புதிய படத்தில் சூர்யா ஜோடியாக ராஷ்மிகா?

குறுகிய காலத்திலேயே மளமளவென வளர்ந்து முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேரும் ராஷ்மிகாவை இப்போது சூர்யா படத்துக்கும் படக்குழுவினர் பரிசீலித்து வருகிறார்கள். இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
சூர்யாவின் சூரரை போற்று படம் சமீபத்தில் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அடுத்து புதிய படத்தில் நடிக்க தயாராகி உள்ளார். இந்த படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார். கிராமத்து கதையம்சத்தில் அதிரடி படமாக தயாராகிறது. இதில் சூர்யா ஜோடியாக நடிப்பது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில் ராஷ்மிகா மந்தனாவிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ராஷ்மிகா கிரிக் பார்ட்டி என்ற கன்னட படத்தில் அறிமுகமாகி தெலுங்கில் அதிக படங்களில் நடித்துள்ளார். தமிழில் கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்து இருக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வர தயாராகிறது. தெலுங்கில் அல்லு அர்ஜுன் ஜோடியாக புஷ்பா படத்திலும் நடிக்கிறார். குறுகிய காலத்திலேயே மளமளவென வளர்ந்து முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேரும் ராஷ்மிகாவை இப்போது சூர்யா படத்துக்கும் படக்குழுவினர் பரிசீலித்து வருகிறார்கள். இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

Related posts