ஓடிடியில் ‘மாறா’ ஜனவரி 8 வெளியீடு !

அமேசான் ஓடிடி தளத்தில் ‘மாறா’ படத்தின் வெளியீட்டுத் தேதி முடிவு செய்யப்பட்டுள்ளது.
2015-ம் ஆண்டின் கிறிஸ்துமஸ் விடுமுறையைக் கணக்கில் கொண்டு கேரளாவில் வெளியான மலையாளப் படம் ‘சார்லி’. துல்கர் சல்மான், பார்வதி மேனன், அபர்ணா கோபிநாத், நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் நடித்த இப்படத்தை மார்டின் ப்ராகாட் இயக்கியிருந்தார். இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கை பிரமோத் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பல்வேறு விளம்பரப் படங்களை இயக்கிய திலீப் குமார் இயக்கியுள்ள இந்தப் படத்தில், மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஷிவதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைப்பாளராகப் பணிபுரிந்துள்ளார்.
கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியிடுவது என முடிவானது. ஆனால், எப்போது வெளியீடு என்பது முடிவாகாமல் இருந்தது. தற்போது ஜனவரி 8-ம் தேதி ‘மாறா’ வெளியாகும் என்று அமேசான் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தற்போது ‘மாறா’ படத்தின் பாடல்களை வெளியிட்டு, விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கியுள்ளனர்.

Related posts