சசிகலாவிற்கு கொரோனா அறிகுறிகள் முற்றிலுமாக இல்லை

சசிகலாவிற்கு கொரோனா அறிகுறிகள் முற்றிலுமாக இல்லை என்று மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுளது.

சொத்துகுவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா வரும் 27 ஆம் தேதி விடுதலையாக இருந்த நிலையில் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து பெங்களூருவில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இதை தொடர்ந்து சசிகலாவுக்கு ஐசியூவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து சசிகலா உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து அவ்வ போது தகவல் தெரிவித்து வருகிறது.

இந்நிலையில்,விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், சசிகலாவுக்கு கொரோனா அறிகுறிகள் முற்றிலுமாக இல்லை. இருப்பினும் அவர் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சசிகலாவுக்கு கொரோனா அறிகுறிகள் முற்றிலுமாக இல்லை எனமருத்துவமனையின் அறிவிப்பால் சசிகலா ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதனிடையே சசிகலா, பிப்ரவரி முதல் வாரத்தில் சென்னை திரும்புவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. பிப்ரவரி 3-ஆம் தேதி அண்ணா நினைவு நாளன்று சென்னை திரும்பும் சசிகலா சென்னை வந்ததும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்த உள்ளதாகவும் அதனைத்தொடர்ந்து, தஞ்சாவூரில் உள்ள எம்.நடராஜன் நினைவிடத்திற்கு செல்ல திட்டமிட்டு இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related posts