தாதாசாகேப் பால்கே ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும்!

நடிகர் விவேக், மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்து ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

“கடந்த 50 ஆண்டுகளாக இந்திய திரை மொழிகள் பலவற்றில் 42 ஆயிரம் பாடல்களுக்கும் மேலாக பாடி, ‘கின்னஸ்’ சாதனை செய்திருக்கிறார், மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இதுதவிர, பல ஆயிரம் பக்தி பாடல்களை பாடி ஆன்மிகத்துக்கும் சேவை செய்து இருக்கிறார்.

72 படங்களில் நடித்து இருக்கிறார். 46 படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். சிறந்த இந்திய குடிமகனாக திகழ்ந்து இருக்கிறார். இத்தனை சிறந்த இசை கலைஞருக்கு இந்திய சினிமாவின் மிக உயர்ந்த விருதான தாதாசாகேப் பால்கே விருது வழங்க வேண்டும் என்று தமிழ் திரையுலகம் சார்பாகவும், கோடிக்கணக்கான ரசிகர்கள் சார்பாகவும் வேண்டிக்கொள்கிறேன்.

——

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இறுதி சடங்கில் நடிகர் அர்ஜூன் கலந்துகொண்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் உருக்கமாக கூறியதாவது:-
என்னுடைய படங்களில் பல அற்புதமான பாடல்களை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியிருக்கிறார். நான் நடித்த ‘ஜெய்ஹிந்த்’ படத்தில் ‘தாயின் மணிக்கொடி… தாயின் மணிக்கொடி… சொல்லுது ஜெய்ஹிந்த்…’, என உணர்ச்சிப்பூர்வமான பாடலை உலகுக்கு அளித்தவர். ‘மலரே மவுனமா…’ பாடல் மூலம் லட்சக்கணக்கான ரசிகர்களை ஒரே நேரத்தில் ஈர்த்தவர். கலைச்சேவையில் மகத்தான சாதனை படைத்த அவருக்கு நிச்சயம் ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும். இது நான் மட்டுமல்ல, திரையுலகை சேர்ந்தவர்கள் அனைவரது வேண்டுகோளும் கூட…

—–

இந்நிலையில் தஞ்சையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இசையமைப்பாளரும் இயக்குனருமான கங்கை அமரன்,

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு பாரத ரத்னா வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன்.
பாரத ரத்னா விருது வழங்கும் குழுவில் நானும் ஒரு உறுப்பினர் என்பதால் அதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் என தெரிவித்துள்ளார்.

—–

என்னுடன் சக வேலை செய்யும் நண்பர்களில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் என்னுடைய உடன்பிறப்பு போன்றவர். பாலு என்னை அண்ணா என்று கூப்பிடும்போது, ஒரு அம்மா வயிற்றில் பிறந்தவர்கள் போல நான் உணர்வேன். நாங்கள் இருவரும் கூடப்பிறந்தவர்கள் போல பழகினோம். முன் ஜென்மத்தில் இருவரும் சகோதரர்களாக இருந்திருக்கலாம். பாலு முறையாக சங்கீதம் கற்கவில்லை என்றாலும், அவருடைய சங்கீத ஞானம் பெரியளவில் இருக்கும். பாட்டுப்பாடவும் செய்வார், உருவாக்கமும் செய்வார்.

சங்கராபரணம் படத்தில் முறையாக சங்கீதம் கற்றவர்களுக்கு இணையாக பாடியிருப்பார். அதை கேட்டால் யாரும் இவர் சங்கீதம் கற்கவில்லை என்று கூறமாட்டார்கள். 2 பேருடைய குடும்பமும் நெருங்கிய நண்பர்களாக இருந்தோம்.

சிகரம் படத்தில் ‘அகரம் இப்போ சிகரம் ஆச்சு…’, என்ற பாடலை பாடியபோது எனக்கு பரிசாக பாடினேன் என்று கூறினார். எனக்கு மிக பிடித்த பாடல்களில் அதுவும் ஒன்று. யாரையும் அவர் புண்படுத்த மாட்டார். கூட இருக்கும் எல்லோரையும் அன்பாகவும், ஆதரவாகவும் பார்த்துக்கொள்வார். கடைசியாக நாங்கள் இருவரும் பாடியது ஒரு சிங்கப்பூர் நிகழ்ச்சியில் தான். பாலு நோய் குணமாகி எப்போது வீடு திரும்புவார்? என நான் அமெரிக்காவில் காத்துக்கொண்டிருந்தேன். கொரோனா ஊரடங்கு காரணமாக நான் அமெரிக்காவில் இருந்து இங்கே வர அனுமதி கிடைக்கவில்லை.

என்னால் அவரை பார்க்க முடியவில்லை என ஒருபக்கம் வருத்தம் இருந்தது. அசையாமல் இருக்கும் பாலுவை பார்க்க என் மனம் தாங்காது. என்றும் அவர் நினைவுகளுடனே இருப்பேன்.

Related posts