மோகன்லால் நடித்த சரித்திர படம் மீண்டும் தாமதம்

கொரோனாவால் நிறைய படங்கள் திரைக்கு வராமல் முடங்கி உள்ளன. அதையும் மீறி வரும் படங்களுக்கு எதிர்பார்த்த வசூல் இல்லை. முடங்கிய படங்கள் பட்டியலில் மோகன்லாலின் மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கமும் இடம்பெற்றுள்ளது. கொரோனாவால் நிறைய படங்கள் திரைக்கு வராமல் முடங்கி உள்ளன. அதையும் மீறி வரும் படங்களுக்கு எதிர்பார்த்த வசூல் இல்லை. முடங்கிய படங்கள் பட்டியலில் மோகன்லாலின் மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கமும் இடம்பெற்றுள்ளது. சரித்திர கதையம்சம் உள்ள இந்த படத்தை தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியிட திட்டமிட்டு உள்ளனர். 16-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய குஞ்சலி மரைக்காயர் என்பவரின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகி உள்ளது. இதில் குஞ்சலி மரைக்காயர் வேடத்தில் மோகன்லால் நடித்துள்ளார். அசோக் செல்வன், அர்ஜுன், மஞ்சுவாரியர், கீர்த்தி சுரேஷ், சுகாசினி ஆகியோரும் உள்ளனர். இந்த படம் கடந்த வருடம் மார்ச்…

ஆஸ்கார் விருது போட்டிக்கு செல்லும் சூர்யாவின் சூரரைப்போற்று

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப்போற்று படம் ஆஸ்கார் விருது போட்டியில் பங்கேற்கிறது. சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப்போற்று படம் ஆஸ்கார் விருது போட்டியில் பங்கேற்கிறது. இந்த படம் ஓ.டி.டி.யில் வெளியானது. கொரோனா காரணமாக ஓ.டி.டி.யில் வெளியான படங்களும் ஆஸ்கார் போட்டியில் பங்கேற்கும் வகையில் விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன. அந்த வகையில் ஆஸ்கார் போட்டிக்கான பொதுப்பிரிவில் சூரரைப்போற்று படம் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குனர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த கதாசிரியர் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் போட்டியிடுகிறது. இதில் தேர்வாகி இறுதி போட்டியில் பங்கேற்க வேண்டும். அதிலும் தேர்வானால் ஆஸ்கார் விருது பரிந்துரை பட்டியலில் இடம்பெறும். பின்னர் ஆஸ்கார் மேடையில் வெற்றி பெற்றதை அறிவிப்பார்கள். ஆஸ்காருக்கு செல்லும் சூரரைப்போற்று படத்தை பொதுப்பிரிவு போட்டியில் திரையிடுவதற்காக ஆஸ்கார் அகாடமி திரையில் பதிவேற்றம்…

எழுந்து வா தமிழா ஐரோப்பிய கலைஞர்களின் பிரமாண்ட படைப்பு..

எதிர்வரும் 30.01.2021 அன்று பி.ப. 15.00 மணிக்கு வெளியாகிறது காணத்தயாராகுங்கள்.. இசை கலைத்துவ வடிவமைப்பு ( படத்தொகுப்பு ) : வஸந்த் செல்லத்துரை சூப்பர் சிங்கர் வெற்றியாளர்.. ஐரோப்பிய வெற்றிப் பாடகர்கள்.. வாத்திய கலைஞர்கள்.. நூற்றுக்கணக்கான கலைஞர்களின் பிரமாண்ட முயற்சி.. சுவிஸ் சோலோ மூவீஸ் தயாரிப்பு.. அலைகள் 27.01.2021

விசாரணை முடிக்காத நிலையில் நினைவிடம் திறப்பது நியாயமா?

அம்மா ஆட்சி என்று சொல்லி நடத்திக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் அவர் எவ்வாறு மறைந்தார் என்பது இதுவரையில் மர்மமாக உள்ளது, இந்த லட்சணத்தில் நினைவிடம் திறப்பது நியாயமா என்பது தான் என்னுடைய கேள்வி என ஸ்டாலின் பேசியுள்ளார். இதுகுறித்து ஸ்டாலின் பேசியதாவது: மறைந்த அம்மையார் ஜெயலலிதா அவர்களுடைய நினைவிட திறப்பு விழா நிகழ்ச்சி இன்றைக்கு நடக்கிறது. அதை நான் வேண்டாமென்று மறுக்கவில்லை. ஆனால் நடத்தக் கூடியவர்கள் யார்? அந்த நினைவிடத்திற்கு உரியவர் யார்? தயவு செய்து சிந்தித்துப் பாருங்கள். குற்றம் புரிந்து, ஊழல் வழக்கில் சிக்கி தண்டனை பெற்றவருக்கு நினைவிடம் கட்டப்பட்டுத் திறப்பு விழா நடக்கின்றது. அதனைத் திறந்து வைப்பவர் உயர்நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்டு, சிபிஐ விசாரணை நடத்தப்படவேண்டும் என்று சொல்லி, அவருடைய ஊழல் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றிருக்கின்ற காரணத்தினால் அந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது.…

சிறை தண்டனை முடிவடைந்தது: விடுதலையானார் சசிகலா

4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிவடைவதையொட்டி விக்டோரியா அரசு மருத்துவமனையில் இருந்தபடியே சசிகலா இன்று விடுதலை செய்யப்பட்டார் சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சசிகலா கொரோனாவால் பாதிக்கப்பட்டு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போதைய நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்புகள் முற்றிலுமாக நீங்கிவிட்டது. இதையடுத்து அவரை தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு டாக்டர்கள் மாற்றியுள்ளனர். சசிகலாவின் உடல்நிலை குறித்து விக்டோரியா அரசு மருத்துவமனை நேற்று மாலை வெளியிட்ட மருத்துவ அறிக்கையில், “66 வயதாகும் சசிகலாவுக்கு கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு தற்போது கொரோனா பாதிப்புகள் குறைந்துவிட்டன. கொரோனாவுக்கான எந்த அறிகுறியும் இல்லை. சுயநினைவுடன் நன்றாக பேசுகிறார். கொரோனா வழிகாட்டுதல்படி அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு…

தடுப்பூசி முதல் கட்டத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு

இந்தியாவில் இருந்து நாளை இலங்கைக்கு கொண்டு வரப்படும் கொவிட் தடுப்பூசி முதல் கட்டமாக ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுக்கும், கொவிட்க்கு எதிராக போராடி வரும் சுகாதார பணியாளர்களுக்கும் ஏற்றப்படவுள்ளது. நாளை முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள கொவிட் தடுப்பூசி ஏற்றும் பணிகள் தொடர்பாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், கொவிட் தடுப்பூசி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் பிரதானியுமான லலித் வீரதுங்க தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கொவிட் தடுப்பூசியை நாட்டு மக்களுக்கு வழங்கும் பணிகள் தொடர்பாக விளக்கம் அளிக்கும் செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், தடுப்பூசி ஏற்றும் முதல் கட்ட நடவடிக்கையில் சுமார் 1 இலட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வழங்கப்படவுள்ளது. இதில் முதல் கட்டத்தில் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ள ஊழியர்களும் உள்வாங்கப்படவுள்ளனர். 2 ஆம் கட்டத்தின் கீழ் தொற்றை தடுக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ள…