பாலியல் கொடுமையை தடுக்க வேண்டும் நடிகை திரிஷா

யுனிசெப் அமைப்பின் குழந்தை உரிமைகளுக்கான நல்லெண்ண தூதராக இருக்கும் நடிகை திரிஷா இணையம் மூலமாக இளம்பெண்கள் மற்றும் இளைஞர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:-

“குழந்தை திருமணத்தின் ஆபத்துகளை எடுத்துச் சொல்லி அவற்றை தடுப்பதிலும் விழிப்புணர்வு மூலம் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளை முடிவுக்கு கொண்டு வருவதிலும் முனைப்புடன் பணியாற்றிய இளம் சாதனையாளர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். குழந்தைகள் உடல் ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் வன்கொடுமை செய்யப்படுவதில் இருந்து பாதுகாக்க ஒரு பாதுகாப்பு வலையை உருவாக்க பணியாற்றி இருக்கிறீர்கள். வளரும் இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்களின் இந்த முயற்சிகள் தைரியமானவை பாராட்டத்தக்கவை.

அவர்களின் நம்ப முடியாத அளவிலான இந்த முயற்சிக்கு வணக்கம் தெரிவித்துக் கொள்கிறேன். முடிவுகள் எடுக்கும் இடத்தில் இருப்பவர்கள் வளரும் இளம் பெண்களை கணக்கில் கொண்டு அவர்களின் உரிமைகளுக்கு செவி சாய்த்து அவர்களின் கல்வி மற்றும் திறன்களில் முதலீடு செய்யும் ஒரு சிறந்த உலகத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டியது காலத்தின் கட்டாய தேவை. பாலின அடிப்படையிலான வன்கொடுமைகள் மற்றும் குழந்தை திருமணத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான புதுமையான தீர்வுகள் குறித்து ஆராய வேண்டும்”

Related posts