நவம்பர் 12-ல் சூரரைப்போற்று திரைப்படம் ஓடிடியில் வெளியீடு

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் சூரரைப் போற்று. கடந்த ஏப்ரல் மாதமே ரிலீசாக வேண்டிய இப்படம், கொரோனா லாக்டவுன் காரணமாக தள்ளிப்போனது. 7 மாதங்களாக தியேட்டர்கள் மூடப்பட்டு இருப்பதால் இப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட இருப்பதாக சூர்யா அறிவித்திருந்தார். இம்மாத இறுதியில் வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில், விமானப்படை தரப்பில் இருந்து தடையில்லா சான்று கிடைக்க தாமதமானதால் படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளிவைக்கப்பட்டது. இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்னர் தடையில்லா சான்றிதழ் கிடைத்த நிலையில், தற்போது படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ள படக்குழு, படத்தின் ரிலீஸ் தேதியையும் அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் தீபாவளி பண்டிகைக்கு 2 நாள் முன்னதாகவே (நவம்பர் 12-ந் தேதி) ரிலீஸ் செய்யப்படுகிறது. இப்படத்தை சூர்யாவின் 2டி…

தைவானுக்கு ஆயுதங்கள் விற்கும் அமெரிக்க நிறுவனங்களுக்கு பொருளாதார தடை

தைவானுக்கு ஆயுதங்கள் விற்கும் அமெரிக்க நிறுவனங்களுக்கு பொருளாதார தடை - சீனா எச்சரிக்கை தைவானுக்கு ஆயுதங்கள் விற்கும் அமெரிக்க நிறுவனங்களுக்கு பொருளாதார தடை விதிக்கப்படும் என சீனா எச்சரிக்கை விடுத்து உள்ளது. கடந்த சில மாதங்களாக தைவானுக்கும் சீனாவுக்கும் இடையிலான மோதல் அதிகரித்து வருகிறது. எந்த நேரத்திலும் சீனா தைவான் மீது தாக்குதல் நடத்தலாம் என கூறப்படுகிறது.இந்த நிலையில் தைவானுக்கு வான்வழி-தரைவழி கப்பல் ஏவுகணைகள் மற்றும் பிற ஆயுத அமைப்புகள் ஆகியவைகளை விற்க 1 பில்லியன் டாலர் (ரூ 7329 கோடி) மதிப்புள்ள ஒப்பந்தத்தில் இணைந்துள்ளதாக அமெரிக்க நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்து உள்ளன. அமெரிக்க வெளியுறவுத்துறை கடந்த வாரம் 135 வான்வழி-தரை ஏவுகணைகளை விற்பனை செய்வதற்கு ஒப்புதல் அளித்ததாக தைவானின் பாதுகாப்பு அமைச்சகம் கூறியது. இரண்டு அமெரிக்க பெரிய நிறுவனங்கள் சமீபத்தில் 100 கோடி டாலர் மதிப்புள்ள…

உன்னதத்தின் ஆறுதல் ! வாரம் 20. 43

தேவனும் அதிசயிக்கத்தக்க வாழ்வும். சகோதரன். பிரான்ஸ்சீஸ் அந்தோனிப்பிள்ளை. ரெகொபோத் ஊழியங்கள் - டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம். அது முதல் இயேசு, மனந்திரும்புங்கள், பரலோக இராட்சியம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கிக்க தொடங்கினார். மத்தேயு 4:17 இந்த வாரம் கிறிஸ்த்தவத்தில் சொல்லப்படும் மனந்திரும்புதலும், இரட்சிப்பும் என்றால் என்னவென்பதைக் குறித்தான தெளிவான விளக்கத்தை அறிந்து கொள்வ தோடு மட்டுமல்ல, அறிந்துகொண்ட தவறான விளக்கத்தில் இருந்து விடுதலை பெற்றுக் கொள்வNhதடு, இரட்சிப்பு என்னும் மிகப்பெரிய ஆசீர்வாதத்தைப் பற்றி அலைகள் வாசகநேயர்கள் சரியாக புரிந்து கொள்ளும்படியாக உங்கள் யாவரையும் அழைத்துச் செல்கிறேன். மக்கள் மதவழி முறைகளை, மதசடங்காச்சாரங்களை ஒழுங்காகக் கடைப்பிடித்து அல்லது பின்பற்றி வந்தாலும், தானதர்மங்கள் மூலம் தங்களுடைய கிரியைகளை (செயல்களை) நடப்பித்து வந்தாலும் அவர்களுடைய வாழ்க்கையில் இரட்சிப்பு என்ற பாவமன்னிப்பின் நிச்சயம் நமது வாழ்க்கையில் இல்லாதிருப்பதை நாம் காணக் கூடியதாக உள்ளது. இதில் இருந்து…

