உன்னதத்தின் ஆறுதல்! வாரம் 21. 03

தேவனுக்கு நிகரானவர் யார்? சகோதரன். பிரான்ஸ்சீஸ் அந்தோனிப்பிள்ளை. ரெகொபோத் ஊழியங்கள் - டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம். இன்று மிகஉன்னதமான ஓர் வேதவார்த்தை ஊ10டாக தேவனிடத்தில் இருந்து ஆசீர்வாதத்தையும், ஆறதலையும், அமைதியையும் கண்டுகொள்ளும் வண்ணமாக அலைகள் வாசக நேயர்களாகிய உங்கள் அனைவரையும் அழைத்துச்செல்கிறேன். தேவனே, உம்முடைய நீதி உன்னதமானது, பெரிதானவைகளை நீர் செய்தீர், தேவனே, உமக்கு நிகரானவர் யார்? சங்கீதம் 71.19 இந்த வேதப்பகுதியை எழுதிய தேவமனிதன், தேவனின் கிரியைகளையும், அவரின் செயல்களையும் பார்த்து மேற்கண்டவாறு சொல்கிறான். தேவனின் கிரியைகள் எப்போதும் பெரிதானவைகள் என்பதை அவர் தன்வாழ்க்கையில் கண்டுகொண்டார். அதனால் அவர் உமக்கு நிகரானவா யார் என்று அறிக்கை பண்ணுவதை நாம் காணக்கூடியதாக உள்ளது. தேவனுடைய நீதி உன்னதமானது. அதனால் அவர் உலகத்தில் பெரிதானவைகளைச் செய்து நிகரற்ற தெய்வமாக விளங்குகிறார். இதை இன்னும் நாம் விளங்கிக்கொள்ள ஏசாயாவின் புத்தகத்தில் உள்ள…
யாழ் பெரியாஸ்பத்திரியில்.. நோயாளி : டாக்டர் புண் மாறியிருச்சு .. ஆனா நீங்க அதுக்கு மேல ஒட்டின பிளாஸ்டரை மூணு மாதமா உரிக்க முடியல்லே .. டாக்டர் : அதற்கான கருவிகள் யாழ் போதனா வைத்தியசாலையில் இல்லை.. கொழும்புதான் போகணும் .. போதனா வைத்தியசாலைன்னா போதனை மட்டும்தான் .. போ .. போ .. நெக்ஸ்ற்.. -------------- மணமகள் : அப்பா வெளிநாட்டு மாப்பிளய கட்டி வைச்சீங்க அவர் முதலிரவில தூங்க விடாம “ கறுப்பு “ இருக்கா “ கறுப்பு “ இருக்கான்னு தொல்லைப்படுத்துறார் .. கறுப்பென்னா என்னப்பா ..? தகப்பன் : அட ! அப்பிடியா ., மாப்பிள உனக்கு “ கற்பிருக்கா “ என்னு கேட்டிருக்காரும்மா .. ---------------- ஒருவர் : லண்டன் மாப்பிளயா ?இருந்தாலும் தமிழ் பெண்ணுதான் வேணுமென்று பிடிவாதம் பிடிக்கிறாரே…

முடிவை மாற்றிய சுல்தான், சக்ரா

'மாஸ்டர்' படத்துக்குக் கிடைத்த வரவேற்பால், 'சுல்தான்', 'சக்ரா' ஆகிய படங்கள் தங்களுடைய முடிவை மாற்றியுள்ளன. ஜனவரி 13-ம் தேதி பெரும் எதிர்பார்ப்புடன் வெளியானது 'மாஸ்டர்'. இந்தப் படத்தின் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் என அனைவருமே வசூல் எப்படியிருக்குமோ என்ற அச்சத்திலேயே இருந்தனர். ஆனால், படம் மாபெரும் வசூல் சாதனையை நிகழ்த்தியது. மாஸ்டர்' படக்குழுவினரோடு இதர படங்களின் தயாரிப்பாளர்களும் காத்திருந்தனர். ஏனென்றால், மக்கள் திரையரங்கிற்கு வரத் தொடங்கிவிட்டால் தங்களுடைய படத்தையும் திரையரங்கிலேயே வெளியிடலாம் என்று முடிவு செய்திருந்தனர். தற்போது 'மாஸ்டர்' வசூலால் ஓடிடி வெளியீட்டை சில படங்கள் கைவிட்டுவிட்டன. கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள 'சுல்தான்', விஷால் நடிப்பில் உருவாகியுள்ள 'சக்ரா' ஆகிய படங்கள் ஓடிடி வெளியீட்டுப் பேச்சுவார்த்தையிலிருந்து பின்வாங்கியுள்ளன. இரண்டுமே திரையரங்குகளில் வெளியாகவுள்ளன. பிப்ரவரியில் 'சக்ரா' படத்தையும், ஏப்ரலில் 'சுல்தான்' படத்தையும் வெளியிடத் தீர்மானித்துள்ளார்கள். 'மாஸ்டர்' படத்தின்…

விஷ்ணு விஷால் குடியிருப்பில் குடித்துவிட்டு ரகளை ..

