எஸ்பிபிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்

எஸ்பிபிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் ஆந்திர முதல்வருக்கு கமல் நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னையில் செப்.25-ம் தேதி சிகிச்சை பலனின்றி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் காலமானார். இது இந்தியத் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல்வேறு விருதுகளை எஸ்பிபி வென்றிருந்தாலும், அவருக்கு பாரத ரத்னா, தாதா சாகேப் பால்கே விருதுகளை வழங்க வேண்டும் என்று திரையுலகினர் குரல் கொடுத்து வருகிறார்கள்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கடிதம் சமூக வலைதளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்தக் கடிதத்திற்காக ஆந்திர முதல்வருக்குக் கமல் நன்றி தெரிவித்துள்ளார். ஆந்திர முதல்வரின் கடிதத்தை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கமல் கூறியிருப்பதாவது:
“ஆந்திர முதல்வருக்கு நன்றி. எங்கள் சகோதரர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு நீங்கள் அளித்திருக்கும் கவுரவம், தமிழகம் மட்டுமல்லாது, நாடு முழுவதும் உள்ள அவரது குரலின் உண்மையான ரசிகர்களின் உணர்வை எதிரொலிக்கிறது”.
இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.

——

’’ஜேசுதாஸ் அண்ணா மாதிரி என்னால் பாடமுடியாது. நான் பாடமாட்டேன் என்று மறுத்தார் எஸ்.பி.பி.சார். அதேபோல், ‘ட்ராக்’ பாடியவர்களின் குரலைக் கேட்டுவிட்டு அவர்களை மனதாரப் பாராட்டி, அவர்களின் வாய்ப்புக்கு சிபாரிசு செய்திருக்கிறார் பாலு சார்’’ என்று இயக்குநர் கே.பாக்யராஜ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
வார்த்தைகளை நன்றாகப் புரிந்துகொண்டு, அந்தந்த வார்த்தைகளுக்குத் தகுந்தது போல, உச்சரிப்பது எஸ்.பி.பி. சாரின் ஸ்பெஷல். அதாவது நாங்கள் எல்லோரும் நடிக்கும் போது ஒரு வசனத்தைச் சொல்லும்போது ஒரு எக்ஸ்பிரஷன் கொடுப்போம். அதேபோல், அவர் பாட்டுக்கு எக்ஸ்பிரஷன் கொடுப்பார். எந்த வார்த்தையைப் பாடும்போது எப்பேர்ப்பட்ட எக்ஸ்பிரஷன் கொடுக்கவேண்டும் என்பதை மிக அழகாக உணர்ந்து பாடுவார். ஒரு பாட்டிலேயே, பாட்டு வரியிலேயே, வரிகளை உச்சரிப்பதிலேயே கதைக்கு உண்டான, சூழலுக்குத் தேவையான எமோஷனை, பாட்டுக்குள் கொண்டுவந்துவிடுவார் எஸ்.பி.பி.சார்.
’இதுநம்ம ஆளு’ படத்தில் ‘பச்சைமலை சாமி ஒண்ணு உச்சிமலை ஏறுதின்னு’ என்ற பாடல் டைட்டில் பாடலாக வந்தது. அந்தக் காட்சியில் பாடிக்கொண்டு நான் நடித்திருப்பேன். நானே பாடியிருந்தேன். தெலுங்கில் இந்தப் படத்தை டப் பண்ணினோம். பாலு சார் டப்பிங்கிற்கு வந்தார். வந்தவர் டைட்டில் பாடலைக் கேட்டார். ‘நீங்கதானே பாடினது? நீங்களே பாடிருங்க. பொருத்தமா இருக்கும். நல்லாருக்கும்’ என்றார்.

Related posts