இரண்டு தடுப்பூசிகளும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை

லேசான காய்ச்சல் உடல்வலி போன்றவை ஒவ்வொரு தடுப்பூசிக்கும் பொதுவானவைதான் என்று இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையர் தெரிவித்தார்.

இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளித்த பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பின் ஆணையர் விஜி சோமானி கூறியதாவது;-

பாதுகாப்பில் சிறிதளவு குறைபாடு இருந்தாலும் நாங்கள் எதற்கும் ஒப்புதல் அளிக்க மாட்டோம். தடுப்பூசிகள் 110 சதவீதம் பாதுகாப்பானவை. லேசான காய்ச்சல், உடல் வலி, ஒவ்வாமை போன்றவை எந்த ஒரு தடுப்பூசிகளுக்கும் பொதுவானவைதான். ” என்றார்.

இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி சோமானி இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கோவிஷீல்டு தடுப்பூசிக்கு அவசர கால அனுமதி வழங்க மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு அமைப்பு பரிந்து செய்தது. கோவிஷீல்டு பரிசோதனை தொடர்பான விவரங்களை ஆய்வு செய்தோம்.

2 நிறுவனங்களின் தடுப்பூசிக்கு அவசர கால பயன்பாட்டுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடு அனுமதி அளிக்கப்படுகிறது. இதுவரை நடத்தப்பட்ட பரிசோதனைகளில் தடுப்பூசி பாதுகாப்பானது என்பது தெரியவந்துள்ளது.

2 தடுப்பூசிகளையும் 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் பராமரிக்கலாம்.கேடிலா நிறுவனத்தின் தடுப்பூசிக்கு 3-வது கட்ட சோதனை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ” என்றார்.

தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், ஆராய்ச்சியாளர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: – “ தடுப்பூசி கண்டுபிடிப்பிற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்ட விஞ்ஞானிகளுக்கும் இந்தியாவுக்கும் வாழ்த்துக்கள்.

கொரோனா இல்லாத நாடாக இந்தியாவை உருவாக்குவதில் முக்கிய திருப்பு முனை ஏற்பட்டுள்ளது. அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள இரண்டு தடுப்பூசிகளும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என்பது அனைத்து இந்தியர்களையும் பெருமை அடையச்செய்துள்ளது” என பதிவிட்டுள்ளார்.

Related posts