விஷால், சிவகார்த்திகேயன் படங்கள் ஓ.டி.டி.யில் ரிலீஸ்?

தீபாவளி பண்டிகையில் விஷால், சிவகார்த்திகேயன் படங்கள் ஓ.டி.டி.யில் ரிலீஸ்?

கொரோனா பரவலால் பல மாதங்களாக தியேட்டர்கள் மூடிக்கிடக்கின்றன. இதனால் புதிய படங்களை நேரடியாக இணையதளமான ஓ.டி.டி.யில் ரிலீஸ் செய்ய தொடங்கி உள்ளனர். ஏற்கனவே ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேசின் பெண்குயின், வரலட்சுமி நடித்துள்ள டேனி மற்றும் லாக்கப் உள்ளிட்ட பல படங்கள் ஓ.டி.டி.யில் வெளிவந்தன. சூர்யா நடித்துள்ள சூரரை போற்று படம் அடுத்த மாதம் 30-ந்தேதி ஓ.டி.டி.யில் வெளியாகிறது.

விஜய்சேதுபதி நடித்துள்ள க.பெ.ரணசிங்கம் படமும் அடுத்த மாதம் 2-ந்தேதி ஓ.டி.டி. தளத்தில் வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர். இந்த நிலையில் தீபாவளி பண்டிகையில் விஷாலின் சக்ரா மற்றும் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் ஆகிய படங்களை ஓ.டி.டி. தளத்தில் வெளியிட பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து விஷால் அளித்துள்ள பேட்டியில், “சக்ரா படத்தை ஓ.டி.டி.யில் வெளியிட பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். தீபாவளிக்கு நிச்சயம் சக்ரா படம் வெளியாகும்” என்றார். சிவகார்த்திகேயனின் டாக்டர் பட வேலைகளும் இறுதிகட்டத்தில் உள்ளன. தியேட்டர்களை திறந்தாலும் ரசிகர்கள் அச்சமின்றி படம் பார்க்க வருவார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது என்றும் எனவேதான் மாஸ்டர் படத்தை ஓ.டி.டி.யில் வெளியிடலாமா என்று யோசிப்பதாக கூறப்படுகிறது. இதுபோல் காஞ்சனா படத்தின் இந்தி ரீமேக்காக அக்‌ஷய்குமார் நடிப்பிலும் லாரன்ஸ் இயக்கத்திலும் தயாராகி உள்ள லட்சுமி பாம்ப் படமும் தீபாவளிக்கு ஓ.டி.டி.யில் வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர்.

Related posts