கொரோனாவினால் சிரேஷ்ட தொலைக்காட்சி தொகுப்பாளர் உயிரிழப்பு

தமிழர் தாயகத்தில் மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்கும் வகையில் அனைத்துத் தரப்புகளையும் ஒன்றிணைத்து அவசர கலந்துரையாடல் ஒன்றுக்கு இன்று முற்பகல் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.

மதத்தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், சிவில் அமைப்புகள், பல்கலைக்கழக மாணவர்கள், கற்றறிந்தவர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைந்து மக்கள் போராட்டங்களை முன்னெடுப்பது என்பது இந்தக் கலந்துரையாடிலின் நோக்கமாகும்.

வடக்கு – கிழக்கில் தமிழரின் பாரம்பரிய இடங்கள் தொல்பொருள் என்ற பெயரில் அபகரித்தல், காணி சுவீகரிப்புகள் உள்ளிட்ட விடயங்களுக்கு எதிராக செயற்பட்டு வாழ்வுரிமையை பாதுகாப்பது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது.

நாட்டின் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இந்தக் கலந்துரையாடல் ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.

—–

அரசாங்கத்தின் ஜனநாயக விரோதச் செயற்பாடுகளைக் கண்டித்து ஐக்கிய மக்கள் சக்தி இன்று (24.01.2021) போராட்டத்தில் ஈடுபட்டது.

´பேச்சு சுதந்திரத்தை பாதுகாப்போம்´ எனும் தொனிப்பொருளின் கீழ் கினிகத்தேனை நகரில் முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் மஸ்கெலியா தொகுதி அமைப்பாளர் கபில நாகன்தல ஏற்பாடு செய்திருந்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் வெளியிடப்பட்ட கருத்துக்கு இதன்போது கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், அரசியல் ரீதியில் பழிவாங்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நீதி கிடைக்கவேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

” இந்த அரசாங்கம் ஊடகங்களை அச்சுறுத்துகின்றது. அரசியல்வாதிகளுக்கு கருத்து வெளியிடும் சுதந்திரம் இல்லை. இவற்றை கண்டிக்கின்றோம்.” என போராட்டக்காரர்கள் கருத்து தெரிவித்தனர்.

—-

சிரேஷ்ட அமெரிக்க தொலைக்காட்சி தொகுப்பாளரான லாரி கிங் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிடார்ஸ்-சினாய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று காலை தனது 87 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.

பீபோடி விருது பெற்ற ஒளிபரப்பாளரான லாரி கிங் அமெரிக்காவின் பிரபலங்கள், ஜனாதிபதிகள் மற்றும் பிற செய்தித் தயாரிப்பாளர்களை அரை நூற்றாண்டு வாழ்க்கையில் நேர்காணல் செய்தவர்களில் ஒருவர் ஆவார்.

லாரி கிங் அண்மைய தசாப்தங்களில் மாரடைப்பு மற்றும் நீரிழிவு மற்றும் நுரையீரல் புற்றுநோய் போன்ற பல்வேறு சிக்கல்களால் பதிப்படைந்திருந்தார்.

கடந்த ஆண்டு, அவர் தனது ஐந்து குழந்தைகளில் இருவரை இழந்தார்.

Related posts