எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பெயரில் இசை பள்ளி

நெல்லூரில் உள்ள அரசின் இசை மற்றும் நடன பள்ளிக்கு டாக்டர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அரசு இசை மற்றும் நடன பள்ளி என்ற பெயரை சூட்டி ஆந்திர அரசு கவுரவித்துள்ளது. இந்திய திரையுலகின் புகழ் பெற்ற பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் செப்டம்பர் 25-ந் தேதி மரணம் அடந்தார். அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு பாரத ரத்னா, தாதா சாகேப் பால்கே விருதுகள் வழங்க வேண்டும் என்று பலர் வற்புறுத்தினர். இந்த நிலையில் ஆந்திர அரசின் இசைப்பள்ளிக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து ஆந்திர தொழில் வர்த்தகம் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மிகபட்டி கவுதம் ரெட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அனைவராலும் மதிக்கப்பட்ட தன்னிகரற்ற பாடகர். நெல்லூரில்…

ரிலீசுக்கு தயாராகும் பெரிய படங்கள்

கொரோனா ஊரடங்கால் 7 மாதங்கள் முடங்கி இருந்த திரையுலகம் தளர்வு காரணமாக இப்போது மீண்டு வருகிறது. சினிமா படப்பிடிப்புகள் தொடங்கி உள்ளன. தியேட்டர்கள் திறக்கப்பட்டு புதிய படங்கள் ரிலீசாகி கொண்டு இருக்கின்றன. சிறிய படங்கள் மட்டுமே திரைக்கு வருவதால் எதிர்பார்த்த அளவுக்கு தியேட்டர்களில் கூட்டம் இல்லை. எனவே பெரிய படங்கள் வருகையை ரசிகர்களும், திரையுலகினரும் எதிர்பார்க்கிறார்கள். தற்போதைய சூழ்நிலையில் ஜெயம் ரவியின் பூமி, விஷாலின் சக்ரா, கார்த்தியின் சுல்தான், தனுசின் ஜெகமே தந்திரம், விஜய்சேதுபதியின் மாமனிதன், லாபம், சிவகார்த்திகேயனின் டாக்டர் உள்ளிட்ட சில பெரிய படங்கள், அனைத்து தொழில்நுட்ப வேலைகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளன. இந்த படங்களை அடுத்தடுத்து திரைக்கு கொண்டுவர ஏற்பாடுகள் நடக்கின்றன. கார்த்தியின் சுல்தான் படமும் பொங்கல் போட்டியில் உள்ளது. ஏற்கனவே ஓ.டி.டி.யில் வெளியான சில பெரிய படங்கள் 4 மாதத்துக்கு பிறகு…

விஜய் நடித்த ‘மாஸ்டர்’ ஓ.டி.டி.யில் வெளியாகிறது

விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படம் பொங்கல் விருந்தாக ஓ.டி.டி.யில் வெளியாகிறது. விஜய் தற்போது ‘மாஸ்டர்’ என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்தப் படம் தீபாவளி விருந்தாக வெளிவர இருந்தது. கொரோனா தொற்று காரணமாக தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்ததால், ‘மாஸ்டர்’ படம் வெளியாகவில்லை. சமீபத்தில் தியேட்டர்கள் அனைத்தையும் திறப்பதற்கு அரசு அனுமதி வழங்கியது. அதைத் தொடர்ந்து, ‘மாஸ்டர்’ படம் பொங்கல் விருந்தாக தியேட்டர்களில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், சூர்யா நடித்த ‘சூரரைப்போற்று’ ஓ.டி.டி.யில் வெளியிடப்பட்டது. அந்தப் படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியது. ரூ.100 கோடி வசூல் செய்ததாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து, விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படமும், ஓ.டி.டி.யில் வெளியாகலாம் என்று பேசப்பட்டது. அது இப்போது உறுதியாகியிருக்கிறது. மாஸ்டர் படத்தை வருகிற பொங்கல் அன்று ஓ.டி.டி.யில் திரையிடுவதற்கு ஏற்பாடுகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.…

சட்டவிரோத மதமாற்றம் 10 ஆண்டுகள் சிறை

நேர்மையற்ற முறையில் மதம் மாறுவது, சட்டவிரோத மதமாற்றம்,ஆகியவற்றைத் தடுக்க கொண்டுவரப்பட்ட அவசரச் சட்டத்துக்கு உத்தரப்பிரதேச ஆளுநர் இன்று ஒப்புதல் அளித்துள்ளார். நேர்மையற்ற முறையில் மதம் மாறுவது, சட்டவிரோத மதமாற்றம்,ஆகியவற்றைத் தடுக்கும் வகையில் புதிய வரைவு சட்டமசோதா உருவாக்கப்பட்டது. இந்த வரைவு சட்ட மசோதாவுக்கு இந்த வாரத் தொடக்கத்தில் உத்தர பிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, இந்த அவசரச் சட்டத்துக்கு உத்தரப்பிரதேச ஆளுநர் இன்று ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து, இந்த குற்றங்களில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என அவசரச்சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கட்டாயமாக மதமாற்றம் செய்தல், நேர்மையற்ற முறையில் குறிப்பாக திருமணத்துக்காக மதம் மாறுதல், ஆகியவற்றில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று சட்டமசோதாவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல் அதுபோன்று நடத்தப்படும் திருமணம் சட்டப்படி செல்லாது என்று அறிவிக்கப்படும்,…

உன்னதத்தின் ஆறுதல்! வாரம் 20. 48

மிகுந்த சந்தோசம் உண்டாகட்டும்! சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை. ரெகொபோத் ஊழியங்கள் - டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம். இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். லூக்கா 2:10. கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் முகமாக முழுஉலகம் தயாராகிக் கொண்டு வருகிறது. ஆனால் தயாராகிக் கொண்டுவரும் உலகத்தால் உண்மையான மகிழ்ச்சியைக் கொண்டாட முடியதாவாறு பல துன்பங்கள் அழிவுகள் வந்ததையும், வருவதையும் நாம் காணக்கூடியதாக உள்ளது. அண்மைக்காலமாக ஆபிரிக்கா, அரபுதேசங்களில் மதக்கலவரங்களினாலும், பயங்கர வாதிகளின் நடபடிக்கையினாலும் மிகப்பெரிய அழிவை ஏற்பட்டு வருகிறது. இன்னும் பலநாடுகளில் உள்நாட்டுக் கலவரங்கள் உலகத்தை உலுக்கிய வண்ண மாக உள்ளது. இலங்கைத் தமிழ் மக்களுக்கு மாவீரர் தினத்தின் துயரங்களும், துன்பங்களும் மிகவேதனை நிறைந்த வாழ்வை நாளாந்தம் ஞாபகப்படுத்திக் கொண்டு வருகிறது. உற்றாரை இழந்து செய்வது அறியாது கலங்கி நிற்கும் மக்கள் ஒருபக்கம், மரணம் வந்து…

முகநூலில் மாவீரர் நினைவேந்தல் பாடல்களை பதிவேற்றிய இளைஞன் கைது

திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் முகநூல் ஊடாக மாவீரர் நினைவேந்தல் பாடல்களை பதிவேற்றிய குற்றச்சாட்டின் பேரில் இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்றிரவு (27) இடம் பெற்றுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர் சம்பூர் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய இளைஞன் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். மாவீரர் தினத்தை முன்னிட்டு தன்னுடைய முகநூல் ஊடாக மாவீரர்களை நினைவு கூர்ந்து பாடல்களை பதிவேற்றம் செய்த குற்றச்சாட்டின் பேரில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்ததாகவும் குறித்த இளைஞனை மூதூர் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.