 2019ஆம் ஆண்டு ஆட்சியமைத்த அரசாங்கம் இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டு செயற்படவில்லை.

அனைத்து இன மக்களுக்கும் அனைத்து நிலைகளிலும் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. கடந்த அரசாங்கம் இன நல்லிணக்கம் என்று செய்த தவறுகளை திருத்தும் போது அதனை இன புறக்கணிப்பு என்று கருதுவது தவறான நிலைப்பாடாகும்.

30 வருட கால சிவில் யுத்தம் முடிவடைந்த பிறகு அரசாங்கம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்தி பணிகளை துரிதப்படுத்தியது. இறுதிக்கட்ட யுத்தத்தில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டன. சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கான விசாரணை நடவடிக்கைகள் அக்காலக் கட்டத்தில் உள்ளக பொறிமுறை ஊடாக முன்னெடுக்கப்பட்டன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts