மலையாள நடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி காலமானார்

நடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி (98), கொரோனா தொற்றிலிருந்து சில நாட்களுக்கு முன்னர் குணமடைந்த நிலையில் இன்று உயிரிழந்தார். நடிகர் உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி மலையாளத் திரைப்படங்களில் தாத்தா கதாபாத்திரங்களில் நடித்துப் பிரபலமானவர். இவரது மருமகன் கைதப்ரம் தாமோதரன் பாடலாசிரியராக உள்ளார். மூன்று வாரங்களுக்கு முன் கண்ணூர் மருத்துவமனையில் உன்னிகிருஷ்ணன் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு நிமோனியா காய்ச்சல் தீவிரமாக இருந்தது. அப்போது அவருக்குக் கொரோனா தொற்று இல்லை என்றே பரிசோதனை முடிவில் தெரியவந்தது. நிமோனியா பிரச்சினை தீர்ந்தபிறகு மருத்துவமனையிலிருந்து உன்னிகிருஷ்ணன் வீட்டுக்கு வந்தார். ஆனால், அடுத்த இரண்டு நாட்களில் காய்ச்சல் வந்ததால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த முறை அவருக்குக் கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. இஅதை தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் இரண்டு நாட்கள் இருந்த அவர், தொற்று நீங்கிய பிறகு உடல்நிலை தேறினார். ஞாயிற்றுக்கிழமை அன்று…

சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தொழிற்சாலையில் தீ விபத்து

தடுப்பூசி உற்பத்தி செய்யும் சீரம் நிறுவன கட்டிடத்தில் தீவிபத்து ஏற்பட்டு உள்ளது. தடுப்பூசி வெளியாவதில் பாதிப்பு எதுவும் இல்லை என கூறப்பட்டு உள்ளது. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ராஜெனேகா மருந்து நிறுவனமும் இணைந்து உருவாக்கி, புனேயில் உள்ள இந்திய சீரம் நிறுவனம் தயாரித்து வழங்கும் கோவிஷீல்டு தடுப்பூசி நாடு முழுவதும் போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவிற்காக கட்டப்படும் ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது, ஆனால் இது கொரோனா வைரஸ் தடுப்பூசி உற்பத்தியை பாதிக்காது என்று உலகின் மிகப்பெரிய தடுப்பூசி நிறுவனத்தின் நெருக்கமான வட்டாரம் தெரிவித்துள்ளது. புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் டெர்மினல் கேட் 1 க்குள் உள்ள ஒரு கட்டிடத்தின் நான்காவது மற்றும் ஐந்தாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டு மள மள வெனபரவியது.10 க்கும் மேற்பட்ட தீயணைப்பு…

இலங்கையின் விமான நிலையங்கள் முழுமையாக திறப்பு

கொரோனா பரவலைத் தொடர்ந்து, சுமார் 10 மாதங்களாக மூடப்பட்டிருந்த இலங்கை விமான நிலையங்கள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட அனைத்து வணிக விமான சேவைகளுக்காக இன்று (21) முதல் திறக்கப்பட்டுள்ளன. மத்தள மற்றும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையங்கள் இரண்டும், நாட்டின் பொருளாதாரத்தைக் கருத்திற்கொண்டு, சுகாதார பிரிவின் விசேட கண்காணிப்பின் கீழ் திறக்கப்பட்டுள்ளதாக, சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய, முதல் வணிக விமானம் இன்று (21) காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. ஓமான் எயார்லைன்ஸிற்குச் சொந்தமான WY 371 எனும் விமானம் ஓமானின், மஸ்கட்டிலிருந்து மு.ப. 7.40 மணிக்கு, கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விமானத்தில் 50 இலங்கையர்கள் வந்தடைந்துள்ளதோடு, அவர்கள் அனைவரும் கட்டயாக தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரவலுக்கு மத்தியில், நேர அட்டவணைக்கு…