மோட்டார் சைக்கிள்களில் வந்து வாள்வெட்டு தாக்குதல்

யாழ். கோண்டாவில் கிழக்கு – அரசடி பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது வாள்வெட்டு கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.
நேற்று (16) இரவு 8.30 மணி அளவில் இரு மோட்டார் சைக்கிள்களில் முகத்தை மறைத்தவாறு வாள்களுடன் நுழைந்த வாள்வெட்டு கும்பல் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.
தாக்குதலில் வீட்டின் முன்பாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் ஒன்றும், வீட்டின் கதவு, ஐன்னல்களும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

——

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் 4 ஆவது நாளாக இன்று (17) ஆஜராகியுள்ளார்.

—–

தற்கொலை குண்டுதாரிகள் 20 பேரை பயன்படுத்தி உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொள்ள சஹ்ரான் ஹசீம் திட்டமிட்டிருந்ததாக கண்டிபிடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் முதலாவது தாக்குதலின் பின்னர் மூன்று கட்டங்களாக தாக்குதல்கள் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்ததாக கைது செய்யப்பட்ட சஹ்ரானின் குழு உறுப்பினரிடம் மேற்கொண்ட விசாரணைகள் ஊடாக தெரிய வந்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சி வழங்கும் போது தீவிரவாத ஒழிப்பு பிரிவின் அதிகாரி ஒருவர் இதனை தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தேசிய தவ்ஹீத் ஜமாத் குழுவின் தலைவர் சஹ்ரான் ஹசீம் மற்றும் நௌபர் மௌலவி இடையில் தலைமைத்துவத்திற்காக சண்டை ஏற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

—–

கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கு முகக்கவசத்தை அணிவதன் மூலம் சுமார் 70 சதவீதத்தைக் கட்டுப்படுத்தக் கூடியதாக இருக்கும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அமைச்சின் ஊடக பேச்சாளர் வைத்தியர் ஜயரூபன் பண்டார கொவிட் சிகிச்சை மத்திய நிலையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், இந்த தொற்று சமூகத்தின் மத்தியில் பரவில்லை என்றும் கூறினார்.

இலங்கையில் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் பரிசோதனையின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் இறக்குமதி செய்யப்பட்ட தானியங்கி பி.சி.ஆர் பரிசோதனை இயந்திரங்களில் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொருத்தப்படவுள்ளது. இது தொடர்பாகவும் அவர் விளக்கமளித்தார்.

நாட்டில் இம்முறை கொரோனா வைரஸ் பரவல் முன்னரிலும் பார்க்க அதிகமாக காணப்படுவதாகவும் சுகாதார அமைச்சின் ஊடக பேச்சாளர் ஜயரூபன் பண்டார மேலும் தெரிவித்தார்.

Related posts