மாஸ்டர் படத்தை நடிகை கீர்த்தி சுரேஷ் கண்டு ரசித்தார்.

விஜய் நடித்த மாஸ்டர் படத்தை சென்னை வெற்றி திரையரங்கில் நடிகை கீர்த்தி சுரேஷ் கண்டு ரசித்தார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். கொரோனாவால் ரிலீஸ் ஆகாமல் இந்த படம் பொங்கல் பண்டியையொட்டி இன்று வெளியானது.

காலை 4 மணிக்கு சிறப்பு காட்சிகள் வெளியானதையடுத்து திரையரங்குகளில் ரசிகர்கள் பட்டாசு வெடித்து நடனமாடி உற்சாகமாக கொண்டாடினர். படம் திரையிடப்பட்டபோது, ரசிகர்கள் ஆரவாரத்துடன் கூச்சல் எழுப்பி, கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் 800 க்கும் அதிகமான திரையரங்குகளில் மாஸ்டர் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ், சென்னை குரோம்பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்கில் மாஸ்டர் படத்தைப் கண்டு ரசித்தார். காலைக் காட்சியைப் பார்த்துவிட்டு டுவிட்டரில் கீர்த்தி சுரேஷ் கூறியதாவது:

ஒரு வருடம் காத்திருந்து மீண்டும் திரையரங்குக்குத் திரும்புவது எந்தளவுக்குப் பரவசமானது என்பதை என்னால் விவரிக்க முடியவில்லை. மாஸ்டர் படத்துக்காக வந்திருப்பது இன்னும் சிறப்பானது. இது மாஸ்டர் பொங்கல்டா என்று கூறி புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

Related posts