இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் அயலான்

சிவகார்த்திகேயன் நடிக்கும் 'அயலான்' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. 24 ஏ.எம். நிறுவனத்தின் தயாரிப்பில் தொடங்கப்பட்ட படம் 'அயலான்'. ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், இஷா கோபிகர், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வந்தனர். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வந்தார். பைனான்ஸ் சிக்கலால் நீண்ட நாட்களாக இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருந்தது. இறுதியில், இந்தப் படத்தின் உரிமையைக் கைப்பற்றியது கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம். அதனைத் தொடர்ந்து படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வந்தது. இடையே, நெல்சன் இயக்கத்தில் உருவாகும் 'டாக்டர்' படத்தில் நடிக்கத் தொடங்கினார் சிவகார்த்திகேயன். இதையும் கே.ஜே.ஆர் நிறுவனமே தயாரித்து வந்தது. தற்போது 'டாக்டர்' படத்துக்கு ஒரே ஒரு பாடலைத் தவிர, ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் முடிவடைந்துவிட்டது. இதனால், 'அயலான்' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பைத்…

தனுஷ் – ராம்குமார் இணையும் ‘வால் நட்சத்திரம்’?

ராம்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள படத்துக்கு 'வால் நட்சத்திரம்' எனத் தலைப்பிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 'கர்ணன்' படத்தை முடித்துவிட்டு, ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் உருவாகும் இந்திப் படமான 'அந்தரங்கி ரே'வில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். அதை முடித்துவிட்டு கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கியுள்ளார். இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ளது. கார்த்திக் நரேன் படம் தவிர்த்து, 'ராட்சசன்' இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் உருவாகும் படத்தையும் சத்யஜோதி நிறுவனம்தான் தயாரிக்கவுள்ளது. தனுஷ் நாயகனாக நடிக்கவுள்ள இப்படத்தின் பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகின்றன. முழுக்க கிராபிக்ஸ் பின்னணியில் உருவாகும் படம் என்பதால், அனைத்தையும் திட்டமிட்டுவிட்டு, பின்பு படப்பிடிப்புக்குச் செல்லப் படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்துக்கு 'வால் நட்சத்திரம்' எனத் தலைப்பிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ராம்குமார் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கும் முன்பு, கார்த்திக் நரேன் இயக்கவுள்ள…

டிசம்பரில் அடுத்த படத்தைத் தொடங்கும் வெற்றிமாறன்

டிசம்பரில் சூரி நடிக்கவுள்ள படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளார் இயக்குநர் வெற்றிமாறன். 'அசுரன்' படத்தின் வெற்றிக்குப் பிறகு, எல்ரெட் குமார் தயாரிக்கவுள்ள படத்தை இயக்க ஒப்பந்தமானார் வெற்றிமாறன். ஆனால், அதற்கு முன்னதாகவே சூரியை வைத்து ஒரு படம் இயக்கத் திட்டமிட்டார். ஆகையால், முதலில் எல்ரெட் குமார் தயாரிக்கும் படமா, சூரி நடிக்கும் படமா என்பதில் குழப்பம் நீடித்து வந்தது. இறுதியாக சூரி நடிக்கும் படத்தை வெற்றிமாறனே இயக்கி, தயாரிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் சத்தியமங்கலம் காடுகளில் தொடங்கவுள்ளது. ஒரே கட்டமாக ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடித்துவிட்டுதான் சென்னை திரும்புவதற்குப் படக்குழு முடிவு செய்துள்ளது. சூரி படத்தை முடித்துவிட்டு, எல்ரெட் குமார் தயாரிக்கும் படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இதில் மீண்டும் தனுஷை இயக்கவுள்ளார். இதற்காக தனுஷ் எப்போது தேதிகள் ஒதுக்கியுள்ளார் என்பதில் தெளிவில்லாமல் உள்ளது. தனுஷ் படத்தை முடித்துக் கொடுத்துவிட்டுதான்,…

ஏ.ஆர்.முருகதாஸின் புதிய முயற்சி

தமிழ்த் திரையுலகில் ஏ.ஆர்.முருகதாஸ் புதிய முயற்சி ஒன்றை எடுக்கத் திட்டமிட்டுள்ளார். விஜய் நடிக்கவுள்ள 'தளபதி 65' படத்தை இயக்க ஒப்பந்தமாகியிருந்தார் ஏ.ஆர்.முருகதாஸ். ஆனால், தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகிவிட்டார். இப்போது வரை 'தளபதி 65' இயக்குநர் யார் என்பது முடிவாகவில்லை. தற்போது, ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த படம் என்ன என்பது குறித்துப் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. சிம்புவை இயக்கவுள்ளார், தெலுங்குப் படம் இயக்கவுள்ளார் என்றெல்லாம் செய்திகள் பரவி வருகின்றன. ஆனால், ஏ.ஆர்.முருகதாஸ் எந்தவொரு நாயகனையும் வைத்து அடுத்த படத்தை உருவாக்கவில்லை. ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து பல்வேறு படங்களைத் தயாரித்து வந்தார். அவர் நேரடியாக ஒரு படம் இயக்குவதற்கு ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் இருந்தது. அந்தப் படத்தைத்தான் இப்போது இயக்க ஆயத்தமாகி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இந்தப் படம்…

குழந்தைகளை நல்வழியில் நடத்தி செல்வது ஒரு சவால்

குழந்தைகளை நல்வழியில் நடத்தி செல்வது ஒரு சவால் என்ற கருத்தை சொல்லும் குழந்தைகளுக்கான படம். “ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதாண்டா வளர்ச்சி உன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி...” என்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல் வரிகளின் கருத்தை அடிப்படையாக வைத்து, ‘தகவி’ படத்தை உருவாக்கி வருகிறோம் என்கிறார் டைரக்டர் சந்தோஷ்குமார். “குழந்தைகளை வளர்ப்பது ஒரு கலை. அவர்களை நல்வழியில் நடத்தி செல்வது ஒரு சவால் என்ற கருத்தை சொல்லும் குழந்தைகளுக்கான படம், இது” என்று கூறுகிறார் இவர். எஸ்.நவீன்குமார் தயாரிக்கும் இந்த படத்தில், ‘நான் கடவுள்’ ராஜேந்திரனுடன் ராகவ், ஜெய் போஸ் ஆகிய இருவரும் கதாநாயகன்களாக நடித்துள்ளனர். பயில்வான் ரங்கநாதன், அஜய் ரத்னம், வையாபுரி, சாப்ளின் பாலு மற்றும் பல குழந்தைகள் முக்கிய வேடம் ஏற்றுள்ளனர். கவிஞர் பிறைசூடனின் மகன் தயானந்த் இசையமைக்கிறார்.…