போதை பொருள் பயன்படுத்தும் நடிகர், நடிகைகள் பட்டியலை

பெயர்களை வெளியிட்டு தமிழ், தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி.
பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்த நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பெயர்களை வெளியிட்டு தமிழ், தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி.
ஐதராபாத்தில் அரை நிர்வாண போராட்டமும் நடத்தினார். அவரது வாழ்க்கை தமிழில் ரெட்டி டைரி என்ற பெயரில் படமாகி வருகிறது.
இந்தி, கன்னட பட உலகில் போதை பொருட்கள் பயன்படுத்தும் குற்றச்சாட்டுகள் எழுந்து நடிகைகள் ரியா சக்கரவர்த்தி, ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் கைதாகி உள்ளனர். இந்த நிலையில் தெலுங்கு நடிகர்கள் போதை பொருள் பயன்படுத்துவதாக ஸ்ரீரெட்டி புகார் கூறியுள்ளார்.
இதுகுறித்து முகநூல் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “திரையுலகில் உள்ள முன்னணி நடிகர்கள் வீடுகளில் நடக்கும் விருந்துகளில் போதை பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன.
அது இல்லாமல் பார்ட்டிகளே இல்லை. வாரிசு நடிகர்கள் பங்கேற்கும் நடன விருந்துகளிலும் போதை பொருள் புழக்கம் உள்ளது. ஒழுக்க கேடுகளும் நடக்கின்றன. சிலரை கைது செய்து விசாரித்தால் உண்மைகள் வெளியே வரும்.
தெலுங்கானா அரசு எனக்கு பாதுகாப்பு அளித்தால் போதை பொருள் பயன்படுத்தும் நடிகர், நடிகைகள் பட்டியலை வெளியிட தயாராக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார். இது தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related posts