அலைகள் வாராந்த பழமொழிகள் 03.12.2020

01. உங்கள் வெற்றியை தடுத்து நிறுத்துவது எது தெரியுமா..? நீங்கள் செய்ய விரும்பும் காரியம் உங்கள் திறனுக்கு அப்பாற்பட்டதென நீங்கள் சிந்திக்கும் போதுதான். 02. நாம் ஒரு காரியத்தை செய்ய முன்னரே அதை அடக்கியாழும் சக்திகள் அதைவிட வேகமாக எம் முன்னால் வந்துவிடுகின்றன. 03. முன்னேற அதிர்ஸ்டம் வேண்டும், பணம் வேண்டும், செல்வாக்கு வேண்டும் என்பதெல்லாம் பொய்யான காரணங்கள். 04. என்றோ ஒரு நாள் வாய்ப்பு வரும் அது என் கதவை தட்டுமென்று காத்துக்கிடக்காதே அப்படி எதுவும் வராது, நீ முயற்சிக்காவிட்டால். 05. நீங்கள் செய்ய விரும்பும் ஒன்றை உங்களால் செய்ய முடியாது என்று கருதுகின்ற மக்கள் வெற்றி பெறாத மக்கள். 06. உங்களால் சாதிக்க முடியாது என்று உங்களை நம்ப வைக்கும் மக்களுக்கு எதிராக எப்போதுமே ஒரு தற்பாதுகாப்பை ஏற்படுத்துங்கள். 07. உங்களால் வெற்றி பெற…

ரஜினியுடன் கூட்டணி அமைக்கவும் வாய்ப்புள்ளதாக பன்னீர்செல்வம்

வருங்காலத்தில் சூழ்நிலையை பொறுத்து ரஜினியுடன் கூட்டணி அமைக்கவும் வாய்ப்புள்ளதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் பற்றிய தனது அறிவிப்பினை இன்று உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் ஜனவரியில் கட்சியை துவங்க உள்ளதாகவும், டிசம்பர் 31-ல் அது பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் இந்த அறிவிப்பு தமிழக அரசியல் சூழலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஜினியின் அரசியல் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கும் அவரது ரசிகர்கள், அவரது இந்த அறிவிப்பால் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர். மேலும் இது குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் ரஜினிகாந்தின் அறிவிப்பு குறித்து பேசினார். அப்போது அவர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் அவரை வரவேற்கிறோம் என்று தெரிவித்தார். மேலும் அரசியலில்…

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதியானது

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் பற்றிய தனது அறிவிப்பினை டுவிட்டர் வழியே இன்று உறுதிப்படுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று, #மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம் #இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல என்ற ஹேஷ்டாக்குகளும் இடம் பெற்றுள்ளன. இதுபற்றி அவரது டுவிட்டரில் வெளியிடப்பட்ட மற்றொரு செய்தியில், வர போகிற சட்டசபை தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம்... அதிசயம்... நிகழும்!!! என்றும் தெரிவித்து உள்ளார். நடிகர் ரஜினியின் அரசியல் அறிவிப்பு டுவிட்டரில் இப்போ இல்லேன்னாஎப்பவும்_இல்ல ஹேஷ்டேக்! டிரெண்டாகி உள்ளது ரஜினியின் அரசியல் கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியன் நியமனம்; கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜூண மூர்த்தி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.…

ரஜினி தனது அரசியல் வருகையை உறுதி செய்தார்

ரஜினியின் அரசியல் வருகைக்கு, திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி தனது அரசியல் வருகையை உறுதி செய்தார் ரஜினி. அதற்குப் பிறகு பலமுறை அவரது அரசியல் வருகை குறித்து பல்வேறு கருத்துகள், சர்ச்சைகள் எழுந்து வந்தன. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்காகக் கட்சித் தொடக்கம் உள்ளிட்ட பணிகளைத் தொடங்கினார் ரஜினி. அந்தச் சமயத்தில் தான் கரோனா அச்சுறுத்தலால் நிலைமை தலைகீழானது. அனைவருமே ரஜினி தனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அரசியலுக்கு வரமாட்டார் என்று பேசத் தொடங்கினார்கள். அனைத்தையுமே பொய்யாக்கும் விதத்தில் இன்று (டிசம்பர் 3) தனது அரசியல் வருகையை உறுதி செய்திருக்கிறார். ரஜினியை அரசியல் வருகைக்கு, தமிழ்த் திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களுடைய வாழ்த்தைத் தெரிவித்து வருகிறார்கள். கார்த்திக் சுப்புராஜ், அனிருத், லாரன்ஸ் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் தங்களுடைய…

என்னை வாழ வைத்த தெய்வங்களே! ரஜினி

‘வரப்போகிற சட்டப்பேரவைத் தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, சாதி மதச் சார்பற்ற ஆன்மிக அரசியல் உருவாவது நிச்சயம். அற்புதம், அதிசயம் நிகழும்!’ என்று ஒரு ட்வீட்டால் தமிழகத்தின் அரசியலையே திருப்பிப் போட்டிருக்கிறார் ரஜினிகாந்த். ரஜினி, இப்போதுதான் அரசியலுக்கு வருகிறார். இப்போதுதான் அரசியல்வாதி ஆகியிருக்கிறார்; இனி அவர் அரசியல் என்ன ஆகப்போகிறது என்றெல்லாம் பேசுகிறார்கள். பேசுவது இயல்புதான். ஆனால் கருணாநிதி, ‘எனதருமை உடன்பிறப்புகளே!’ என்பது போல, எம்ஜிஆர், ‘என் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளே, தாய்க்குலமே!’ என்றது போல, ‘என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களே’ என்று எப்போது இதே ரஜினி மேடையில் உச்சரித்துப் பேச ஆரம்பித்தாரோ அப்போதே அரசியலுக்கு வந்துவிட்டார் என்பதுதான் நிஜம். அநேகமாக அது 1991 வாக்கிலேயே நடந்துவிட்டது. அது ரஜினிக்கு மட்டுமே தெரிந்த உண்மை. 1995ஆம் ஆண்டில்…

இலங்கையை விட்டு விலகி​ சென்ற புரெவி..

புரெவி (“BUREVI”) என்ற சூறாவளியானது தற்போது மன்னாருக்கும் பூநகரிக்கும் இடையிலாக நாட்டை விட்டு விலகிச் சென்றுவிட்டதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரையான வேகம் கொண்ட இந்த சூறாவளியானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 90 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் வீசக்கூடும். கொழும்பிலிருந்து மன்னார் மற்றும் காங்கேசந்துறை ஊடாக திருகோணமலை வரையான ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் நாளை காலை வரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள். ஏனைய கடற்பரப்புகளில் மீனவர்கள் அவதானமாக இருக்குமாறும் வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள். வடக்கு, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை…