எமது அரசாங்கத்துக்கு அரசியல் பழிவாங்கும் எண்ணம் கிடையாது

எமது அரசாங்கம் ஒருபோதும் அரசியல் பழிவாங்கலை மேற்கொள்ளாது என பாதுகாப்பு செயலாளர் நாயகம் ஜெனரல் கமல் குணரத்ன கண்டியில் வைத்து தெரிவித்தார். புதிய அரசு ஆட்சிக்கு வந்த பிறகு அரசியல் பழிவாங்கும் எண்ணம் இருந்திருந்தால் , விசாரணைகளால் உறுதிப்படுத்தப்பட்டவர்களைத் தவிர, பலர் இன்று சிறைவாசம் அனுபவிப்பதை எம்மால் உணர்ந்து கொள்ள முடியும் எனவும் இந்த அரசாங்கத்தில் அரசியல் பழிவாங்கல் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் அவர் குறிப்பிடடார். மேற்று முன்தினம் (29) கண்டியிலுள்ள ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பாதுகாப்பு செயலாளர் நாயகம் அங்கு நடைபெற்ற மத வழிபாடுகளுக்கு பின்னர் ஊடகவியலாளர் மத்தியில் உரையாடுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்துரையாற்றிய அவர்: ஜனாதிபதியோ பிரதமரோ, அரசாங்கமோ எந்தவொரு அரசாங்க அதிகாரிகளையும் அரசியல் பழிவாங்ககளுக்கு உட்படுத்தும் எந்த எதிர்பார்ப்புகளும் கிடையாது எனவும் அதனை அவர்கள் ஒருபொழுதும்…

ரஜினி அரசியலை கைவிட்டதால் தப்பிப்பிழைத்தது தமிழ்நாடு

திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க மாட்டேன் என்று அறிவித்ததால் தமிழ்நாடு தப்பிப் பிழைத்துள்ளது என இலங்கையின் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இந்திய வம்சாவளி குடும்பத்தை சேர்ந்தவரான மனோ கணேசன், இலங்கையில் பிறந்தவர் என்றபோதும் தமிழ்நாடு தொடர்பான தகவல்களை மிகவும் உன்னிப்பாக கவனித்து வருபவர். சமூக ஊடகங்களில் மனதில் பட்டதை பதிவிடும் வழக்கத்தைக் கொண்டிருக்கும் இவர், ரஜினியின் அரசியல் கைவிடல் அறிவிப்புக்கு பிறகு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நீளமான கட்டுரையை எழுதியிருக்கிறார். அதை இங்கே வழங்குகிறோம். ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், தமிழ்நாடு, பல வட இந்திய மாநிலங்களை விட முன்னேறிய ஒரு மாநிலம். வட இந்தியாவில், டெல்லி, மும்பாய், கொல்கத்தா, சண்டிகர், அஹமதாபாத் ஆகிய மாநகரங்களை சுற்றிய பகுதிகளில் மட்டுமே "முன்னேற்றம்" தெரியும். வட இந்தியாவில், உள்ளூரில்,…

பைசர் தடுப்பூசியை தொடர்ந்து ஆக்ஸ்போர்டின் தடுப்பூசி

புதிய வகை கொரோனா வேகமாக பரவும் சூழலில் பைசர் தடுப்பூசியை தொடர்ந்து ஆக்ஸ்போர்டின் தடுப்பூசிக்கும் இங்கிலாந்து ஒப்புதல் வழங்கி உள்ளது. இங்கிலாந்தில் நேற்று ஒரே நாளில் 53 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகள் பதிவாகி உள்ளது.அரசின் புள்ளிவிவரங்கள் படி கடந்த 24 மணி நேரத்தில் 53,135 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இங்கிலாந்தில் 71,100 க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளன. தலைநகர் லண்டனில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை பிரிவு மொத்தமாக முடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், லண்டன் மருத்துவமனைகளில் இடம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், மருத்துவமனைகளுக்கு வெளியே கூடாரங்கள் அமைத்து நோயாளிகளை பராமரிக்க வேண்டிய மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பொதுவாக போர் காலகட்டத்தில் இதுபோன்ற கூடாரங்கள் அமைத்தே நோயாளிகளை பரமாரிக்கும் நிலை உருவாகும்.தற்போது லண்டனிலும் அதே நிலை…

“அரசியலில் இருந்து விலகுகிறேன்” – தமிழருவி மணியன்

ஜனவரியில் கட்சி ஆரம்பிப்பேன் என நடிகர் ரஜினிகாந்த் அறிவித்திருந்த நிலையில் திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றி இனி கட்சி ஆரம்பிக்கப்போவதில்லை என்று நேற்று அறிவித்தார். முன்னதாக ரஜினி தொடங்க இருந்த கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியன் நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அரசியலில் இருந்து தான் விலகுவதாக தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “என் கல்லூரிப் பருவத்தில் நான் காமராஜர் காலடியில் என் அரசியல் வாழ்வைத் தொடங்கினேன். ஐம்பதாண்டுகளுக்கு மேல் நீண்ட என் அரசியல் வேள்வி அப்பழுக்கற்றது. இரண்டு திராவிட கட்சிகளால் தமிழகத்தின் அனைத்து மேலான பொதுவாழ்க்கைப் பண்புகளும் பாழடைந்துவிட்டன. அரசியல் ஊழல் மலிந்த சாக்கடையாகச் சரிந்துவிட்டது. சாதி, மதம், இனம், மொழி ஆகியவற்றின் பெயரால் சுய ஆதாயம் தேடும் மலினமான பிழைப்புவாதிகளின் புகலிடமாக அரசியல் களம் மாறிவிட்டது. இங்கே நேர்மைக்கும், உண்மைக்கும், ஒழுக்கத்திற்கும் எள்ளளவும்…

மாகாண சபை தேர்தல் திகதி குறிப்பிடப்படாது ஒத்திவைப்பு

கொரோனா தொற்றுப் பரவல் மற்றும் மஹா சங்கத்தினரின் வேண்டுகோள் உள்ளிட்ட நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பல்வேறு காரணங்களையும் கருத்தில் கொண்டு மாகாணசபைத் தேர்தல் நடத்துவதை திகதி குறிப்பிடப்படாது பிற்போடுவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கோவிட் 19 தொற்று பரவலின் நிலைமை, புதிய தேர்தல் முறையொன்று தயாரிக்கப்படும் வரையும், மற்றும் மஹா சங்கத்தினரால் முன்வைக்கப்பட்டுள்ள எதிர்ப்புகள் என்பவற்றை கவனத்தில் கொண்டு மாகாணசபைத் தேர்தல் நடத்துவதை பிற் போடுவதற்கு நேற்று முன்தினம் (28) கூடிய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதென சுற்றாடல்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார் அமைச்சு அலுவலகத்தில் நேற்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். நேற்று ஆரம்பமான சிவனொளிபாதமலை யாத்திரை தொடர்பில் பேசிய அமைச்சர், யாத்திரையின்போது மலையை அண்டிய பகுதிகளில் குப்பை கூளங்கள், பொலித்தீன், பிளாஸ்டிக்…