ரோந்து கப்பல்களை அனுப்புகின்றது அமெரிக்கா

மேற்குபசுபிக்கில் ஸ்திரமின்மையை ஏற்படுத்தும் தீங்குவிளைவிக்கும் சீனாவின் நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்காக அமெரிக்கா அப்பகுதியில் தனது கடலோர காவல்படையின் ரோந்துகப்பல்களை பயன்படுத்தவுள்ளது. வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ரொபேர்ட் ஓ பிரையன் இதனை தெரிவித்துள்ளார். அமெரிக்காவை பசுபிக்கிற்கான சக்தி என வர்ணித்துள்ள ரொபேர்ட் ஓ பிரையன் சீனாவின் அறிவிக்கப்படாத ஒழுங்குபடுத்தப்படாத மீன்பிடிநடவடிக்கை,இந்தோ பசுபிக்கில் உள்ள ஏனைய நாடுகளின் விசேட பொருளாதார வலயங்களில் செயற்படும் கடற்கலங்களை துன்புறுத்தும் செயற்பாடுகள் போன்றவை எங்கள் இறைமைக்கு பாதிப்பை ஏற்படுத்துவதுடன் எங்கள் பசுபிக் அயல்நாடுகளின் இறைமைக்கும் ஆபத்தை ஏற்படுத்தி பிராந்தியத்தின் ஸ்திரதன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன எனவும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் குற்றம்சாட்டியுள்ளார். இந்த ஸ்திரமின்மையை ஏற்படுத்தும் தீயநோக்கங்களை கொண்ட நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்கு எல்லை பாதுகாப்பு கடலோர காவல்படையின் ரோந்துகப்பல்களை பயன்படுத்துவது அவசியம் எனவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. தென்பசுபிக்கில் உள்ள பகுதிகளில் கடலோர…

அமெரிக்க இராஜாங்க செயலாளர் நாளை இலங்கைக்கு..

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஆர். பொம்பியோ நாளை (27) இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இந்த விஜயத்தின் போது, இலங்கை ஜனாதிபதி மற்றும் வெளிநாட்டு அமைச்சர் ஆகியோருடன் பொம்பியோ அதிகாரபூர்வ கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார். இந்த விஜயத்தின் போதான கலந்துரையாடல்கள் இரு நாடுகளுக்குமிடையிலான பன்முக ஈடுபாட்டின் பல பகுதிகள் உள்ளடக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் ஆட்சிக் காலத்தில் இலங்கைக்கு விஜயம் செய்யும் மிக உயர்ந்த அமெரிக்கப் பிரமுகர் இராஜாங்க செயலாளர் பொம்பியோ ஆவார். அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ விடுக்கவுள்ள வேண்டுகோளை இலங்கையின் அரச தலைவர்கள் பணிவுடன் நிராகரிப்பார்கள் என வெளிவிவகார அமைச்சின் சிரேஸ்ட அதிகாரியை மேற்கோள்காட்டி நியுஸ்இன்ஏசியா செய்தி வெளியிட்டுள்ளது. நியுஸ் இன் ஏசியா மேலும் தெரிவித்துள்ளதாவது. 28ம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள அமெரிக்க இராஜாங்க…