திரையரங்கின் தற்போதைய நிலை: மிஷ்கினின் கவலை

தன் வாழ்க்கையை ஓடவைத்த திரையரங்கின் தற்போதைய நிலை குறித்து இயக்குநர் மிஷ்கின் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். ஆண்ட்ரியா பிராதன கதாபாத்திரத்தில் நடிக்கும் 'பிசாசு 2' படத்தை இயக்கத் தயாராகி வருகிறார் மிஷ்கின். கார்த்திக் ராஜா இசையமைக்கவுள்ள இந்தப் படத்தை ராக்போர்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இந்நிலையில் திண்டுக்கல்லில் சிறுவயதில் சென்று படம் பார்த்த திரையரங்கின் தற்போதைய நிலை குறித்து ஃபேஸ்புக்கில் நீண்ட பதிவொன்றை வெளியிட்டுள்ளார் மிஷ்கின். அந்தப் பதிவில் மிஷ்கின் கூறியிருப்பதாவது: "இன்று மதியம் திண்டுக்கல்லில் உள்ள என்.வி.ஜி.பி தியேட்டருக்குச் சென்றேன். பழைய ஞாபகங்கள் பெருவெள்ளமாய் என்னை அடித்தன. என்னுடைய ஐந்தாவது வயதில் என்னுடைய தந்தை என்னை இந்த தியேட்டருக்குள் அழைத்துச் சென்றார். படம் பார்த்துவிட்டு வெளியே வந்தேன். “எப்படிப்பா இருக்கு?” என்று என் தந்தை கேட்க. “ரொம்ப நல்லாருக்குப்பா” என்று சொன்னேன்.…

காவல்துறை உங்கள் நண்பன்

அதிகார வர்க்கமும், நமது நிர்வாக அமைப்பும் எப்படி சாதாரண மக்களை மிக எளிதாகப் பந்தாட முடியும் என்பதை இயல்பாகப் பதிவு செய்திருக்கும் படம் 'காவல்துறை உங்கள் நண்பன்'. குடும்பத்தை விட்டுப் பிரிந்து காதல் திருமணம் செய்து கொண்டிருக்கும் இளம் ஜோடி சுரேஷ் ரவி மற்றும் ரவீனா. சென்னை புறநகரில் தனியாக வசித்து வருகின்றனர். ஒரு நாள் ரவீனாவுக்கு சில சமூக விரோதிகளால் மோசமான அனுபவம் ஏற்பட, அவர்களைத் தேடி மனைவியுடன் பைக்கில் கிளம்புகிறார் சுரேஷ் ரவி. வழியில் ஒரு காவல்துறை அதிகாரி சோதனைக்கு வழிமறிக்க, அப்போது சுரேஷ் ரவி சொல்லும் ஒரே ஒரு வார்த்தையினால் அவரது வாழ்க்கையே மொத்தமாக மாறிப் போகிறது. சுரேஷ் ரவி, தார்மீகமான கேள்விகள், கோபம் எழும்போதும், சரி ஒதுங்கிப் போவோம் என முடிவெடுத்து மன்னிப்புக் கேட்கும்போதும் மிக யதார்த்தமாகத் தெரிகிறார். காதல் காட்சிகளில்…

காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் நீதி கிடைக்கவில்லை

காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் இதுவரையில் நீதி கிடைக்கவில்லை. இந்த நேரத்தில் இவர்களை நினைவுகூர்ந்து அவர்களுக்கு அனுதாப அஞ்சலியை செலுத்திக்கொள்கின்றேன். ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டும் மற்றும் ஊடக நிறுவனங்கள் தாக்கப்பட்டுள்ள போதிலும் அவர்கள் இந்த நாட்டின் நற் பெயருக்கு தீங்கு ஏற்படாத வகையிலும் அரசியல் மற்றும் சமூக பொருளாதார அபிவிருத்திக்கு தங்களுடைய பங்களிப்பை செய்து வருகின்றனர் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் பாராளுமன்றில் இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார். போர்ச்சூழலில்கூட எங்களுடைய ஊடகவியலாளர்கள் நேர்மையான முறையில் செயற்பட்டார்கள். இருப்பினும் ஊடகவியலாளர்கள் தற்பொழுது அச்சத்துடன் செயற்படவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த அமைச்சு ஊடகவியலாளர்களின் தேவைகள் மீது கவனத்தை செலுத்த வேண்டும். இவர்களுக்கு ஓய்வூதிய திட்டமொன்றை நடைமுறைப்படுத்த வேண்டும். அனுபவம் கொண்ட அமைச்சர் என்ற ரீதியில் இந்த விடயங்களை நீங்கள் கவனத்தில்…