தந்தையின் கட்சிக்கும் எனக்கும் சம்பந்தமில்லை..

தந்தையின் கட்சிக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்று விஜய் தெரிவித்துள்ளார். விஜய் அரசியல் கட்சி தொடங்குகிறார் என்ற செய்தி மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் 'அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்' என்ற பெயரில் கட்சியைப் பதிவு செய்திருப்பதாகச் செய்தி வெளியானது. கட்சிப் பதிவு மனுவில் கட்சித் தலைவராக பத்மநாபன், பொதுச் செயலாளராக எஸ்.ஏ.சந்திரசேகர், பொருளாளராக ஷோபா என்று விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு விஜய் தரப்பில் மறுப்பும் தெரிவிக்கப்பட்டது. விஜய் அரசியல் கட்சி தொடங்கவுள்ளார் என்று பலரும் கருதி வரும் வேளையில், தேர்தல் ஆணையத்தில் கட்சிப் பதிவை விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி செய்திருக்கிறார். இதனை அவரே பேட்டியில் உறுதிப்படுத்தியுள்ளார். சில மாதங்களில் விஜய் இதன் தலைவராக அறிவிக்கப்படுவார் என்று பலரும் நினைத்தார்கள். ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக தந்தையின் கட்சிப்…

பீட்டர் பாலுடன் மீண்டும் சேர முயன்றேனா?

மதுவால் திருமண முறிவுட்ட பீட்டர் பாலுடன் நடிகை வனிதா மீண்டும் சேர சமூக வலைத்தளத்தில் தகவல் பரவியது. இதற்கு விளக்கம் அளித்து டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது:- நடிகை வனிதாவும் பீட்டர்பால் என்பவரும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டதும் பின்னர் பீட்டர்பால் மதுவுக்கு அடிமையானவர் என்று தகராறு செய்து வனிதா பிரிந்ததும் பரபரப்பானது. இந்த நிலையில் மீண்டும் பீட்டர்பாலுடன் சேர வனிதா முயற்சி செய்ததாகவும் ஆனால் பீட்டர்பால் அவரை ஏற்கவில்லை என்றும் சமூக வலைத்தளத்தில் தகவல் பரவியது. இதற்கு விளக்கம் அளித்து டுவிட்டரில் வனிதா கூறியிருப்பதாவது:- நான் மீண்டும் சமரசம் செய்து கொள்ள முயன்றதாகவும் அது ஏற்கப்படவில்லை என்றும் வந்ததிகள் பரவுகின்றன. எனது வாழ்க்கையில் யாரும் என்னை நிராகரித்தது இல்லை. நான்தான் நிராகரித்து இருப்பேன். ஏற்கனவே எனது உறவுகளை சரிசெய்ய முயன்று ஒரு கட்டத்துக்கு மேல் பொறுக்க முடியாமல்…

ஜெயலலிதாவாக நடிக்கும் கங்கனா ரணாவத்தின் புதிய தோற்றம்

ஜெயலலிதாவாக நடிக்கும் தனது தோற்ற புகைப்படம் ஒன்றை கங்கனா டுவிட்டரில் வெளியிட்டு உள்ளார். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை தலைவி என்ற பெயரில் திரைப்படமாக தயாராகி வருகிறது. இதில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத் நடிக்கிறார். கொரோனா பரவலுக்கு முன்பே தலைவி படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்துள்ளது. தற்போது மீண்டும் படப்பிடிப்பை தொடங்கி உள்ளனர். இந்த படத்தின் கிளைமாக்ஸில் இடம்பெறும் பிரமாண்ட மாநாடு மற்றும் ஊர்வல காட்சிகளுக்கு கொரோனா காரணமாக கிராபிக்சை பயன்படுத்துகின்றனர். இந்தநிலையில் ஜெயலலிதாவாக நடிக்கும் தனது தோற்ற புகைப்படம் ஒன்றை கங்கனா டுவிட்டரில் வெளியிட்டு உள்ளார். அதில் “தலைவி படத்துக்காக எனது உடல் எடையை 30 வயதுக்கு பிறகு 20 கிலோ கூட்டி நடிக்க வேண்டி இருந்தது. பரத நாட்டியமும் ஆட வேண்டி இருந்தது. இதனால் எனது முதுகு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆனாலும் கதாபாத்திரத்தில்…

