படுக்கையை பகிர்ந்தால்தான் வாய்ப்பு ஜெயாபச்சனுக்கு கங்கனா பதிலடி

இந்தி பட உலகில் போதை பொருள் புழங்குவதாக நடிகை கங்கனா ரணாவத் பரபரப்பு தகவலை வெளியிட்டு உள்ளார். இதையடுத்து அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. பிரபல இந்தி நடிகை ஊர்மிளா கண்டித்தார். அமிதாப்பச்சனின் மனைவியும் நடிகையுமான ஜெயாபச்சனும் கங்கனாவை மறைமுகமாக கண்டித்துள்ளார். அவர் கூறும்போது, “ஒரு சிலருடைய தவறுக்காக ஒட்டுமொத்தமாக இந்தி திரையுலகின் பெயரை கெடுக்க கூடாது. திரைத்துறைதான் பலருக்கு வேலை வாய்ப்பை அளித்துள்ளது” என்றார்.

அவருக்கு பதில் அளிக்கும் வகையில் கங்கனா டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “ஜெயாபச்சன் அவர்களே எந்த வாய்ப்பை பற்றி குறிப்பிட்டு சொல்கிறீர்கள்? கதாநாயகனுடன் படுக்கையை பகிர்ந்த பிறகு இரண்டு நிமிடங்கள் நடிக்கவும் ஒரு பாடல் காட்சியில் காதல் செய்யவும் தருவதாக சொல்லும் வாய்ப்பை பற்றி பேசுகிறீர்களா? கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளில் நடித்து திரைப்படத்துறைக்கு பெண்ணியத்தை நான்தான் கற்றுக்கொடுத்து இருக்கிறேன். நீங்கள் அல்ல” என்று கூறியுள்ளார். இந்த மோதல் பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related posts