ரஜினி அரசியல் விலகல் தலைவர்கள் கருத்துக்கள்..

ரஜினியின் முடிவை முழு மனதுடன் ஆதரிக்கிறேன் என்று அர்ஜுன மூர்த்தி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். ரஜினியின் இந்த அறிவிப்பு தொடர்பாக பலரும் அர்ஜுனமூர்த்தியின் கருத்தைத் தெரிவித்துக் கொள்ள ஆர்வமாய் இருந்தார்கள். ஏனென்றால் அவர் பாஜக கட்சியிலிருந்து விலகி ரஜினி தொடங்கவுள்ள கட்சியில் இணைந்திருந்தார். தற்போது ரஜினியின் இந்த அறிவிப்பு தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் அர்ஜுனமூர்த்தி கூறியிருப்பதாவது: "ரஜினியின் மனம் எவ்வளவு கடுமையான உளைச்சலில் இருக்கும் என்பது எனக்குத் தெரியும். அவரது இந்த முடிவை நான் முழு மனதுடன் ஆதரிக்கிறேன்" இவ்வாறு அர்ஜுனமூர்த்தி தெரிவித்துள்ளார். ----- ரஜினிகாந்த்தின் அரசியல் நிலை ஏற்புடையது என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று வெளியிட்ட அறிக்கை: "ரஜினிகாந்த் நல்ல உடல் நலத்துடன் நீடூழி வாழ வேண்டும். அவர் அரசியல்…

விஜய் போன்று ஒவ்வொரு நாயகனும் நினைக்க வேண்டும்

விஜய் போன்று ஒவ்வொரு நாயகனும் நினைக்க வேண்டும் என்று திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் வேண்டுகோள் விடுத்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. தணிக்கைப் பணிகள் முடிந்ததால், ஜனவரி 13-ம் தேதி வெளியிடலாம் என்று படக்குழு முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. நாளை (டிசம்பர் 29) மதியம் 12:30 மணியளவில் 'மாஸ்டர்' வெளியீடு குறித்த முக்கிய அப்டேட் ஒன்றை வெளியிடவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. இதனிடையே, இன்று (டிசம்பர் 28) திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அச்சந்திப்பில் 'மாஸ்டர்' வெளியீடு மற்றும் விஜய் எடுத்த முடிவு குறித்து திருப்பூர் சுப்பிரமணியம் கூறியதாவது: " 'மாஸ்டர்' படம் பொங்கலுக்கு வெளியாவது உறுதி. இன்று காலை தயாரிப்பாளர் எங்களிடம் இதனை உறுதிப்படுத்தினார். ஜனவரி…

உங்கள் முடிவு ஒவ்வொரு தமிழரின் இதயத்தையும் நொறுக்கியுள்ளது

உங்கள் முடிவு ஒவ்வொரு தமிழரின் இதயத்தையும் நொறுக்கியுள்ளது என்று ரஜினியின் அரசியல் முடிவு தொடர்பாக குஷ்பு தெரிவித்துள்ளார். டிசம்பர் 31-ம் தேதி தனது கட்சியின் தொடக்க நாளை அறிவிப்பதாக இருந்தார் ரஜினி. ஆனால், 'அண்ணாத்த' படப்பிடிப்புக்காக ஹைதராபாத்தில் இருந்த அவருக்கு திடீரென்று ரத்த அழுத்த மாற்றம் ஏற்பட்டது. இதற்கான சிகிச்சை எடுத்துக்கொண்டு சென்னை திரும்பினார் ரஜினி. அப்போது மருத்துவர்கள் பல்வேறு விஷயங்களை அவருக்கு அறிவுறுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து தனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, அரசியல் வருகை இல்லை என்பதை அதிகாரபூர்வமாக இன்று அறிவித்துவிட்டார் ரஜினி. இதற்காக விடுத்துள்ள நீண்ட அறிக்கையில் தனது சூழ்நிலையை விளக்கிவிட்டு, ரசிகர்களிடமும், தமிழக மக்களிடமும் மன்னிப்பு கோரியுள்ளார். ரஜினியின் இந்த முடிவுக்குப் பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். தற்போது ரஜினியின் முடிவு குறித்து ரஜினியின் நெருங்கிய தோழியும், பாஜக கட்சியைச் சேர்ந்தவருமான குஷ்பு…

ஜனவரி 13ம் தேதி ‘மாஸ்டர்’ திரைப்படம் திரையரங்குகளில்

ஜனவரி 13ம் தேதி மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘மாஸ்டர்’. இந்தப் படத்துக்கு இசை - அனிருத். இந்த படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் போன்றோர் நடித்துள்ளார்கள். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, திரையரங்குகள் எட்டு மாதங்களாக இயங்கவில்லை. இதனால் மாஸ்டர் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து மாஸ்டர் பட விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் பழனிசாமியை நடிகர் விஜய் நேற்று சந்தித்துப் பேசினார். திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களை (தற்போது 50 சதவீதமாக உள்ளது) அனுமதிக்குமாறு முதல்வரிடம், நடிகர் விஜய் கோரிக்கை வைத்ததாக தகவல்கள் வெளியாகின. நடிகர் விஜயுடன், படத் தயாரிப்பாளர் லலித் குமார் உள்பட படக்குழுவினரின் சந்திப்பில் அமைச்சர்…

கட்சி தொடங்கவில்லை நடிகர் ரஜினிகாந்த் – பரபரப்பு அறிக்கை

கட்சி தொடங்கவில்லை ; அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன் ரஜினிகாந்த் பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். நடிகர் ரஜினிகாந்த் ‘அடுத்த மாதம் கட்சி தொடங்க உள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு டிசம்பர் 31-ந்தேதியன்று வெளியிடப்படும்’ என்றும் கடந்த 3-ந்தேதி அறிவித்து இருந்தார். அடுத்த மாதம் முதல் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதால், அதற்கு முன்பாக ‘அண்ணாத்த’ படத்தில் தான் சம்பந்தப்பட்ட காட்சிகளை முழுமையாக படமாக்கி முடித்துவிடும்படி படக்குழுவினரிடம், ரஜினிகாந்த் தெரிவித்து இருந்தார். இதையடுத்து கடந்த 14-ந்தேதி முதல் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு தொடங்கி நடந்து வந்தது. இந்த படப்பிடிப்பில் கலந்துகொண்ட 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த படக்குழுவில் இருந்த ரஜினிகாந்த் உள்ளிட்டோருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது…