‘மிஸ் இந்தியா’ படம் பல இளம்பெண்களை ஊக்கப்படுத்தும் ( ட்ரெய்லர் )

‘மிஸ் இந்தியா’ திரைப்படம் பல இளம்பெண்களை ஊக்கப்படுத்தும் என்று கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகவுள்ள புதிய படம் ‘மிஸ் இந்தியா’. அறிமுக இயக்குநரான ஒய். நரேந்திரநாத் இப்படத்தை இயக்கியுள்ளார். மகேஷ் எஸ். கொனேரு தயாரித்துள்ள இப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வரும் நவம்பர் 4ஆம் தேதி அன்று வெளியாகிறது. இப்படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். கீர்த்தி சுரேஷ் உடன் ஜகபதி பாபு, நாடியா மோயுடு, ராஜேந்திர பிரசாத், நவீன் சந்திரா, விகே நரேஷ், பூஜிதா பொன்னடா உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகி இணையத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ‘மிஸ் இந்தியா’ படம் குறித்து கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளதாவது: ‘தனது கனவுகளை தான் அடைவதைத் தடுக்க எதையும் விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் சம்யுக்தா என்ற பெண்ணின் அழகாக வடிவமைக்கப்பட்ட கதையே மிஸ்…

தளபதி 65′ படத்திலிருந்து விலகினார் ஏ.ஆர்.முருகதாஸ்

தளபதி 65' படத்தின் இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். இதன் பின்னணி என்ன என்பது குறித்துத் தகவல் வெளியாகியுள்ளது. 'துப்பாக்கி', 'கத்தி' மற்றும் 'சர்கார்' ஆகிய படங்களைத் தொடர்ந்து விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் இருவரும் 4-வது முறையாக இணைந்து பணிபுரிய ஒப்பந்தமானார்கள். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இதன் பணிகள் மும்முரமாகத் தொடங்கி நடைபெற்று வந்தன. கரோனா அச்சுறுத்தலால் இதன் பணிகளில் கொஞ்சம் தாமதம் ஏற்பட்டது. அப்போது திரைக்கதையின் இறுதி வடிவத்தைத் தயார் செய்துக் கொண்டிருந்தார் ஏ.ஆர்.முருகதாஸ். சில தினங்களுக்கு முன்பு விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் இருவரும் சந்தித்துப் பேசினார்கள். அப்போது கதை, திரைக்கதையின் வடிவம், வசனங்கள் உள்ளிட்ட அனைத்தையும் முருகதாஸ் முழுமையாகச் சொல்லியிருக்கிறார். அதைக் கேட்ட விஜய்க்கு பரமதிருப்தி. ஆனால், விஜய் படம் என்பதால் சன் பிக்சர்ஸ் நிறுவனமும் முழுமையாகக் கதையைக் கேட்டுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் சொன்ன…

‘மூக்குத்தி அம்மன்’ ‘ஓ.டி.டி’யில் வெளிவருகிறது

பகவதி அம்மனின் வரலாற்றை ‘மூக்குத்தி அம்மன்’ என்ற பெயரில் படமாக்கி இருக்கிறார்கள். மூக்குத்தி அம்மனாக நயன்தாரா நடித்துள்ளார். கன்னியாகுமரியில் இருந்து அருள்புரியும் பகவதி அம்மனின் வரலாற்றை ‘மூக்குத்தி அம்மன்’ என்ற பெயரில் படமாக்கி இருக்கிறார்கள். மூக்குத்தி அம்மனாக நயன்தாரா நடித்துள்ளார். நகைச்சுவை நடிகர் ஆர்.ஜே.பாலாஜி டைரக்டு செய்ய, ஐசரி கணேஷ் தயாரித்து இருக்கிறார். இந்த படத்தை தீபாவளி விருந்தாக, ‘ஓ.டி.டி’யில் வெளியிட முயற்சி நடைபெறுவதாக தகவல் பரவியிருக்கிறது. தமிழ் திரையுலகில் பேய் படங்களும், தாதாக்களின் கதைகளும் அதிகமாக வந்து கொண்டிருக்கும் இந்த காலக்கட்டத்தில், பக்தி படமாக ‘மூக்குத்தி அம்மன்’ வெளிவருவது, மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கணவருக்கு மாதம் ரூ.1000 வழங்க வேண்டும் !

தூத்துக்குடியில் சலூன் கடை நடத்தி வரும் பொன் மாரியப்பன், அங்கே ஒரு நூலகம் அமைத்திருப்பதாக பிரதமர் மோடி பாராட்டினார். பிரதமர் மோடி மனதின் குரல் என்னும் மன் கி பாத் நிகழ்ச்சியில் இன்று உரையாற்றினார். அப்போது, பண்டிகை காலம், உள்ளூர் உற்பத்தி பொருட்களை வாங்குதல், கொரோனா தொற்று என பல விஷயங்கள் குறித்து பிரதமர் மோடி பேசினர். தொடர்ந்து, தமிழகத்தின் தூத்துக்குடியில் சலூன் கடையில் நூலகம் நடத்தி வரும் பொன் மாரியப்பனுடன் பிரதமர் மோடி உரையாடினார். வணக்கம் நல்லா இருக்கீங்களா? என பேசிய பிரதமர் மோடி, நூலகம் நடத்தும் யோசனை எப்படி வந்ததும் எனவும் கேட்டறிந்தார். அவரிடம் பேசும்போது ஒருசில வார்த்தைகளை தமிழில் பேசி பிரதமர் மோடி அசத்தினார். ------ உத்தரப்பிரதேசத்தில் பிரிந்து வாழும் கணவருக்கு மாதம் ரூ.1000 வழங்க வேண்டுமென அரசாங்க ஓய்வூதியம் பெறும் மனைவிக்கு…

நன்கு சமைத்த மீன் ஊடாக கொரோனா பரவாது

நன்கு சமைத்த மீன் ஊடாக கொரோனா பரவாது என்ற விஞ்ஞான பூர்வமான ஆதாரத்தினை சுகாதார அமைச்சு மீண்டும் வலியுறுத்த விரும்புகிறது என பதில் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் சதாசிவம் சிறிதரன் தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார். அதேவேளை கோட்பாட்டு அடிப்படையில் எந்த ஒரு மேற்பரப்பிலும் கொரோனா வைரஸ் காணப்படும் என்பதால் சமைப்பதற்கு மீனை தயாரிக்கும் போது அல்லது சேமித்து வைக்கும் போது முகத்தை கைகளால் தொடுவதை தவிர்ப்பதுடன் சமையல் பாத்திரங்கள் மற்றும் கரங்களை நன்கு கழுவி கொள்ளுதல் வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் அடிப்படையற்ற விதத்தில் மீன் சந்தைகளை மூடுவது அனாவசியமாகும். ஆகையால் பரிந்துரைக்கப்பட்ட சுகாதார நெறிமுறையான முகக் கவசம் அணிதல் சமூக இடைவெளியை பின்பற்றுதல் மற்றும் கைகளை சவர்க்காரம் இட்டு நன்கு கழுவுதல் ஆகியவற்றை…

ரதன சூத்ர பாராயணம் செய்யும் பிரித் உபதேசம்

கொவிட்-19 தொற்று நிலைமைக்கு மத்தியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட நாட்டு மக்களுக்கு நலம் வேண்டி ஏழு நாட்கள் இடம்பெறும் ரதன சூத்ர பாராயணம் செய்யும் பிரித் உபதேசம் நாராஹேன்பிட அபயராம புராண விகாரையை மையமாகக் கொண்டு நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்டது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வழிபாடுகளில் ஈடுபட்டதை தொடர்ந்து பிரித் உபதேசத்தில் கலந்து கொண்டார். கொவிட்-19 தொற்று இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்று பிரார்த்தித்து நேற்று முன்தினம் முதல் தொடர்ந்து ஏழு தினங்கள் நாட்டிலுள்ள 200இற்கும் அதிகமான விகாரைகளில் ரதன சூத்ர உபதேசம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நாராஹேன்பிட அபயராமாதிபதி, மேல் மாகாண சங்கநாயக்கர் வணக்கத்திற்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார். இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தினால் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வை, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் பௌத்த விவகார திணைக்களம் இணைந்து…