எஸ்பிபிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்

எஸ்பிபிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் ஆந்திர முதல்வருக்கு கமல் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் செப்.25-ம் தேதி சிகிச்சை பலனின்றி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் காலமானார். இது இந்தியத் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல்வேறு விருதுகளை எஸ்பிபி வென்றிருந்தாலும், அவருக்கு பாரத ரத்னா, தாதா சாகேப் பால்கே விருதுகளை வழங்க வேண்டும் என்று திரையுலகினர் குரல் கொடுத்து வருகிறார்கள். எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கடிதம் சமூக வலைதளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தக் கடிதத்திற்காக ஆந்திர முதல்வருக்குக் கமல் நன்றி தெரிவித்துள்ளார். ஆந்திர முதல்வரின் கடிதத்தை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து…

விசாரணையின் போது தீபிகா படுகோனே உடைந்து அழுதார்..?

போதைப்பொருள் விசாரணையின் போது நடிகை தீபிகா படுகோனே உடைந்து அழுததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தி நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கில் அவருயை தோழியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் குறித்து நடிகைகள் ரகுல்பிரீத் சிங், தீபிகா படுகோனே, ஷரத்தா கபூர், சாராஅலிகான் ஆகியோரிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தியதை தொடர்ந்து, இந்த விவகாரம் சூடுபிடித்து உள்ளது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில், நடிகைகள் தீபிகா படுகோன், ஷ்ரத்தா கபூர்,ராகுல் பிரீத்சிங், சாரா அலிகான், ஆகியோரிடம் தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். நடிகைகள் தீபிகா படுகோனேவிடம் மீண்டும் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளனர். தீபிகா படுகோனேவுடனான விசாரணையின் போது பாலிவுட் டாப் ஸ்டார் தீபிகா படுகோனே…

எஸ்பிபி மருத்துவக் கட்டண விவகாரத்தில் நடந்தது என்ன ?

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் செப்டம்பர் 25-ம் தேதி சென்னையில் காலமானார். செப்டம்பர் 26-ம் தேதி அவருடைய உடல் அரசு மரியாதையுடன் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் காட்டமாக வீடியோ ஒன்றை எஸ்பிபி சரண் வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து இன்று எம்.ஜி.எம் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் நிர்வாகத்தினருடன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். எஸ்பிபி சரண் பத்திரிகையாளர்களிடம் பேசியதாவது: "அப்பா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து பல வதந்திகள் உலவி வருகின்றன. அப்பாவுக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு நன்றி. என் அப்பாவை அவ்வளவு அருமையாகப் பார்த்துக் கொண்டார்கள். தினமும் பிரஸ் ரிலீஸ் கொடுப்பதிலிருந்து, அப்பாவுக்குச் சிகிச்சை அளித்தது வரை அனைத்துமே என்னிடம் கேட்டுவிட்டுத்தான் செய்தார்கள். மருத்துவமனை கட்டணம் தொடர்பாக ஒரு சர்ச்சை வந்திருக்கிறது. சிகிச்சை பலனளிக்காமல் அப்பா காலமாகிவிட்டார். அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குக்…

மனைவியின் நகைகளை விற்றே செலவை சமாளிக்கிறேன்! அம்பானி

நான் ஆடம்பரமாக வாழ்வதாக ஊடகங்கள் யூகத்தில் கூறுவது தவறு எனவும் மிக ஒழுக்கமான வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் அனில் அம்பானி லண்டன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழும நிறுவனங்கள் 69 லட்சம் கோடி ரூபாய் கடனை மறுசீரமைக்க சீனாவைச் சேர்ந்த மூன்று வங்கிகளிடம் 51 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியிருந்தன.இதற்கு அனில் அம்பானி தனிப்பட்ட உத்தரவாதம் அளித்திருந்தார். இந்த கடனை திரும்பத் தராததால் அனில் அம்பானியின் சொத்துக்களை முடக்கக் கோரி சீன வங்கிகள் ஐரோப்பிய நாடான பிரிட்டனில் உள்ள லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன. இந்த வழக்கில் தனக்கு தனிப்பட்ட சொத்துக்கள் எதுவும் இல்லை என அனில் அம்பானி தெரிவித்திருந்தார்.இதை ஏற்க மறுத்த வங்கிகள் அனில் அம்பானிக்கு சொகுசு கார்கள், தனி விமானம், மனைவி டினா அம்பானிக்கு பரிசளித்த ஹெலிகாப்டர் மும்பையில் இரண்டடுக்கு…

நாட்டில் கொரோனா இருந்ததை மறந்து செயற்படும் மக்கள்

கொரோனா வைரஸ் (கொவிட் 19) பரவல் தொடர்பில் பொது மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமெனவும் சுகாதார தரப்பினர் வழங்கியுள்ள சுகாதார நடைமுறைகளை கிரமாக கடைப்பிடிக்க வேண்டியது அவசியமெனவும் இராணுவத் தளபதி லெப்டினண்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) பரவல் இருந்தமை தொடர்பில் மக்கள் இன்று மறந்து செயற்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த இராணுவத் தளபதி, சமூகத்தில் கொரோனா வைரஸ் பரவலை வெறுமனே 50 நாட்களுக்குள் தடுக்க முடிந்தது. அதேபோல் மக்கள் அதனை கட்டுப்படுத்த பெரும் தியாகங்களையும் செய்தனர். மக்களின் அர்ப்பணிப்பால் தான் இந்த நிலைமை 50 நாட்கள் என்ற குறுகிய காலத்தில் கட்டுப்படுத்த முடிந்தது. எனினும் நாட்டில் கொவிட் 19 இல்லையென சொல்வது மிகவும் வருந்தத்தக்க விடயம். தொடர்ந்தும் முகக்கவசங்களை அணிவது மிக முக்கியம். அத்துடன்…

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்தவும்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். அரசியல்வாதிகளும் மனிதர்கள் என்று நானே கூறுகிறேன். இலங்கையில் வேறு எவரும் இதனைக் கூற கேட்டதில்லை. அரசியல்வாதிகளும் எமது சமூகத்தில் ஒரு அங்கம். நாம் சமூகத்தைக் கறுப்பாக வைத்துக்கொண்டு, தங்கத்தால் செய்த, வெள்ளியால் அலங்கரிக்கப்பட்ட, பாலில் நீராட்டிய அரசியல்வாதிகளைத் தேட முடியாது. எமக்கு ஜனநாயக சமூகம் அவசியம் என்றால், அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கூறியது போல், ஜனநாயகத்தின் ஊடாக எதனையும் செய்யக் கூடிய சுதந்திரம் இருக்க வேண்டும். அப்படியான சுதந்திரம் கிடைப்பதில்லை. ஜனநாயகம் என்பது மற்றவர்களை மதிப்பது, அவர்களின் கருத்துக்கு இடமளிப்பது. இதனைத் தவிர வேறு எதுவுமில்லை. அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க வேண்டுமாயின் கருத்துக்களைப் பெற வேண்டுமென…

20 தொடர்பில் அரசு எடுத்துள்ள தீர்மானம்

20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தில் மேலும் சில திருத்தங்களை செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளார். 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணைகளின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். செயற்குழு கூட்டத்தின்போது எடுத்த திருத்தங்கள் அடங்கிய எழுத்து மூலமான பத்திரம் நீதிமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனேக அலுவிகார, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் சிசிர த ஆப்ரோ ஆகிய ஐவரடங்கிய நீதிபதிகள் குழு முன்னிலையில் தற்போது குறித்த மனுக்கள் மீதான விசாரணை இடம்பெற்று வருகிறது. பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான பரிசீலனை நாளை (30) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றில் குறித்த மனுக்கள்…