‘ஆயிரத்தில் ஒருவன்’ 2-ம் பாகத்தில் தனுஷ்

செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் 2-ம் பாகத்தை இயக்கப்போவதாக டுவிட்டரில் அறிவித்து உள்ளார்.
செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, பார்த்திபன், ரீமா சென், ஆண்ட்ரியா ஆகியோர் நடித்து 2010-ல் திரைக்கு வந்த ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு வித்தியாசமான கதை மற்றும் காட்சி அமைப்புகளுக்காக பாராட்டு கிடைத்தது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகுமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில் செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் 2-ம் பாகத்தை இயக்கப்போவதாக டுவிட்டரில் அறிவித்து உள்ளார். இதில் தனுஷ் நடிக்க உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார். இதுவரை கேட்டிருந்த காத்திருந்த என் அன்பு உள்ளங்களுக்கு இதோ உங்கள் முன்னால் என்று கூறி ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்துக்கான போஸ்டரையும் வெளியிட்டு உள்ளார். இதற்கு டுவிட்டரில் பதில் அளித்துள்ள தனுஷ், “இந்த படத்துக்கான முன் தயாரிப்பு பணிகளுக்கு மட்டுமே ஒரு வருடம் ஆகும். ஆனால் இது செல்வராகவனிடம் இருந்து வரும் கனவு படம். காத்திருத்தல் அதிகம்தான். ஆனால் அந்த தாமதத்துக்கு ஏற்றவகையில் படம் இருக்கும். இளவரசர் 2024-ம் ஆண்டு திரும்பி வருகிறார்” என்று தெரிவித்துள்ளார். தனுஷ் ஏற்கனவே செல்வராகவன் இயக்கத்தில் காதல் கொண்டேன். புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

Related posts