குடியிருப்பில் தான் குடித்துவிட்டு சண்டை போடவில்லை என நடிகர் விஷ்ணு விஷால் விளக்கம் அளித்துள்ளார். தமிழில் வெண்ணிலா கபடி குழு, பலே பாண்டியா, குள்ள நரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், ராட்சசன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் விஷ்ணு விஷால். தற்போது ஜகஜால கில்லாடி, எப்.ஐ.ஆர். ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் மனைவியின் விவாகரத்து, நிதி இழப்புகளால் போதைக்கு அடிமையாகி மீண்டதாக நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், நடிகர் விஷ்ணு விஷால் மீது சென்னை கோட்டூர் புரத்தில் வாடகைக்கு தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் மதுபோதையில் ரகளை ஈடுபட்டதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விஷ்ணு விஷாலின் வீட்டில் அதிகாலையில் அதிகளவும் சந்தம் வந்ததாகவும், இது குறித்து கேட்டதற்கு அவர் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், சம்மந்தப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு சங்கத்தின் சார்பில் புகார்…

தமிழ் கலாச்சாரத்தை மதிக்கிறேன் ராகுல்காந்தி

நான் தமிழன் அல்ல, ஆனால் தமிழ் கலாச்சாரத்தை மதிக்கிறேன் என்று ஈரோடு பிரசாரத்தில் ராகுல்காந்தி கூறினார். அகில இந்திய காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி., வணக்கம் தமிழகம் என்ற பெயரில் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். அதன்படி நேற்று கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தேர்தல் பிரசாரம் செய்தார். இதைத்தொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஈரோடு மாவட்டத்தில் ராகுல்காந்தி தீவிர பிரசாரம் செய்து வருகிறார். பிரசாரத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:- நான் எனது மனதின் குரலை பேச வரவில்லை, உங்களின் குரலை கேட்க வந்துள்ளேன். நான் தமிழன் அல்ல, ஆனால் தமிழ் கலாச்சாரத்தை மதிக்கிறேன். நாட்டின் வளர்ச்சிக்கு தமிழக இளைஞர்களின் பங்கு அளப்பரியது. தமிழகத்தில் பல மாற்றங்களை கொண்டு வர முடியும். தமிழக மக்களுடன் எனக்கு இருப்பது அரசியல் பிணைப்பல்ல, குடும்ப பிணைப்பு. இவ்வாறு அவர்…

இந்தியாவிலிருந்து எதிர்வரும் புதன்கிழமை 6 இலட்சம் தடுப்பூசி

இந்தியாவில் தயாரிக்கப்படும் கொவிட் தடுப்பூசியின் முதல் தொகுதியான 600,000 பேருக்கான தடுப்பூசி இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். களுத்துறை, வலல்லாவிட்ட பகுதியில் நடைபெற்ற "கிராமத்துடன் உரையாடல்" நிகழ்வின் பங்கேற்ற ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இதில் சுமார் 3 இலட்சம் தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். தடுப்பூசி கிடைத்த மறுநாளே அதனை வழங்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என தெரிவித்த ஜனாதிபதி, முதற் கட்டமாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் நடவடிக்கையில் முன்னிலையில் உள்ள, வைத்தியர்கள், தாதியர்கள், பொதுச் சுகாதார அதிகாரிகள் உள்ளிட்ட சுகாதார பிரிவினருக்கும் அதனைத் தொடர்ந்து இப்பணியில் ஈடுபட்டுள்ள இராணவத்தினருக்கும் வழங்கப்படும் எனத் தெரிவித்த அவர், அதனைத் தொடர்ந்து கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் காணப்படுவோருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்டும் என அவர் கூறினார். இந்நடவடிக்கையுடன் இணைந்தவாறு, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில்…

கொரோனாவினால் சிரேஷ்ட தொலைக்காட்சி தொகுப்பாளர் உயிரிழப்பு

தமிழர் தாயகத்தில் மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்கும் வகையில் அனைத்துத் தரப்புகளையும் ஒன்றிணைத்து அவசர கலந்துரையாடல் ஒன்றுக்கு இன்று முற்பகல் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது. மதத்தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், சிவில் அமைப்புகள், பல்கலைக்கழக மாணவர்கள், கற்றறிந்தவர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைந்து மக்கள் போராட்டங்களை முன்னெடுப்பது என்பது இந்தக் கலந்துரையாடிலின் நோக்கமாகும். வடக்கு - கிழக்கில் தமிழரின் பாரம்பரிய இடங்கள் தொல்பொருள் என்ற பெயரில் அபகரித்தல், காணி சுவீகரிப்புகள் உள்ளிட்ட விடயங்களுக்கு எதிராக செயற்பட்டு வாழ்வுரிமையை பாதுகாப்பது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது. நாட்டின் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இந்தக் கலந்துரையாடல் ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது. ----- அரசாங்கத்தின் ஜனநாயக விரோதச் செயற்பாடுகளைக் கண்டித்து ஐக்கிய மக்கள் சக்தி இன்று (24.01.2021) போராட்டத்தில் ஈடுபட்டது. ´பேச்சு சுதந்திரத்தை பாதுகாப்போம்´ எனும் தொனிப்பொருளின் கீழ் கினிகத்தேனை…