டேனிஷ் திரைப்படம் இன் டு தி டார்க்னஸுக்கு தங்க மயில் விருது

உலக திரைப்படங்களைக் கொண்டாடும் 51-வது இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழா வண்ணமயமான நிகழ்ச்சிகளுடன் நிறைவு பெற்றது. 51-வது இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவின் உயரிய தங்க மயில் விருதை இரண்டாம் உலகப் போர் பற்றிய டேனிஷ் திரைப்படமான இன் டு தி டார்க்னஸ் வென்றுள்ளது. இந்த விருதுக்கான ரூ. 40 லட்சம் ரொக்கப் பரிசை இந்தத் திரைப்படத்தின் இயக்குனர் ஆண்டர்ஸ் ரெஃப்னும், தயாரிப்பாளர் லேனே போர்க்லும் சமமாக பெற்றுக்கொள்வார்கள். அவர்களுக்கு தலா ஒரு சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. கோவாவில் நேற்று நடைபெற்ற திரைப்படத் திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியில் இந்த விருது அறிவிக்கப்பட்டது. இது தவிர சிறந்த இயக்குநர், நடிகருக்கான வெள்ளி மயில் விருதுகளும் வழங்கப்பட்டன. மேலும் 51-வது இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவின் சிறப்பு நடுவர்மன்ற விருதும் வழங்கப்பட்டது. மத்திய சுற்றுச்சூழல், வன இணை அமைச்சர் பாபுல் சுப்ரியோ,…

நவம்பர் 4-ல் ரஜினியின் “அண்ணாத்த” ரிலீஸ்

நடிகர் ரஜினிகாந்தின் 'அண்ணாத்த' திரைப்படம் நவம்பர் 4-ம் தேதி வெளியாகிறது என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. தர்பார் படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் அண்ணாத்த. சிறுத்தை சிவா இயக்கியுள்ள இந்த திரைப்படத்திற்கு, டி.இமான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். பிரகாஷ்ராஜ், சூரி, சதீஷ் ஆகியோரும் படத்தில் உள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா பரவல் காரணமாக தடைப்பட்டது. இதையடுத்து, மீண்டும் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், படப்பிடிப்பில் கலந்துக் கொண்டவர்கள் சிலருக்கு கொரோன தொற்று உறுதியானதால் மீண்டும் தடைப்பட்டது. இந்நிலையில், அண்ணாத்த படக்குழுவினர் தங்களது டுவிட்டர் பக்கத்தில், படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதில், வரும் நவம்பர் 4-ஆம் தேதி அன்று அண்ணாத்த படம் வெளியாகும் என்று தெரிவித்துள்ளனர்.…

சசிகலாவிற்கு கொரோனா அறிகுறிகள் முற்றிலுமாக இல்லை

சசிகலாவிற்கு கொரோனா அறிகுறிகள் முற்றிலுமாக இல்லை என்று மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுளது. சொத்துகுவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா வரும் 27 ஆம் தேதி விடுதலையாக இருந்த நிலையில் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து பெங்களூருவில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இதை தொடர்ந்து சசிகலாவுக்கு ஐசியூவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து சசிகலா உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து அவ்வ போது தகவல் தெரிவித்து வருகிறது. இந்நிலையில்,விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், சசிகலாவுக்கு கொரோனா அறிகுறிகள் முற்றிலுமாக இல்லை. இருப்பினும் அவர் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சசிகலாவுக்கு கொரோனா அறிகுறிகள் முற்றிலுமாக இல்லை எனமருத்துவமனையின் அறிவிப்பால் சசிகலா ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனிடையே சசிகலா,…

தமிழ் மக்களின் பிரச்சினையை வைத்து வங்குரோத்து அரசியல் ?

போராட்ட அரசியலால் பெற்றுக்கொடுக்க முடியாத, தமிழர்களுக்கான தீர்வை எவராலும் பெற்றுக்கொடுக்க முடியாது என, பின்தங்கிய கிராமிய பிரதேச அபிவிருத்தி மற்றும் மனைசார் கால்நடை பராமரிப்பு மற்றும் சிறு வர்த்தக பயிர்ச் செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் 4ஆவது ஆண்டு நிறைவையொட்டி மட்டு.மாவட்ட பட்டிருப்புத் தொகுதிக்கான தேசிய மாநாடு பெரமுனவின் மட்டு. மாவட்ட அமைப்பாளர் ப.சந்திரகுமார் தலைமையில் பெரியபோரதீவில் நேற்றுமுன்தினம் (23) இடம்பெற்றபோதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஈழப்போராட்டம் 2009, ஆம் ஆண்டிலேயே மெளனிக்கப்பட்டு விட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரால் பெற்றுக்கொடுக்க முடியாத தமிழீழத்தை என்னுடைய தாத்தாவாலோ உங்களுடைய தாத்தாவாலோ சம்பந்தனது தாத்தாவாலோ பெற்றுக்கொடுக்க முடியாது. நடப்பதை, சாத்தியமானதை பேசுவோம். நான் தமிழ் ஆண் மகன் என்று சொல்வதை வெட்கப்படுகிறேன். நான் மட்டுமல்ல நீங்களும்…

நல்லாட்சியால் தமிழ் மக்களுக்கு எந்த பயனும் கிடைக்கவில்லை

நல்லாட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்க தமிழ்பேசும் மக்கள் அதிக பங்களிப்பு செய்தார்கள். ஆனால் அவர்களுக்கு எவ்வித பயனும் கிடைக்கப்பெறவில்லை என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், தமிழ் பேசும் மக்களை அரசாங்கம் புறக்கணித்து செயற்படுவதாக குறிப்பிட்டு எதிர்தரப்பினர், பெரும்பான்மை சமூகத்துக்கும் சிறுபான்மை சமூகத்துக்குமிடையில் முரண்பாட்டை தோற்றுவிக்க முயற்சிக்கிறார்கள். இனப்பிரச்சினைக்கு தீர்வாகவே மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. ஏனைய மாகாணங்களை காட்டிலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்துக்கு மாகாண சபை தேர்தல் அவசியமாக இருந்தது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு மதிப்பளித்து மாகாண சபை தேர்தலை நடத்தினார். தமிழ் பேசும் மக்கள் தமக்கான பிரதிநிதிகளை ஜனநாயக முறையில் தெரிவு செய்து கொண்டார்கள். எமது ஆட்சியில் வழங்கிய…