நம்முடைய கலாச்சாரம், வெற்றி, காதலின் அங்கம் எஸ்பிபி

நம்முடைய கலாச்சாரம், வெற்றி, காதலின் அங்கம் எஸ்பிபி என்று ஏ.ஆர்.ரஹ்மான் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். பாடும் நிலா என்று அழைக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நேற்று (செப்.25) காலமானார். திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் எஸ்பிபி உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் எஸ்பிபி தொடர்பாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது யூடியூப் பக்கத்தில் ஒரு காணொலியை வெளியிட்டுள்ளார். இருவரும் இணைந்து நடத்திய இசை நிகழ்ச்சிகள், புகைப்படங்கள் ஆகியவற்றோடு எஸ்பிபி குறித்தும் ஏ.ஆர்.ரஹ்மான் பேசியுள்ளார். காணொலியில் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியதாவது: ''என்னுடைய ஆரம்பக் காலங்களில் மிகப்பெரிய அளவில் கொண்டாடியது 1982-83 இல் மியூசிக் அகாடமியில் எஸ்பிபியின் பிறந்த நாளைத்தான். அதைத் தொடர்ந்து 'ரோஜா' படத்துக்காக இருவரும் இணைந்தோம். 'காதல் ரோஜாவே' பாட்டைப் பாட வந்திருந்தார் எஸ்பிபி. அப்போது மிகச்சிறிய அளவில் இருந்த என்னுடைய ஸ்டுடியோவைப் பார்த்து, 'இங்கு இசையமைக்க முடியுமா?' என்று ஆச்சரியப்பட்டார். 'சினிமா…

தாதாசாகேப் பால்கே ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும்!

நடிகர் விவேக், மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்து ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- “கடந்த 50 ஆண்டுகளாக இந்திய திரை மொழிகள் பலவற்றில் 42 ஆயிரம் பாடல்களுக்கும் மேலாக பாடி, ‘கின்னஸ்’ சாதனை செய்திருக்கிறார், மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இதுதவிர, பல ஆயிரம் பக்தி பாடல்களை பாடி ஆன்மிகத்துக்கும் சேவை செய்து இருக்கிறார். 72 படங்களில் நடித்து இருக்கிறார். 46 படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். சிறந்த இந்திய குடிமகனாக திகழ்ந்து இருக்கிறார். இத்தனை சிறந்த இசை கலைஞருக்கு இந்திய சினிமாவின் மிக உயர்ந்த விருதான தாதாசாகேப் பால்கே விருது வழங்க வேண்டும் என்று தமிழ் திரையுலகம் சார்பாகவும், கோடிக்கணக்கான ரசிகர்கள் சார்பாகவும் வேண்டிக்கொள்கிறேன். ------ எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இறுதி சடங்கில் நடிகர் அர்ஜூன் கலந்துகொண்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் உருக்கமாக…

சிகிச்சை முடிந்து விஜயகாந்த் நாளை வீடு திரும்புவார்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த் நாளை வீடு திரும்புவார் என சுதிஷ் தெரிவித்துள்ளார். அரசியல் தலைவர்கள், நடிகர்கள் உள்ளிட்ட பிரபலங்களும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தும் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்.இதைத்தொடர்ந்து அவர் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த 22-ந் தேதி உறுதி செய்யப்பட்டது. இதனால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.விஜயகாந்தின் உடல்நிலை சீராக இருப்பதாக ஆஸ்பத்திரி தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.இந்த நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை முடிந்து நாளை வீடு திரும்புவார் என்று தேமுதிக துணைச் செயலாளர் சுதிஷ் தெரிவித்துள்ளார். இதனால், தேமுதிக தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்திய – இலங்கை பெளத்த உறைவை மேம்படுத்த 15 மில். டொலர் நிதி

