அண்ணாத்த’ தாமதம்: சூர்யா படப் பணிகளைத் தொடங்கிய சிவா

'அண்ணாத்த' படத்தின் தாமதத்தால், சூர்யா நடிக்கவுள்ள படத்தின் முதற்கட்டப் பணிகளைத் தொடங்கியுள்ளார் சிவா. ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிப்பில் சூர்யா நடிக்கவிருந்த படத்தை இயக்க ஒப்பந்தமாகியிருந்தார் சிவா. 'விஸ்வாசம்' படத்தின் மாபெரும் வெற்றியால் ரஜினி அழைத்துக் கதை கேட்க, அவரும் நடிக்கச் சம்மதம் தெரிவித்தார். இதனால் ரஜினி படத்துக்குப் பிறகு சூர்யா படம் என்று பேசி முடிவு செய்தார்கள். பின்பு, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்க 'அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கினார் சிவா. இதில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இமான் இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார். கரோனா அச்சுறுத்தல், ரஜினி உடல்நிலை பாதிப்பு ஆகியவற்றால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இன்னும் 'அண்ணாத்த' படப்பிடிப்பு சுமார் 40 நாட்கள் வரை இருக்கிறது. இதனைச் சென்னையிலேயே படமாக்கத் திட்டமிட்டது படக்குழு.…

நாடும், நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்: ‘பூமி’ இயக்குநர்

நம் நாடும், நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் என்று 'பூமி' இயக்குநர் லக்‌ஷ்மண் தெரிவித்துள்ளார். படத்தை விமர்சித்த ரசிகருக்குப் பதிலளிக்கும்போது ட்விட்டரில் இதனை அவர் குறிப்பிட்டார். லக்‌ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி, நிதி அகர்வால், சரண்யா பொன்வண்ணன், சதீஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பூமி'. திரையரங்க வெளியீட்டுக்குத் திட்டமிட்ட இந்தப் படம், கரோனா அச்சுறுத்தலால் ஜனவரி 14-ம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது. விவசாயத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி உருவாக்கப்பட்ட இந்தப் படம், மிக மோசமான விமர்சனங்களைப் பெற்றது. இந்தப் படத்தைப் பார்த்தவர்களும் சமூக வலைதளத்தில் கடுமையாக விமர்சித்தார்கள். இந்த விமர்சனங்கள் தொடர்பாகப் படக்குழு அமைதி காத்து வந்தது. இந்நிலையில், 'பூமி' படம் பார்த்துவிட்டு ரசிகர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இதுவரை நான் பார்த்த படங்களில் 'பூமி' போன்ற ஒரு மோசமான படத்தைப்…

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் திரிஷா

இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கி வருகிறார். படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், சுந்தர சோழனாக சரத்குமார், வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி. பூங்குழலி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, குந்தவையாக திரிஷா ஆகியோர் நடிக்கின்றனர். ஐஸ்வர்யாராய் 2 வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. இதன் முதல் கட்ட படப்பிடிப்பு தாய்லாந்து காடுகளில் நடந்தது. பின்னர் புதுச்சேரியில் முக்கிய காட்சிகளை படமாக்கினர். தற்போது ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் அரண்மனை அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடக்கிறது. படப்பிடிப்பில் ஐஸ்வர்யாராய் சமீபத்தில் கலந்து கொண்டார். இப்போது நடிகை திரிஷாவும் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். கையில் பொன்னியின் செல்வன் நாவலை வைத்திருப்பதை போன்ற புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டு உள்ளார். இந்த படத்தில் நடிப்பதற்காக சில நாட்களுக்கு முன்பு திரிஷா குதிரையேற்ற பயிற்சி எடுத்தார். குதிரையுடன் நிற்பது…

