படங்களில் நடிப்பேன் காஜல் அகர்வால் பேட்டி..!

பாரதிராஜா இயக்கிய ‘பொம்மலாட்டம்‘ படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர், காஜல் அகர்வால். இவர் நடித்த இரண்டாவது தமிழ் படமான ‘பழனி‘, ‘பொம்மலாட்டம்‘க்கு முன்பாகவே திரைக்கு வந்தது.

காஜல் அகர்வாலுக்கு சொந்த ஊர், மும்பை. தமிழ் பட படப்பிடிப்புகளுக்கு மும்பையில் இருந்து சென்னைக்கு பறந்து வரும் நடிகைகளில் இவரும் ஒருவர். நடித்துக் கொடுத்துவிட்டு, மீண்டும் மும்பைக்கு பறந்து விடுவார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழி படங்களில் அவர் நடித்து வருகிறார்.

இவருடைய நடிப்பில், ‘பாரீஸ் பாரீஸ்’ என்ற படம் அடுத்து திரைக்கு வர இருக்கிறது. இந்தநிலையில், காஜல் அகர்வால் மும்பையை சேர்ந்த கவுதம் கிட்லுவை திருமணம் செய்து கொண்டார். கவுதம் கிட்லு, உள் அலங்கார நிபுணர். வீடுகளுக்கும், அலுவலகங்களுக்கும் உள் அலங்காரம் செய்து கொடுப்பவர்.

திருமணத்துக்கு பிறகும் காஜல் அகர்வால் தொடர்ந்து நடிக்க இருக்கிறார். இவருடைய நடிப்பில், ‘இந்தியன்‘ என்ற தமிழ் படமும், ‘ஆச்சார்யா‘ என்ற தெலுங்கு படமும் தயாரிப்பில் உள்ளன. திருமணத்துக்கு பிறகு நடிப்பது பற்றி காஜல் அகர்வால் கூறுகையில், ‘இனிமேல், கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க முடிவு செய்து இருக்கிறேன். சம்பளம் பற்றி கவலை இல்லை. சிறந்த கதை, கதாபாத்திரங்கள் கிடைத்தால் போதும். என் வாழ்நாள் முழுவதும் நடித்துக் கொண்டிருப்பேன்’ என்றார்.

Related posts