ரிஷாட் பதியுதீனை கைது செய்ய நீதிமன்றத்தின் ஊடாக பிடியானை

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை கைது செய்ய நீதிமன்றத்தின் ஊடாக பிடியானை ஒன்றை பெற்றுக் கொள்ளுமாறு பதில் பொலிஸ்மா அதிபருக்கு சட்டமா அதிபர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

பொதுமக்களின் பணத்தை தவறான முறையில் பயன்படுத்தி மற்றும் தேர்தல் சட்ட திட்டங்களை மீறி கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது வாக்களிப்பதற்காக இடம்பெயர்ந்தோரை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் ஊடாக அழைத்து சென்ற குற்றச்சாட்டு தொடர்பிலேயே அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
….
திருகோணமலை தலைமையகப் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சங்கமம் பிரதேசத்தில் சூதாட்ட நிலையம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டதாக திருகோணமலை மாவட்ட விஷத் தன்மையுடைய போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

சுற்றிவளைப்பில் சூதாடிய நிலையில் நாலாம் கட்டையை சேர்ந்த 36 மற்றும் 32 வயதுடைய இரு பெண்களும், பாலையூற்றுவைச் சேர்ந்த 45 மற்றும் 37 வயதுடைய இரு பெண்களும், சங்கமம், பாலையூற்று, கிண்ணியா – 1 பிரதேசங்களைச் சேர்ந்த 37, 54, 58 வயதுடைய ஆண்களும் கைது செய்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

சீனன் குடா பொலிஸ் விஷேட பிரிவிற்கு கிடைக்கப் பெற்ற புலனாய்வு தகவலின் அடிப்படையில் இச்சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக மாவட்ட விஷத் தன்மையுடைய போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 28,500 ரூபா பணமும் 45 வயதுடைய பெண்ணின் உடம்புக்குள் இருந்து 70,000 ரூபா பணமும் கைப்பற்றியதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களையும் கைப்பற்றப்பற்ற பணத்தையும் தலைமையகப் பொலிஸ் வசம் ஒப்படைத்ததாக மாவட்ட விஷத் தன்மையுடைய போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் சூதாட்டத்தில் ஈடுபடுவதுடன் போதைப் பொருள் வியாபாரத்திலும் ஈடுபடுவதாக தெரிவித்ததுடன் அவர்களையும் பணத்தையும் திருகோணமலை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

…..

கொள்ளுபிட்டிய பிரண்டிக்ஸ் நிறுவன ஊழியர்கள் 7 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் அனைவரும் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதுடன் மினுவங்கொட பிரண்டிக்ஸ் தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் அனைவரும் தனிமைப்படுப்பட்டு இருந்த நிலையிலேயே கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.

அத்துடன் கொழும்பு யூனியன் பிளேஸ் அதிசொகுசு அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் தங்கியிருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபரின் குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related posts