ஷாருக் கான்-கஜோல் படம் மீண்டும் திரைக்கு வருகிறது

கொரோனா பாதிப்புகளால் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே படம் 8 மாதங்களுக்கு பின் மீண்டும் திரைக்கு வருகிறது. ஷாருக் கான்-கஜோல் நடிப்பில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் வெளியான காதல் அம்சம் கலந்த இந்தி திரைப்படம் தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே. யாஷ்ராஜ் சோப்ரா தயாரிப்பில், ஆதித்யா சோப்ரா முதன்முதலாக இயக்கிய இந்த திரைப்படம் ரூ.4 கோடி செலவில் உருவானது. அந்த காலகட்டத்தில் இந்தியாவில் ரூ.89 கோடியும், சர்வதேச சந்தையில் ரூ.13.50 கோடியும் என உலகம் முழுவதற்கும் ரூ.102.50 கோடி வரை வசூல் செய்தது. இந்தி திரைப்பட ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினரையும் ஈர்த்து படம் வெற்றி பெற்றது. தொடர்ந்து பல சாதனைகளையும் படைத்துள்ளது. வெளியான நாளில் இருந்து, இடையில் நிறுத்தப்படாமல் திரையரங்கில் படம் தொடர்ந்து ஓடியது. இதனால் நீண்ட காலம் திரையில்…

துருக்கி மீது பொருளாதாரத் தடை பிரான்ஸ் எச்சரிக்கை

துருக்கி அதிபர் வன்முறை உணா்வைப் பரப்பும் வகையில் பேசி வருவதால், அந்த நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று பிரான்ஸ் எச்சரித்துள்ளது. பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் வானொலி ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், துருக்கி அதிபா் எா்டோகன், பிரான்ஸுக்கு எதிராக வன்முறைப் பிரகடனம் செய்து வருகிறார். வெறுப்பைப் பரப்பும் வகையிலான கருத்துகளையும் அவா் தொடா்ந்து பதிவு செய்து வருகிறார். இது ஏற்புடையதல்ல, தனது கருத்துகளால் பிரான்சுக்கு மட்டும் எா்டோகன் ஆபத்தை ஏற்படுத்தவில்லை. ஒட்டுமொத்த ஐரோப்பாவின் ஒற்றுமைக்கே அவா் ஆபத்தை ஏற்படுத்தி வருகிறார் என்பதால், அவர் இந்த நிலைப்ப்பாட்டை உடனடியாக கைவிட விட வேண்டும். தங்களுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளைத் தவிர்க்க வேண்டுமென்றால், துருக்கி அந்த முடிவை எடுத்தாக வேண்டும்.வன்முறைக் கருத்துகளைக் கைவிட துருக்கிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஐரோப்பிய…

9,000 ஆண்டுகளுக்கு முன் பெண்களும் வேட்டையாடி உள்ளனர்

பெரு அகழ்வாராய்ச்சியின் போது 9,000 ஆண்டுகள் பழமையான புதைகுழிகளில் வேட்டையாடும் கருவிகளுடன் பெண்களின் எலும்புக்கூடுகள் கண்டிபிடிக்கப்பட்டது. பண்டைய காலங்களில் வேட்டைக்காரர்களின் உருவத்தைப் பற்றி பொதுவாக நாம் தொடர்புபடுத்துவது ஆண்கள்தான், ஆனால் ஒரு புதிய கண்டு பிடிப்பில் பெண்கள் வேட்டையாடி உள்ளார்கள் என்பதைக் கண்டறிந்துள்ளது. பெரு நாட்டில் ல ப்ளீஸ்டோசீன் மற்றும் ஆரம்பகால ஹோலோசீன் மொத்தம் 107 தளங்களில் புதைக்கப்பட்ட 427 நபர்களின் எலும்புகள் அங்கு கண்டறியப்பட்டது. இது 9 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. இந்த புதைகுழிகளில், 27 பேர் வேட்டை உபகரணங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டனர், அவர்களில் 11 பேர் பெண்கள்.பெண்கள் வேட்டையாடுவதிலும் இந்த ஆய்வு போதுமான ஆதாரங்களை அளித்துள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறினர். பெருவில் அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பின் படி, 17-19 வயதுடைய ஒரு பெண்ணின் எலும்புகள், கல் எறிபொருள், கத்தி போன்ற ஒரு கலைப்பொருட்கள் மற்றும் ஒரு மிருகத்தை…