ஜேசுதாசின் மகன் விபத்தில் சிக்கி உயிர் தப்பினார்

பிரபல பின்னணி பாடகர் ஜேசுதாசின் மகன் விபத்தில் சிக்கி உயிர் தப்பினார்

பிரபல பின்னணி பாடகரான ஜேசுதாசின் மகன் விஜய் ஜேசுதாஸ். இவர் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் திருவனந்தபுரத்தில் இருந்து கொச்சிக்கு காரில் சென்றார். தரவூர் அருகே வந்தபோது எதிரே வந்த கார் மீது விஜய் ஜேசுதாஸ் சென்ற கார் மோதியது.

இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல நொறுங்கியது. எனினும் காருக்குள் இருந்த விஜய் ஜேசுதாஸ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related posts