இளம்பெண்களை பாலியல் தொழிலாளியாக நடத்துவது பாலிவுட்டில் வாடிக்கை

வாழ்க்கையில் போராடும் நிலையிலுள்ள இளம்பெண்களை பாலிவுட்டில் பாலியல் தொழிலாளிகளாக நடத்துவது இயற்கையாகவே அவர்களிடம் உள்ளது என நடிகை கங்கனா அதிரடியாக கூறியுள்ளார்.

தமிழில் தேரோடும் வீதியிலே என்ற படத்தில் நாயகியாக நடித்தவர் பாயல் கோஷ். பின்னர் தெலுங்கில் இவர் நடித்த ஒசரவல்லி என்ற படம் ஹிட்டாக அதன்பின்னர் தெலுங்கில் அதிக படங்களில் நடிக்க தொடங்கினார். இவர் இந்தி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இந்தி திரைப்பட இயக்குனர் அனுராக் காஷ்யப் தன்னிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார் என சமீபத்தில் நடிகை பாயல் கோஷ் குற்றச்சாட்டு கூறியது இந்தி திரையுலகில் பரபரப்பு ஏற்படுத்தியது.

இதுபற்றி கோஷ் செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, இயக்குனர் அனுராக் சகித்து கொள்ள முடியாத வகையில் என்னிடம் நடந்து கொண்டார். அவரது செயல் எனக்கு மோசமான உணர்வை ஏற்படுத்தியது. என்ன நடந்ததோ அது நடந்திருக்க கூடாது என்று கூறினார்.

உங்களிடம் வேலை வேண்டும் என யாரேனும் அணுகினால், அதற்கு அவர்கள் எதற்கும் தயார் என்று பொருள் இல்லை என ஆவேசமுடன் கோஷ் கூறினார்.

அவரிடம், இதுபற்றி தற்பொழுது பேச வேண்டும் என ஏன் முடிவு செய்தீர்கள் என நிருபர்கள் கேட்டதற்கு, முன்பே கூற நான் முயன்றேன். ஆனால், என்னுடைய குடும்பமும், நண்பர்களும் என்னை தடுத்து விட்டனர். என்னுடைய குடும்பம் பாரம்பரியமிக்கது.

டுவிட்டரில் இதுபற்றி முன்பே பதிவிட்டேன். ஆனால், மேலிட அழுத்தத்தினால் அதனை அழிக்க கட்டாயப்படுத்தப்பட்டேன் என கூறியுள்ளார். எனினும், கோஷின் இந்த குற்றச்சாட்டுகளை அடிப்படையற்றது என கூறி காஷ்யப் மறுப்பு தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில், பாயலுக்கு ஆதரவாக நடிகை கங்கனா ரனாவத் தனது டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில், பாயல் கோஷ் என்ன கூறினாரோ அதனை செய்து கொண்டிருப்பதில் அதிக தகுதி வாய்ந்தவர் அனுராக் காஷ்யப். அவர் தனது அனைத்து துணைவர்களுக்கும் மோசடி செய்துள்ளார் என தெரிவித்து உள்ளார்.

காஷ்யப்பின் பாந்தம் படதயாரிப்பு நிறுவனம் முழுவதும் பெண் காமுகர்களை கொண்டது. பல மீடூ குற்றவாளிகளை கொண்டது.

எனக்கு தெரிந்தவரை காஷ்யப் பல பேரை திருமணம் முடித்திருந்தாலும், ஒரு சமயத்தில் ஒருவருடன் மணஉறவு கொள்ளும் நபராக காஷ்யப் தன்னை ஒப்பு கொண்டதேயில்லை.

பாயலுக்கு காஷ்யப் செய்தது என்பது புல்லிவுட்டில் வழக்கமான நடைமுறை. வாழ்க்கையில் போராடும் நிலையிலுள்ள இளம்பெண்களை பாலியல் தொழிலாளிகளாக நடத்துவது இயற்கையாகவே அவர்களிடம் உள்ளது என அதிரடியாக தெரிவித்து உள்ளார்.

Related posts