ஆர்.ஆர்.ஆர் வெளியீட்டுத் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு

ஆர்.ஆர்.ஆர்' திரைப்படம் அக்டோபர் 13ஆம் தேதி அன்று வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'இரத்தம் ரணம் ரெளத்திரம்'. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். டிவிவி நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்து வருகிறது. முன்னதாக, கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தடைப்பட்டது. தற்போது மீண்டும் மும்முரமாகப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இரவில் பெரும் சண்டைக் கலைஞர்களை வைத்து பிரம்மாண்ட சண்டைக் காட்சி ஒன்றை ஹைதராபாத்தில் படமாக்கினார்கள். அதனைத் தொடர்ந்து சில முக்கியக் காட்சிகளைப் படமாக்கி வந்தது படக்குழு. ஜனவரி இரண்டாவது வாரத்துக்குப் பின் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி படப்பிடிப்பும் தொடங்கப்பட்டது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து…

எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு பத்ம விபூஷண் விருது

பிரபல திரைப்பட பின்னணி பாடகர் மறைந்த எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. நாட்டின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விபூஷண் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 7 பேர் கொண்ட பெயர் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது. இதன்படி, பொது விவகார துறைக்காக ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே, கலை பிரிவில் தமிழகத்தில் இருந்து பிரபல திரைப்பட பின்னணி பாடகர் மறைந்த எஸ்.பி. பாலசுப்பிரமணியம், மருத்துவ பிரிவில் கர்நாடகாவை சேர்ந்த பெல்லி மொனப்பா ஹெக்டே, அறிவியல் மற்றும் பொறியியல் பிரிவில் அமெரிக்காவை சேர்ந்த நரீந்தர் சிங் கப்பானி (மறைவுக்கு பின்) வழங்கப்படுகிறது. இதேபோன்று பிற பிரிவுகளில் ஆன்மீகத்திற்காக டெல்லியை சேர்ந்த மவுலானா வாஹிதுதீன் கான், தொல்லியல் துறைக்காக டெல்லியை சேர்ந்த பி.பி. லால் மற்றும் கலை பிரிவில் ஒடிசாவை சேர்ந்த…

ஓ.டி.டி. தளங்களை ஆதரித்த வித்யா பாலன்

கொரோனாவால் தமிழ், தெலுங்கு, இந்தியில் தயாரான புதிய படங்கள் ஓ.டி.டி. தளங்களில் வெளியாகி வருகின்றன. இதற்கு தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். ஏற்கனவே சூர்யாவின் சூரரை போற்று, விஜய்சேதுபதியின் க./பெ. ரணசிங்கம், ஜெயம் ரவியின் பூமி, நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன், கீர்த்தி சுரேசின் பென்குயின், சந்தானம் நடித்துள்ள பிஸ்கோத்தே உள்ளிட்ட பல படங்கள் ஓ.டி.டி.யில் வெளியிடப்பட்டன. இந்தியில் 10-க்கும் மேற்பட்ட படங்கள் ஓ.டி.டி.யில் வந்துள்ளன. மலையாளத்தில் மோகன்லால், மீனா நடித்துள்ள திரிஷ்யம் 2 படமும் ஓ.டி.டி.யில் வெளியாக உள்ளது. படங்களை ஓ.டி.டி.யில் வெளியிடுவதை தமிழில் நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்குமார் ஜோடியாக நடித்துள்ள பிரபல இந்தி நடிகை வித்யாபாலன் வரவேற்று உள்ளார். வித்யாபாலன் கூறும்போது, “ஓ.டி.டி. தளங்கள் மீது எனக்கு ஈடுபாடு உண்டு. நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலரது வாழ்க்கையை ஓ.டி.டி. தளங்கள் காப்பாற்றும்.…

ஜனவரி 26 இந்திய குடியரசு நாளானது எப்படி? – வரலாற்று தகவல்

இந்திய குடியரசு தினம் ஜனவரி 26 ஆம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது. அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்க எத்தனை நாட்கள் ஆனது என்பது குறித்த வரலாற்று தகவல்கள். குடியரசு தினம் என்பது ஜனநாயக ரீதியில் ஒரு நாடு தங்கள் சொந்த சட்டதிட்டத்தின் கீழ் செயல்படுவதை குறிக்கும் நாளாகும். இந்தியாவில் 1950-ஆம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இந்திய நாட்டிற்கான சட்டதிட்டங்கள் இயற்றப்பட்டு 1950 ஜனவரி 26 முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதுவே குடியரசு தினமாகவும் கொண்டாடப்படுகிறது. டாக்டர் அம்பேத்கர் 2 ஆண்டுகள் 11 மாதங்கள் பணியாற்றி இந்திய அரசியலமைப்பு சட்டத்தை திறம்பட இயற்றி தந்தார். 1946 டிசம்பர் 9 ஆம் தேதி இந்திய அரசியல் நிர்ணய மன்றத்தின் முதல் கூட்டம் நடந்தது. 1947 ஆகஸ்டு 29 ஆம் தேதி…

ஸஹ்ரான் தொடர்பு என்பதை ஏப்ரல் 21 இன் பின்னரே அறிந்தோம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர நேற்று வாக்குமூலம் வழங்கியுள்ளார். ஸ்கைப் தொழில்நுட்பத்தின் உதவியுடன் தாக்குதல்கள் குறித்து நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் அவர் சாட்சிம் வழங்கியுள்ளார். 2013 இல் பிரதி பொலிஸ் மா அதிபராக செயற்பட்ட வாஸ் குணவர்தன உள்ளிட்டோருக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகள் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்பாக உண்மைக்குப் புறம்பான விடயங்களை தெரிவித்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மஹர சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட அவருக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது. குறித்த வழக்கில் ஷானி அபேசேகர எதிர்வரும் பெப்ரவரி 03 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சி.ஐ.டி சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று விசாரணைநடத்தியது. மட்டக்களப்பு பொலிஸார் முன்னாள் புலி…

ராஜபக்ஷ அரசு இப்போது விழி பிதுங்கி தவிக்கிறது

எதிர்கட்சியில் இருந்த போது ஒவ்வொரு நாளும், தாம் தூண்டி, வளர்ந்து விட்ட இனவாதிகள், பெளத்த தேரர்கள், தொழிற்சங்கங்களின் பிடியில் இருந்து, விடுபட முடியாமல், நந்தசேன கோதாபய ராஜபக்ச அரசாங்கம், இன்று விழி பிதுங்கி போய் தத்தளிக்கிறது. வினை விதைத்தவன், வினையையே அறுப்பான் என்ற சான்றோர் மொழிக்கு உதாரணமாக திகழ்கிறது. கொழும்பு துறைமுக கிழக்கு முனைய விவகாரத்தில் இந்தியாவை பங்காளியாக்க கடந்த அரசு திட்டமிட்டபோது அதை எதிர்த்து, தமது தொழிற்சங்கங்களையும், தேரர்களையும் தூண்டி விட்டு, தெருவில் இறக்கி, அரசியல் செய்த ராஜபக்ச அரசு, இப்போது அதே இந்தியாவுக்கு, அதே கிழக்கு முனையத்தை, அதே அடிப்படையில், கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என கொழும்பு மாவட்ட எம்பியும், ஜனநாயக மக்கள் முன்னணி - தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இதுபற்றி மேலும் அவர் கூறியுள்ளதாவது, இது…