இந்திய இலங்கை பௌத்த உறவை மேம்படுத்த 15 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி ஒதுக்கீட்டை வழங்கவுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையில் காணொளி மூலமான கலந்துரையாடல் ஒன்று நேற்று நடைபெற்றது. இதன்போது, இந்தியா எப்போதும் தனது அயல் நாடுகளுடனான கொள்கையில் முதலில் இலங்கைக்கே முன்னுரிமை வழங்கியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார். பல்லாயிரம் ஆண்டுகளாக புத்தபெருமான் போதனைகள் எமது நாகரிகங்களுக்கு வழிகாட்டுகின்றன. குஷிநகர் சர்வதேச விமான நிலையத்துக்கான முதல் சேவையில் இலங்கை பௌத்த யாத்திரிகர்களை வரவேற்க இந்தியா ஆவலுடனுள்ளது என்றும் அவர் இதன்போது தெரிவித்தர். இதன்போது பொதுத்தேர்தலில் பெற்ற வெற்றிக்கு இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவிற்கு தனது வாழ்த்துக்களை நரேந்திர மோடி தெரிவித்தார். மேலும் தேர்தலில் பெற்றுக்கொண்ட வெற்றி உங்கள் தலைமை மீதான நம்பிக்கையை…

சுரேஸ் பிறேமச்சந்திரன் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு விடுத்துள்ள கோரிக்கை

தமிழ் மக்களின் விடுதலைக்காக மரணித்துப் போனவர்களை அஞ்சலிக்கும் நிகழ்வுகளை அரசாங்கம் தடை செய்வதைக் கண்டித்தும் அஞ்சலிப்பது தமிழ் மக்களின் அடிப்படை உரிமை என்பதை வலியுறுத்தியும் நாளை நடைபெறவிருக்கும் ஹர்த்தாலில் அனைத்து தமிழ் முஸ்லிம் மக்களையும் கலந்து கொள்ளுமாறு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப்பேச்சாளர் சுரேஸ் பிறேமச்சந்திரின் கேட்டுக் கொண்டுள்ளார். ஊடக அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இதனை கோரிக்கையை விடுத்துள்ளார். தமிழ் மக்களின் விடுதலைக்காக லட்சக்கணக்கான பொதுமக்களும் பல்லாயிரக்கணக்கான போராளிகளும் தமது இன்னுயிரை தியாகம் செய்துள்ளார்கள். அவர்களுக்கான அஞ்சலி செலுத்துவதும் அவர்களை கௌரவபடுத்துவதும், அவர்களை நினைவு கூருவதும் ஒவ்வொரு தமிழனதும் கடமையாகும். இந்த அஞ்சலி என்பது ஐ.நா சாசனத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டதும் சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு செயற்பாடுமாகும். இலங்கையைப் பொறுத்தவரையில் இந்த அஞ்சலி நிகழ்வுகளை கடைப்பிடிப்பது என்பது ஒரு போராட்டமாகவே மாறிவருகின்றது. எந்த அரசாங்கம்…

இந்திய இலங்கை பிரதமருக்கு இடையே இருதரப்பு பேச்சுவார்ததை !

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கிடையே காணொளி மூலமான இருதரப்பு பேச்சுவார்த்தை நேற்று (26) இடம்பெற்றது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் பிரதமர் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டதை தொடர்ந்து காணொளி மூலம் நடத்தப்பட்ட முதலாவது கலந்துரையாடல் இதுவாகும். இந்த இருதரப்பு பேச்சுவார்த்தையின் ஆரம்பத்தின் போது இலங்கையின் புதிய பிரதமருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக இந்திய பிரதமர் கூறினார். நடைபெற்று முடிந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான கட்சி பெற்ற பாரிய வெற்றி, இந்திய பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி தான் பெற்ற வெற்றிக்கு சமமானது என்று தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பிற்கு இந்த தேர்தல் வெற்றி பெரிதும் உதவும் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டார். தேர்தல் வெற்றியின் பின்னர் இந்தியாவிற்கும்…