கணவருக்கு மாதம் ரூ.1000 வழங்க வேண்டும் !

தூத்துக்குடியில் சலூன் கடை நடத்தி வரும் பொன் மாரியப்பன், அங்கே ஒரு நூலகம் அமைத்திருப்பதாக பிரதமர் மோடி பாராட்டினார்.
பிரதமர் மோடி மனதின் குரல் என்னும் மன் கி பாத் நிகழ்ச்சியில் இன்று உரையாற்றினார். அப்போது, பண்டிகை காலம், உள்ளூர் உற்பத்தி பொருட்களை வாங்குதல், கொரோனா தொற்று என பல விஷயங்கள் குறித்து பிரதமர் மோடி பேசினர். தொடர்ந்து, தமிழகத்தின் தூத்துக்குடியில் சலூன் கடையில் நூலகம் நடத்தி வரும் பொன் மாரியப்பனுடன் பிரதமர் மோடி உரையாடினார்.
வணக்கம் நல்லா இருக்கீங்களா? என பேசிய பிரதமர் மோடி, நூலகம் நடத்தும் யோசனை எப்படி வந்ததும் எனவும் கேட்டறிந்தார். அவரிடம் பேசும்போது ஒருசில வார்த்தைகளை தமிழில் பேசி பிரதமர் மோடி அசத்தினார்.
——

உத்தரப்பிரதேசத்தில் பிரிந்து வாழும் கணவருக்கு மாதம் ரூ.1000 வழங்க வேண்டுமென அரசாங்க ஓய்வூதியம் பெறும் மனைவிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் குடும்ப நல வழக்கொன்றில், பிரிந்து வாழ்ந்து வரும் கணவருக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்க வேண்டுமென அரசாங்க ஓய்வூதியம் பெறும் மனைவிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

“உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த கணவன் – மனைவி தம்பதி பல ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மனைவி அரசாங்க ஊழியர் என்பதால் அவருக்கு ஓய்வூதியம் வருகிறது.

இந்த நிலையில், பராமரிப்பு செலவுக்காக மனைவியிடம் இருந்து மாதந்தோறும் பணம் பெற்றுத் தருமாறு கணவர், இந்து திருமணச் சட்டம் 1955-இன் கீழ் குடும்ப நல நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் நீதிபதி, மனுதாரரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, ஓய்வுபெற்ற அரசு ஊழியராக இருந்ததாலும், மாதத்திற்கு 12,000 ரூபாய் ஓய்வூதியம் பெறுவதாலும் அந்த பெண், தனது கணவருக்கு பராமரிப்பு கொடுப்பனவாக மாதத்திற்கு 1,000 ரூபாய் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்”

Related posts