நடிகர் ராமராஜனுக்கு கொரோனா தொற்று

நடிகர் ராமராஜனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா தொற்றுக்கு நடிகர், நடிகைகளும் சிக்கி வருகிறார்கள். ஏற்கனவே நடிகர்கள் அமிதாப்பச்சன், விஷால், அபிஷேக் பச்சன், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், நிக்கி கல்ராணி, ஐஸ்வர்யா அர்ஜூன், சுமலதா. இயக்குனர் ராஜமவுலி உள்ளிட்ட பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு குணமாகி மீண்டனர்.

இந்நிலையில், நடிகர் ராமராஜனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா உறுதியானதை அடுத்து அவர் கிண்டியில் உள்ள மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

லேசான அறிகுறியுடன் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவர், அதிமுக-வின் தலைமை கழக பேச்சாளராக பொறுப்பு வகித்தார். 1998ல் திருச்செந்தூர் மக்களவை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts