இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு : மோடி

இந்தியா- இலங்கை நாடுகளுக்கு இடையேயான உச்சி மாநாடு இன்று நடைபெற்றது. இதில் இரு நாட்டு தலைவர்களும் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினர். இந்தியா - இலங்கை இடையேயான உச்சி மாநாடு இன்று நடைபெற்றது. இதில் இரு நாட்டு தலைவர்களும் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டனர். இலங்கை பிரதமராக ராஜபக்சே மீண்டும் பொறுப்பேற்ற பிறகு, பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்துவது இதுதான் முதல் தடவையாகும். காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த ஆலோசனையின் போது, இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்காக ராஜபக்சேவுக்கு மோடி வாழ்த்துக்களை கூறினார். மேலும், தனது அழைப்பை ஏற்று, இந்தியா - இலங்கை நாடுகளுக்கு இடையேயான மெய்நிகர் உச்சி மாநாடு நடத்த ஒப்புதல் தெரிவித்ததற்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி. இந்தப் பேச்சுவார்த்தையின் போது இலங்கை அரசு சிறுபான்மையினரான தமிழர்களுக்கும் அதிகாரப்பகிர்வு அளிக்கப்பட வேண்டும்…

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு நினைவு மண்டபம்..

பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு சென்னை தாமரைப்பாக்கத்தில் நினைவு மண்டபம் கட்டப்படும் என்று அவரது மகன் எஸ்.பி.பி. சரண் கூறினார். மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் சென்னை செங்குன்றத்தை அடுத்த தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டு உள்ளது. அங்கு அவருக்கு நினைவு மண்டபம் கட்டப்பட உள்ளது. இதுகுறித்து பண்ணை வீட்டில் நேற்று எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகனும், பிரபல பாடகருமான எஸ்.பி.பி.சரண் நிருபர்களிடம் கூறியதாவது:- ‘50 நாட்களாக எங்கள் குடும்பத்துடனேயே இருந்து அப்பா மீண்டு வரவேண்டும் என்று எங்களோடு பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி கடன்பட்டுள்ளேன். அப்பா இப்போது தாமரைப்பாக்கத்தில் உள்ள எங்கள் தோட்டத்தில் நன்றாக ஓய்வு எடுத்துக்கொண்டு இருக்கிறார். எங்கள் குடும்பம் எதிர்பார்க்காத ஒரு நிகழ்வாக இறுதிச்சடங்கு நடந்தது. இதற்காக தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும், மாநகராட்சிக்கும், உள்ளூர் பஞ்சாயத்து மற்றும் போலீஸ் சூப்பிரண்டு, தாமரைப்பாக்கம்…

மரணத்தை முன்கூட்டியே கணித்தாரா எஸ்.பி.பாலசுப்பிரமணியம்?

மரணத்தை முன்கூட்டியே கணித்தாரா எஸ்.பி.பாலசுப்பிரமணியம்? தனது சிலையை வடிவமைக்க முன்கூட்டியே ஆர்டர் கொடுத்துள்ளார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தனது சிலையை முன்கூட்டியே வடிவமைக்க ஆர்டர் தந்தது தெரிய வந்துள்ளது. இதனால் அவர் தனது மரணத்தை முன்கூட்டியே கணித்து விட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அரை நூற்றாண்டு காலத்துக்கு மேலாக பாடி தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி ரசிகர்களையும் தன் வசீகர குரலால் கட்டிப்போட்ட எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் 5-ந் தேதி சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அவர் கடந்த 25-ந் தேதி மரணம் அடைந்தது, நாடு முழுவதும் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தனது மரணத்தை முன்கூட்டியே கணித்து விட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைந்த…

எஸ்பிபி சிகிச்சைக்கான மருத்துவக் கட்டண சர்ச்சை – சரண் விளக்கம்

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் செப்டம்பர் 25-ம் தேதி சென்னையில் காலமானார். அவரின் உடல் அரசு மரியாதையுடன் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது. எஸ்பிபி சிகிச்சைக்கு எம்.ஜி.எம் மருத்துவமனை அதிகப்படியான பில் போடப்பட்டதாகவும், இதனைக் கட்டுவதற்கு எஸ்பிபி குடும்பத்தினரால் முடியாத சூழல் ஏற்பட்ட சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. பின்பு ,எஸ்பிபியின் மகன் குடியரசுத் துணைத் தலைவரை அணுகிய பிறகே, மருத்துவமனை நிர்வாகம் எஸ்பிபியின் உடலைக் கொடுத்தது என்று செய்திகளைப் பரப்பினார்கள். இது தொடர்பாக எஸ்பிபி சரண் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது; அப்பா கடந்த வெள்ளிக்கிழமை அன்று காலமானார். மொத்தமாக எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்பட்டது என்பது குறித்து வதந்தி ஒன்று வந்திருக்கிறது. நாங்கள் ஏதோ பணம் கட்டியதாகவும், ஆனால் இன்னும் பணம் பாக்கி இருந்ததாகவும், பின்னர் தமிழக…

உலக நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு இரண்டாம் இடம்

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட நாடுகள் பட்டியலில் 2ஆவது இடத்தில் இலங்கை உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலக புகழ்பெற்ற YICAI ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பான முழுமையான விபரம் ஒக்டோபரில் வெளியிடப்படுமென அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அந்தவகையில் YICAI ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி, கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட நாடுகள் பட்டியலில் சீனா முதல் இடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து 2 ஆம் இடத்தில் இலங்கையும் மூன்றாம் இடத்தில் கானாவும், அதனைத் தொடர்ந்து தென்கொரியா, மியான்மர், அவுஸ்ரேலியா, தாய்லாந்து, நியூசிலாந்து, வியட்நாம், கம்போடியா ஆகிய நாடுகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இலங்கையில் இதுவரையான காலப்பகுதியில் 3,349 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளடன் 13 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.