இங்கிலாந்தில் உச்சம் தொட்ட கொரோனா 24 மணி நேரத்தில் 1,610 பேர் மரணம்

இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா மரண எண்ணிக்கையானது எப்போதும் இல்லாத புதிய உச்சத்தை தொட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தில் தேசிய ஊரடங்கு நீடிக்கும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,610 பேர்கள் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர். நாட்டில் கொரோனா பரவல் தொடங்கிய நாள் முதல், இது எப்போதும் இல்லாத புதிய உச்சம் இது என கூறப்படுகிறது. 6 நாட்களுக்கு முன்னர் 1,564 பேர்கள் கொரோனாவுக்கு பலியான நிலையில், அதுவே அதுவரையான புதிய உச்சம் என தெரிவிக்கப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,355 என தெரிய வந்துள்ளது.இதனால் இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3,466,849 என உத்தியோகப்பூர்வ தகவல் தெரிவிக்கின்றன. மேலும், கொரோனாவால் மொத்த மரண எண்ணிக்கை…

நிலுவையை செலுத்தாத ஏழு நாடுகளின் ஐ.நா வாக்குரிமை இழப்பு

நிலுவைத் தொகையை செலுத்தத் தவறியதால் ஈரான் உட்பட ஏழு நாடுகள் ஐ.நா பொதுச் சபையில் வாக்களிக்கும் உரிமையை இழந்துவிட்டதாக அதன் செயலாளர் நாயகம் அன்தோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார். ஐ.நா ஒரு நாட்டுக்கு முந்தைய இரண்டு ஆண்டுகளில் வழங்குவதற்கு நிர்ணயித்த தொகைக்கு நிகரான அல்லது அதற்கு மேல் நிலுவை வைக்கும் நாடுகளின் வாக்குரிமை நிறுத்தப்படும் என்று அந்த அமைப்பின் சாசனத்தில் விதிக்கப்பட்டுள்ளது. இதில் நைகர், லிபியா, மத்திய ஆபிரிக்க குடியரசு, கொங்கோ பிரசவில்லே, தென் சூடான் மற்றும் சிம்பாப்வே ஆகியவையே நிலுவையை செலுத்தாத எஞ்சிய ஆறு நாடுகளாகும். இது பற்றி பொதுச் சபைத் தலைவரான துருக்கியின் வொல்கள் பொஸ்கிருக்கு அனுப்பிய கடிதத்தில் குட்டரஸ் இதனைத் தெரிவித்துள்ளார். தமது வாக்குரிமையை பெறுவதற்கு அந்த நாடுகள் செலுத்த வேண்டிய தொகை பற்றியும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி ஈரான் குறைந்தது 16.2…

11 மில்லியன் இலங்கையர்களுக்கு கொரோனா தடுப்பூசி

அயல்நாடுகளுக்கு முன்னுரிமை என்ற தனது கொள்கைக்கு தொடர்ந்தும் முக்கியத்துவம் வழங்கப்படும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதிக்கு உத்தரவாதம் வழங்கியுள்ளார். கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தினை வழங்கும் நடவடிக்கைகளை வெற்றிகரமாக ஆரம்பித்துள்ளமைக்காகவும் நட்புறவு அயல்நாடுகள் குறித்த தாராள இப்போதும் உள்ளது. அதற்கான சட்டங்கள், அதற்கான அமைச்சுக்கள், பொறிமுறைகள் என அவை அனைத்தும் நடைமுறையில் உள்ளன. எனினும் அவை ஆளுநர்கள் மற்றும் அதிகாரிகளினால் செயற்படுத்தப்படுகின்றன.அதனை முழுமையானதாகக் கருதமுடியாது என்பதால் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டு மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவேண்டும். அதனூடாக மக்களுக்கான ஜனநாயகம் கிட்டுவதுடன் அதன் மூலம்மக்களுக்கான சேவைகள் சென்றடைய வேண்டும் என்பதே தேர்தல் ஆணைக்குழுவின் நிலைப்பாடு என்றும் அவர் தெரிவித்தார். புதிய தேர்தல் முறை, எல்லை நிர்ணயம் என பல்வேறு குறைபாடுகள் காரணமாக மேலும் பல வருடங்களை வீணடிக்க முடியாது. பழைய முறையில் தேர்தலை நடத்த…